மகாபாரத நிகழ்வு

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மகாபாரத நிகழ்வு

சதீஷ் சண்முகம்
வணக்கம்.

மகாபாரத நிகழ்வு விதியால் நிர்ணைக்கபட்டதா ? அதர்மத்தின் விளைவா ?

விதி, அதர்மம் இவ்விரண்டு உள்ள வேறுபாடு என்ன ?

இதனடிப்படையில் விவாதிப்போம்.

நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மகாபாரத நிகழ்வு

சதீஷ் சண்முகம்
வணக்கம்.

விதியின் வலிமை கதை சுருக்கம்.

முன்பொருகாலத்தில் இந்திரனின் மனைவி ஒரு கிளியை வளர்த்தார். உயிராய் பிறந்த அணைத்து ஜீவரசிகளுக்கும் மரணமுண்டு என்பதை அறிந்த அவள் கிளியின் மரணத்தை எண்ணி அச்சம்முண்டாள். இதை குறித்து இந்திரனிடம் முறையிட்டாள். அவள் மீதுள்ள அன்பால் இந்திரன் படைக்கும் கடவுளான பிரம்மாவை அணுகினார். படைத்தல் என்னுடைய தொழிலாகும், நாம் விஷ்ணுவை அணுகி ஆலோசிக்கலாம் வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்றார்.

விஷ்ணுவிடம் முறையிட்டபொழுது அவரோ, உயிரினங்களை காக்கவே  
என்னால் முடியும், அழிக்கும் தொழில் சிவபெருமனுடையது. வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் அவரிடம் சென்று முறையிடலாம் என்று அனைவரும் சிவபெருமானிடம் சென்றனர்.

சிவனோ, அழித்தல் நான் மேற்கொண்ட தொழில். ஆனால் ஜீவராசிகளின் உயிரை பறிக்கும் பணி எமதர்மராஜன் வசமுள்ளது. வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் அவரிடம் சென்று முறையிடுவோம் என இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர் எமலோகம் சென்றனர்.

எமதர்மனிடம் இவ்விவரத்தை தெரிவித்த பொழுது, ஜீவனாய் பிறந்த அனைத்து உயிரினங்களின் பாவங்களை கண்ணகிட்டு அதற்குண்டான மரண விதியை அவரவர்கென்று ஒரு ஓலைச்சுவடியில் எழுதி ஓர் அறையில் நூலில் கட்டி தொங்கவிடப்படும். எப்போது அந்நூல் அறுந்து ஓலைச்சுவடி கிழே
விழுகிறதோ அப்பொழுது அந்த ஜீவன் மரணிக்கிறது. வாருங்கள் நானும் வருகிறேன் அவ்வறையை திறந்து அக்கிளின் மரணத்தை தடுப்போம்.

இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமன் அனைவரும் சென்று அந்த அறையின் கதவை திறந்து அறைன்னுள் பிரவேசிக்கையில் , அக்கிளின் ஓலைச்சுவடி நூல் அறுந்து கிழே விழுந்து கிளி மரணித்தது. எமதர்மராஜன் அறுந்து விழுந்த ஓலைச்சுவடியை எடுத்து படிக்கையில் " எக்கணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரும் ஒன்றாக இவ்வறையில் பிரவேசிக்கர்களோ அக்கணமே கிளிக்கு மரணம் சம்பவிக்கட்டும் ". என்று குறிப்பிட்டிருந்தது.

இக்கதையை எங்கோ படித்த ஞாபகம். உண்மையா என்று தெரியாது. ஆனால்,
 
விதியை மதியால் வெல்லலாம் - இச்சொல்லை பெரியோர் சொல்ல கேள்விபட்டிருப்போம்  ஒருவேளை இச்சொல் குற்றின்படி மகாபாரத நிகழ்வுகளை ஸ்ரீ கிருஷ்ணர் மாற்றி அமைதிருக்கலாம்.

( எழுத்து பிழையிருப்பின் மன்னிக்கவும் )

நன்றி.