அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?

Divya
        மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் ஆண்கள் (கிருஷ்ணன் உள்பட) ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களை மணம் செய்வது வழக்கமாய் உள்ளது. நம் தற்போதைய தமிழ் சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சத்திய  வாக்காக உள்ளது. அதுவே தர்மமும் ஆகும். ஆனால் எதற்காக அக்கால மன்னர்களும் கடவுளின் அவதாரங்களும் ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவியரை மணம் செய்து கொண்டனர்? இதுமட்டுமின்றி அந்தணர்கள் ஒரு பெண்ணை கண்டதும் மயங்குவது போன்ற நிகழ்வுகள் நிகழ காரணம் என்ன? அவர்கள் கடவுளை மட்டுமே நினைத்து வாழ்பவர்கள் அல்லவா?

        சரி, இவையனதினை காட்டிலும் அறமற்ற ஒன்றாக நான் கருதுவது பெண்கள் மது அருந்துவது. கிருஷ்ணன், அர்ஜுனன், திரௌபதி, சுபத்திரை ஆகியோர் ஓய்வு நாட்களை கழிக்க கானகம் சென்றதாகவும், அங்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் வேற்று மங்கையரின் நடுவில் விளையாடியதாகவும், திரௌபதி மற்றும் சுபத்திரை மதுவின் மயக்கத்தில் பரிசுகளை வாரி வழங்கியதாகவும் உள்ளது.

        இவ்வாறான செய்திகளால் தருமத்தில் சிறந்த கிருஷ்ணன், அர்ஜுனன் மீதும் பத்தினிகலான திரௌபதி, சுபத்திரை மீதும் கோபம் வருகிறது. இக்கால நியதிகளுக்கு உட்பட்டு வாழும் என்போன்றோருக்கு இவையெல்லாம் தவறாக தோன்றுகிறது.. அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள தர்ம காரணம் ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொள்ள விளைகிறேன்.

         எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?

தாமரை
Administrator
அன்று பல மனைவியரை மணந்ததிற்கு காரணங்கள்

1. சந்ததி விருத்தி.

அக்காலங்களில் இளம் குழந்தைகள் மரணம் அடைவது சகஜமான ஒன்று. அதே போல் மருத்துவ வசதி குறைந்திருந்ததால் மனைவி பிரசவத்தில் இறப்பதும் அதிகம். அதனால் சந்ததி வளரவேண்டுமெனில் அதிக குழந்தைகளை பெற்றாக வேண்டும்.

பிறவி எடுப்பதே பிறருக்கு உதவத்தான் என்பது சனாதன தர்மக் கோட்பாடு. இல்லறம் என்பதே இந்த தர்மத்தை செய்ய உதவும் வாழ்க்கை தர்மம். தான் மட்டும் பிறருக்கு உதவவுவதில்லை தர்மம் என்பது. வழி வழியாக அந்த தர்மத்தை தொடர வைக்க வேண்டும். அதனால்தான் பிள்ளைகள் இல்லாதோர் புத் என்னும் நரகத்துக்கு ஆட்படுவர் எனச் சொல்லி வைத்தனர்.


2. ஆண்களின் எண்ணிக்கை குறைவு.

போர், வேட்டையாடுதல், தொழில் செய்யும்பொழுது அகாலமாக மரணமடைதல் இத்யாதி காரணங்களால் ஆண்கள் அதிகம் மரணித்துக் கொண்டே இருப்பர். அதனால் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

3. இனக்கவர்ச்சி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இனக்கவர்ச்சி இயல்பானது. அறநெறி என்பது இயல்பான இருவருக்கும் இடையிலான இனக்கவர்ச்சியை ஒப்புக் கொள்ளுதலே ஆகும். வலுக்கட்டாயமாக பிடிக்காத ஒருவரை அடைதலே அதர்மம் எனச் சொல்லப்பட்டது.

இன்று அன்று போல் ஆண்களின் எண்ணிக்கை இல்லை. பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம். குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து விட்டது. அன்று அவ்வளவு ஏழ்மையில் குழந்தைகளை எளிதாக வளர்க்க முடிந்தது, இன்று பேராசை, ஆணவம், ஆடம்பரம் காரணமாக சில குழந்தைகளுக்கு மேல் வளர்க்க இயல்வதில்லை. பலபேருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆசை இல்லை.

பெண்களை அடக்குதல் என்பது கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மட்டுமே இங்கே இருக்கிறது. அது நம் கலாச்சாரத்தை சார்ந்தது அல்ல.

இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கம் இல்லாவிட்டால் பல ஏழை ஆண்களுக்கு திருமணமே ஆகாமல் அவர்களின் வம்சமே பூண்டற்று போய்விடும். அன்று ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளா விட்டால் பல பெண்களுக்கு திருமணமே ஆகி இருக்காது. வலிமை மிக்க சந்ததிகளை பெற்றிருக்க மாட்டார்கள். ஆக திருமணம் என்பதின் 5 ஒப்புக் கொள்ளப்பட்ட வகைகள் அன்றும் சரி இன்றும் சரி ஒன்றாகவே இருக்கிறது, மிச்சம் இரு திருமண வகைகள் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.


""
அடுத்ததாக மது அருந்தி கும்மாளம் போட்டதாக நீங்கள் சொல்லி இருப்பது.

இதை நீங்கள் பாகவத புராணத்தில் படித்தீர்களா? மகாபாரதத்தில் படித்தீர்களா? இல்லை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஏதேனும் ஒருவர் எழுதிய புத்தகத்தில் படித்தீர்களா?

காரணமிருக்கிறது.

பாகவதத்தில்தான் இப்படி ஒரு காட்சி வரும்.

1. யாருமே கள் அருந்தி தன் இயல்பு நிலையிலிருந்து மாறி இருக்க மாட்டார்கள். அவர்கள் அங்கே செய்தது அவர்களின் இயல்பு நிலையே.

2. அந்த நிகழ்விலே ஒரு மிகப்பெரிய வாழ்க்கை உண்மை விளக்கத்தை த்ரௌபதி - சத்யபாமா உரையாடல் தரும். அதை நீங்கள் படித்ததாகவே தெரியவில்லை. இதை முழுமையாக படித்து உங்களுக்குத் தருகிறேன்.

தேனும் மதுதான், பழரசமும் மதுதான். இன்று ஒரு பிக்னிக் போய் நாம் விளையாடுவது போலவே அன்று அவர்கள் சென்றதும் ஒரு பிக்னிக் தான்.

மது என்றால் போதை தருவது என்றால் தாய்ப்பால் ஒரு சிறந்த மது. அது தெரியுமா உங்களுக்கு?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?

Divya
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி...

ஆண்கள் எண்ணிக்கை குறைவு என்பதையும் வாரிசு காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

//மதுவும் பெண்களும் - திரௌபதியும் சுபத்திரையும் ஆதிபர்வம் பகுதி 224

இன்று மீண்டும் இப்பகுதியை படித்தேன்... திரௌபதி மற்றும் சுபத்திரை மது அருந்தவில்லை என்பது விளங்கிற்று. ஆனால் அங்கு வந்திருந்த பெண்கள் மது அருந்தி விளையாடியது, தடுமாறியது, பாடியது போன்ற செய்திகள் உள்ளன... அவையே எனக்கு தவறாக தோன்றுகிறது..

மதுவை பற்றிய தங்களின் விளக்கம் சரியானதே... மதுவிற்கு எடுத்துகாட்டாக தேன், பழரசம், தாய்பாலை கூறினீர்கள். ஆனால் இவற்றுள் ஒன்றை அப்பெண்கள் அவ்வேளையில் அருந்தி இருபர்களா என்பது சந்தேகமே...

த்ரௌபதி - சத்யபாமா உரையாடல் பற்றி நான் அறிந்ததில்லை.

நான் ஒரு தனியார் பொறியியல் கல்லூரயில் துணை பேராசிரியர் பணியில் இருக்கிறேன். கணினி அறிவியல் மட்டுமே தெரிந்த எனக்கு இதிகாச, புராணங்கள் பற்றிய தெளிவு மிகவும் அப்பாற்பட்டது. மகாபாரதம் தொடரை தொலைகாட்சியில் பார்த்த பின் அதன்மேல் ஈர்ப்பு கொண்டு படிக்க துவங்கியுள்ளேன். கிடைக்கும் ஒய்வு நேரம் அனைத்தையும் இதற்காகவே செலவு செய்கிறேன். அதனால் நான் ஏதேனும் தவறான கேள்வியை  கேட்டிருந்தால் மன்னிக்கவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?

தாமரை
Administrator
இன்றைய கார்ப்போரேட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு இதை ஒப்பு நோக்க இயலும்.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் முழுக்க ஒரு ரிசார்ட்டிற்கோ அல்லது பிக்னிக் ஸ்பாட்டிற்கோ சென்று முழுக்க முழுக்க விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஒற்றுமையையும் தரும்.

எதாவது ஒரு புராஜக்ட் வெற்றியடைந்தால் கூட இது நடக்கும். இது ஒரு விதக் கொண்டாட்டம். இந்த கொண்டாட்டங்களில் மது இயல்பாக இடம்பெறும். மது அருந்திவிட்டு எந்த கார்ப்பொரேட் அலுவலகங்களிலும் வேலைக்கு வரமுடியாது. மது அவர்களின் தினசரி பழக்கம் அல்ல. என்றோ ஒரு நாள் இப்படி கொண்டாட்டங்களின் போது மட்டும்.

இன்னும் வட நாட்டில் ஹோலி பண்டிகைகளின் போது பாங்க் என்னும் மது அருந்தும் பழக்கம் உண்டு. தென்னாட்டில் கள் இருந்தது. இந்திய மதுவகைகள் பழரசங்களை புதைத்து ஊறல் செய்வதன் மூலம் பெறப்பட்டவை.

இந்திர பிரஸ்த நகரை அமைத்து, பிற நாட்டு மன்னர்களை வசப்படுத்தி, யாத்திரை சென்று சுபத்ரையை மணந்து கொண்ட அர்ஜூனன் இது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கே தன் அரண்மனையில் உள்ளவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களை விளையாட்டுக்கள், ஆடல் பாடல்களில் ஈடுபடச் செய்து மகிழ்வித்திருக்கின்றனர். சுபத்ரையும் த்ரௌபதியும் பரிசுகளையும் வழங்கி இருக்கின்றனர். அவரவர் அவரவர் விருப்பத்திற்கு இருந்து மகிழ்ந்திருக்கின்றனர்.

வேலைக்காரர்கள் என்றால் அடிமைகள் என்று கருதப்பட்ட காலம் அது என  நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். வேலைக்காரர்களின் சந்தோஷம், இன்பம் அவர்களைப் பாராட்டல் என நடந்த இந்த சம்பவத்தை ஏன் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அதே சமயம் கார்ப்பொரேட் நிறுவனங்கள் கொண்டு வந்த இதே டீம் அவுட்டிங் கலாச்சாரத்தை ஏன் உயர்ந்ததாகப் பார்க்கிறோம்? டீம் அவுட்டிங் மகாபாரதக் காலக் கலாச்சாரம் என ஏன் பார்க்க நம்மால் முடியவில்லை. ?