கர்ணன் சாபம்

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கர்ணன் சாபம்

Karthick
கர்ணனின் பூமாதேவி சாபம் பற்றி குற முடியுமா ?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சாபம்

Ramesh
வணக்கம் திரு.கார்த்திக் அவர்களே

கர்ணனுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவன் தேர் சக்கரத்தை பூமாதேவி விழுங்கி விடுவாள் என்று ஒரு பிராமணர் கொடுத்த சாபத்தினால் தான் அவன் தேர் சக்கரம் பூமியில் சிக்கியது. மற்றபடி பூமாதேவி கர்ணனை சபிததாக நான் எதுவும் கேள்விப்படவில்லை.

        கர்ணன் பரசுராமரிடம் கல்விகற்ற சமயத்தில் ஒரு நாள் அவன் தற்செயலாக ஒரு பிராம்மணரின் யாக பசுவை கொன்றுவிட்டான். அந்த பசுவும் கர்ணன் அம்பு விட்டதை கவனிக்காமல் இறந்தது. இதனால் கோபமடைந்த பிராமணர் கர்ணனை பார்த்து “ நீ உன் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் உனக்கு சமமான எதிரியுடன் சண்டையிடும் போது பூமாதேவி உன் தேர் சக்கரத்தை விழுங்குவாள், மேலும் எவ்வாறு அந்த பசு நீ அம்பு விடுவது தெரியாமல் இறந்ததோ அதே போன்று நீயும் கவனக்குறைவாக இருக்கும்போது உனக்கு சமமான எதிரி உன் தலையை துண்டித்து கொல்வான் “ என்று சபித்தார். இந்த தகவல் சாந்தி பர்வம் இரண்டாம் பகுதியில் உள்ளது. இதன் காரணமாகவே கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் சிக்கியது, அதே போல் அவன் தேர் சக்கரத்தை இழுக்க முயலும்போது அர்ஜுனனும் கண்ணனின் தூண்டுதலால் அவனை கொல்ல வேண்டியதாயிற்று.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சாபம்

சதீஷ் சண்முகம்
வணக்கம்.

கர்ணனின் கதாபாத்திரத்தை என்னவென்று சொல்ல.. அவன் வாழ்வே  பல சாபங்களால் நிறைந்தது.