சகுனி

classic Classic list List threaded Threaded
14 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

சகுனி

NANDHA
பரத போர் நடக்க சகுனி ஒரு கரணம் ஆனா அவர பத்தி எங்கயும் ந தப்பா கேள்வி படவில்லை.. ஏன் ?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

தாமரை
Administrator
அபிப்பிராய பேதங்களும், சந்தேகங்களும் உண்டாகும் போது மட்டுமே விவாதங்கள் தொடங்குகின்றன.

சகுனியைப் பற்றிய  இப்படிப்பட்ட விஷயங்கள் குறைவு. அதனால் விவாதங்கள் அதிகம் வரவில்லை. சகுனி என பலரை திட்டுவதைக் கேள்விபட்டிருக்க வாய்ப்பு உண்டு.

வேண்டுமானல் நீங்களே கேள்விகளுடன் தொடங்கலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
பீஷ்மர் காந்தாரிய கவர அஹ கந்தர தேசம் மெது படை எடுத்து பொன்னது சரியாய் அஹ.சகுனி தன சகோதரி நெலமைய கண்டு கோவப்பட்டு வது தவறா அஹ
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

Ramesh
காந்தாரி பீஷ்மரின் மிரட்டலால் திருதிராஷ்டிரனை மணக்கவில்லை.
பார்க்க ஆதி பர்வம் 110வது பகுதி :    
Vaisampayana continued, 'Soon after Bhishma heard from the Brahmanas that Gandhari, the amiable daughter of Suvala, having worshipped Hara (Siva) had obtained from the deity the boon that she should have a century of sons. Bhishma, the grandfather of the Kurus, having heard this, sent messengers unto the king of Gandhara. King Suvala at first hesitated on account of the blindness of the bridegroom, but taking into consideration the blood of the Kurus, their fame and behaviour, he gave his virtuous daughter unto Dhritarashtra and the chaste Gandhari hearing that Dhritarashtra was blind and that her parents had consented to marry her to him, from love and respect for her future husband, blindfolded her own eyes. Sakuni, the son of Suvala, bringing unto the Kurus his sister endued with youth and beauty, formally gave her away unto Dhritarashtra. And Gandhari was received with great respect and the nuptials were celebrated with great pomp under Bhishma's directions. And the heroic Sakuni, after having bestowed his sister along with many valuable robes, and having received Bhishma's adorations, returned to his own city.
விரைவில் பீஷ்மர், சுபலனின் இனிய மகள் காந்தாரி ஹரனிடம் (சிவனிடம்) இருந்து நூறு மகன்கைளப் பெறுவதற்கான வரத்தைப் பெற்றாள் என்பதை அந்தணர்கள் மூலம் அறிந்தார். குருக்களின் பாட்டனானான பீஷ்மர் இதைக் கேட்டு, காந்தார மன்னனிடம் தனது தூதுவர்கைள அனுப்பினார். முதலில் மன்னன் சுபலன் குருட்டு மாப்பிள்ளைக்கு
{திருதராஷ்டிரனுக்குத்} தன் மகைள {காந்தாரியைக்} கொடுக்கத் தயங்கினான். பின்பு, குருக்களின் புகைழயும், நடத்தைகைளயும், அவர்களது இரத்தத்தையும் உணர்ந்து, தனது அறம் சார்ந்த மகைள திருதராஷ்டிரனுக்குக் கொடுக்க முடிவு செய்தான். அந்தக் கற்புக்கரசியான காந்தாரி, திருதராஷ்டிரன் குருடன் என்பைதக் கேள்விப்பட்டாள். தனக்கு அவைன {திருதராஷ்டிரைன} மணமுடிக்க தனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர் என்பைதயறிந்து, தனது எதிர்காலக் கணவன் மீதிருந்த அன்பு மற்றும் மரியாதையால் தனது கண்கைளக் கட்டிக் கொண்டாள். சுபலனின் மகன் சகுனி, இளைமயுடனும் அழகுடனும் இருந்த தனது தங்கைய {காந்தாரியை} குருக்களிடம் அழைத்து வந்து, முறைப்படி திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான். காந்தாரி பெரும் மதிப்புடன் வரேவற்கப்பட்டாள். அவர்களது திருமணம் பீஷ்மரின் வழிகாட்டுதல்படி பெரும் ஆடம்பரத்தோடு நடத்தப்பட்டது. அந்த வீரன் சகுனி, பல மதிப்புமிக்க பொருட்களுடன் தனது தங்கையை {காந்தாரியை} அளித்து, பீஷ்மரின் வாழ்த்துகைளப் பெற்று, தனது நகருக்குத் திரும்பிச் சென்றான்.  

(மேலே நான் குறிபிட்டுள்ள செய்தி கங்குலியின் மொழிபெயர்ப்பு பதிப்பில் 110வது பகுதியாக உள்ளது, அனால் மூலத்தில் இது 103வது பகுதியில் ஸ்லோகம் ஒன்பது முதல் பதினேழு வரை உள்ளது).

பீஷ்மர் காந்தார தேசத்தின் மீது படையெடுத்த தாகவும், தங்கையின் நிலை கண்டு சகுனி கோபமுற்றதாகவும் நீங்கள் குறிபிட்டது வியாசருடைய மூலத்தில் இல்லை. அவை தொலைகாட்சி தொடரில் கற்பனையாக காட்டப்பட்டவை. மேலும் இதில் சகுனி தனது தங்கையை மனமுவந்து திருமணம் செய்துவைத்ததாகவே தெரிகிறது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
கிருஷ்ணர்  பாண்டவர்  கு சூழ்ச்சி பன்னிவர் அபோ சகுனி கௌரவர்களுகு சூழ்ச்சி புரிந்தது சரி தன என்பது என் கருத்து.. அபோ சகுனி தேயவர் இல்லை தன அஹ. கடைசி  நாள் போரு வரைக்கும் இர்ருந்த சகுனிஉம ஒரு வீரன் தன அளவ
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
In reply to this post by Ramesh
NANDRI RAMESH
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
In reply to this post by Ramesh
தொலைகாட்சி தொடரி வருவது போல அஹ சகுனிகு ஒரு கால் ஊனம் அஹ
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

Ramesh
நன்றி திரு.நந்தா அவர்களே

சகுனி ஊனம் அல்ல என்பதிலும், அவன் ஒரு வீரன் என்பதிலும் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தற்பொழுது இதே கேள்வியை நான் தங்களிடம் திருப்பி கேட்கிறேன்.
சகுனி கௌரவர்களுக்காக பல சூழ்ச்சிகள் செய்யும் போது கிருஷ்ணன் பண்டவர்களுக்காக சில சூழ்ச்சிகள் செய்வது தவறா?

மகாபாரத யுத்தத்திற்கு முன்பு பாண்டவர்கள் எந்த சூழ்ச்சியாவது செய்தார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? அனால் சகுனி துவக்கம் முதலே பல சூழ்ச்சிகள் செய்தது அனைவரும் அறிந்ததே.

பீமனின் சிறுவயதில் துரியோதனன் மற்றும் கர்ணனோடு சேர்ந்து அவனுக்கு விஷம் கொடுத்து கொல்லபார்த்தது சூழ்ச்சி இல்லையா?

பாண்டவர்களை வாரனாவதம் அனுப்பி அங்கே அவர்களை அரக்கு மாளிகையில் வைத்து எரிக்க திட்டம் தீட்டியது சூழ்ச்சி இல்லையா?

சூதாட்டத்திலும் சகுனி சூழ்ச்சி செய்து தானே ஜெயித்தான் ?

சொல்லப்போனால் இந்த யுத்தமே சூழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது தான்,
பாண்டவர்களின் அஞ்ஞானவாசம் முடிந்ததும் துரியோதனன் அவர்களுக்கு இந்திரபிரஸ்தத்தை கொடுத்திருக்க வேண்டும். பாண்டவர்களை இரண்டாம் முறை சூதாட அழைக்கும் போதே தோற்பவர்களை அஞ்ஞான வாசத்தில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு நாடு திருப்பி அளிக்கப்படும் இது உறுதி என்று சகுனி சொன்ன பின் தான் சூதாட்டமே ஆரம்பிக்கப்பட்டது, பார்க்க சபா பர்வம் பகுதி 75. அனால் சகுனியோ, துரியோதனனோ சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. வேறு வழியில்லாமல் தான் பாண்டவர்கள் இந்த யுத்தத்தை நடத்த வேண்டியதாயிற்று. ஆக இந்த யுத்தம் துவங்கியதே கௌரவர்கள் மற்றும் சகுனியின் சூழ்ச்சியால் தானே?

சரி யுத்தம் நிச்சயமான பின்பாவது சூழ்ச்சி செய்யாமல் இருந்தானா என்றால் அதுவும் இல்லை. பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியனையும் அவனது இரு அக்ரோணி சேனைகளையும் சூழ்ச்சியால் தானே அவர்கள் பக்கம் இழுத்து கொண்டான். பாரத யுத்தம் ஆரம்பிக்கும் போது பாண்டவர்கள் பக்கம் ஏழு அக்ரோணி சேனையும் கௌரவர்கள் பக்கம் பதினோரு அக்ரோணி சேனையும் இருந்தன. சகுனி மட்டும் சூழ்ச்சி செய்யாமல் இருந்தால் கிருஷ்ணனின் சேனையும், சல்லியனின் சேனையும், சல்லியனும் பாண்டவர்கள் பக்கம் இருந்திருப்பர். பாண்டவர் படை மேலும் பலமுடையதாய் இருந்திருக்கும். இப்படி சூழ்ச்சி செய்து பாண்டவர்களின் படைபலத்தை குறைத்தது மட்டும் சரியா?

இப்படி பல விஷயங்களை சொல்லிகொண்டே போகலாம் அனால் வியாசர் இதற்கு ஒரு வரியில் பதில் அளித்து விட்டார்.

Deprived of his head by the son of Pandu with that gold-decked arrow of great sharpness and splendour like the sun's, Subala's son fell down on the earth in that battle. Indeed, the son of Pandu, filled with rage, struck off that head which was the root of the evil policy of the Kurus, with that impetuous shaft winged with gold and whetted on stone.

பதினெட்டாம் நாள் போரில் சகாதேவன் சகுனியின் தலையை கூறிய பானத்தால் அறுத்து கொன்றான். அப்பொழுது கௌரவர்களின் மொத்த தீய செயல்களின் வேராக இருந்தவன் தலை அறுக்கப்பட்டது என்கிறார் வியாசர். (சால்ய பர்வம் பகுதி 28)

ஆகவே சகுனி தீயவன் என்பதும், நடந்த அனைத்து குற்றங்களுக்கும் சகுனியும் ஒரு மூல காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சகுனி சூழ்ச்சி செய்யாமல் இருந்தால் இந்த யுத்தமும் இருந்திருக்காது, கிருஷ்ணனுக்கும் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
நன்றி ரமேஷ் அவர்களே.. ஆனால் பீமன் சிறு வையத்தில விஷம் குடுக்கும் பொது கர்ணன் இல்லை அளவ
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

Ramesh
வணக்கம் திரு.நந்தா அவர்களே,

        நான் ஏற்கனவே குறிபிட்டபடி தொலைகாட்சி மூலமாகவும், செவிவழியாகவும் நாம் கேள்விப்படும் பல விஷயங்கள் மூல மகாபாரதத்திற்கு புறம்பாகவே உள்ளது, அவற்றில் கர்ணன் வரலாறும் ஒன்று. அவ்வளவு ஏன் மகாபாரதத்தின் முதல் தமிழ் மொழி பெயர்ப்பான  
வில்லிபாரதத்தில் கூட ஏகப்பட்ட இடைசொருகல் உண்டு. குறிப்பாக கர்ணனின் கதையில் வில்லிபுத்துரார் நிறைய மாற்றங்களை செய்து இருக்கிறார்.

        மூல பாரதத்தில் கர்ணனும், துரியோதனனும், சிறுவயதில் இருந்தே நட்போடு இருந்ததாகவே தெரிகிறது. பீமனுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் கர்ணன், துரியோதனன் மற்றும் சகுனி மூவரும் சேர்த்து திட்டம் போட்டதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

         இன்னொன்று துரோணர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், ஆயுதகல்வியை கற்றுக்கொடுக்கும்போது கர்ணன், சிந்துராஜன் ஜெயத்ரதன் உள்ளிட்டோருக்கும் சேர்த்துதான் கற்றுக்கொடுத்தார். அப்பொழுது கௌரவர்களோடு சேர்ந்து கர்ணனும் துரோணரிடம் சீடனாக இருந்தான். அனால் இந்த விஷயம் தொலைகாட்சியில் கட்டாததால் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
மூல மகாபாரதம் தமிழ் மொழில கிடைக்கும் அஹ நண்பர் ரமேஷ் அவர்களே...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

Ramesh
வணக்கம் திரு.நந்தா அவர்களே,

                        என்னிடம் மூல மகாபாரத்தின் எந்த தமிழ் பதிப்பும் இல்லை. அதை நீங்கள் இந்த வலை தளத்திலேயே படித்து தெரிந்து கொள்ளலாம், வேண்டுமானால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மூல மகாபாரதம் சமஸ்கிருத மொழியில் ரிஷி வியாசரால் எழுதப்பட்டது.
இதற்கு சில பதிப்புகள் இருப்பதாக சொல்ல பட்டாலும், எனக்கு தெரிந்து சமஸ்கிருதத்தின் நேரடி மொழி பெயர்ப்பாக அதுவும் உரைநடை பாணியில் இருப்பது கிசாரி மோகன் கங்குலி மற்றும் கும்பகோணம் ம.வீ.ராமானுஜாசாரியார் ஆகியோரது பதிப்பே ஆகும், இந்த இணையத்தில் கூட உயர்திரு.அருட்செல்வன் பேரரசன் அவர்கள் கங்குலின் பதிப்பையே தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

மேலும் ம.வீ.ராமானுஜாசாரியார் என்பவர் மகாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். உங்களுக்கு அதை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தால் archive.org  என்கிற வலைத்தளத்தில் அதை படித்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பதிப்பு நூறு வருடங்களுக்கு முந்தய தமிழில் இருப்பதால் அதை தாங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம். மேலும் திரு.அருட்செல்வன் பேரரசன் அவர்களுடைய மொழிபெயர்ப்பு உங்களுக்கு படிக்க சுலபமாகவும், எளிதில் புரிந்துகொள்ள கூடியதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

NANDHA
மிக்க நன்றி ரமேஷ் அவர்களே இப்போது தான் திரு.அருட்செல்வன் பேரரசன் மொழிபெயர்த்து வரும் மகாபாரத்தை படிக்கச் ஆரம்பித்து உள்ளேன்.. கர்ணன் சிறு வயதிலே அப்படி ஒரு துரோக செயல் செய்தவன் ஆனால் இன்று அளவும் எப்படி கார்னை நல்லவன் ஆகவே ஆரிய படுகிறான்..
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சகுனி

Ramesh
வணக்கம் திரு.நந்தா அவர்களே

       பீமனுக்கு விஷம் கொடுத்ததில் கர்ணனுக்கும் பங்கு இருந்ததா என்பதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. காரணம் பதிப்பில் துரியோதனன் விஷம் கொடுத்த போது கர்ணனை பற்றிய குறிப்பு அப்போது இல்லை. ஆனால் பீமன் பிழைத்த பிறகு  துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி பாண்டவர்களை கொள்ள மேலும் பல சூழ்சிகளை செய்தனர், இருப்பினும் பாண்டவர்கள் விதுரரின் துணையோடு அவற்றை முறியடித்து, அதே சமயம் கௌரவர்களின் சூழ்சிகளை வெளியில் சொல்லாமலும் பொறுமையாக இருந்தனர் என்றே குறிப்பிடபட்டுள்ளது.

// பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் கூடி பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர். //

    இது பற்றி பீமனுக்கு கர்ணன் விஷம் கொடுத்தானா என்கிற தலைப்பில் தனி விவாததிரி இருக்கிறது,  தாங்கள் அதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். விஷம் கொடுத்ததில் கர்ணனுக்கு பங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் பிறகு கௌரவர்கள் பாண்டவர்களை கொல்ல செய்த சூழ்ச்சி அனைத்திலும் அவனுக்கு பங்கு இருந்தது என்பது நிச்சயமான உண்மை.

       மேலும் கர்ணனை என்னால் துரியன், சகுனி அளவுக்கு தீயவனாகவும் கருத முடியவில்லை, அதே சமயம் அர்ஜுனன், தர்மன் அளவிற்கு மேன்மையானவனாகவும் கருத முடியவில்லை. கர்ணன் பற்றியும் அவனது செயல்களை பற்றியும் நான் எனது கருத்துக்களை வஞ்சகன் கர்ணனா அல்லது கண்ணனா என்ற விவாததிரியில் இன்னும் சில நாட்களில் பதிவு செய்யலாம்  இருக்கிறேன். தற்பொழுது எனது பணி சுமையின் காரணமாக என்னால் அதிக நேரம் இணையத்தில் இருக்க முடியவில்லை. கர்ணனை பற்றி எனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன் கங்குலின் பதிப்பையும், ராமானுஜாசாரியாரின் பதிப்பையும் நன்கு படித்து பார்க்க வேண்டுமாதலால் சில நாட்கள் கழித்தே என்னால் பதிவு செய்யமுடியும்.