கிருஷ்ணரின் வாரிசுகள்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கிருஷ்ணரின் வாரிசுகள்

Karthik
மாபெரும் மகாபாரத யுத்தத்தின் மூலம் தர்மத்தை நிலைநாட்டியதுடன் , கீதை உபதேசம் கொடுத்தார் கிருஷ்ணர். அனால் அவரின் வாரிசுகள் அதர்மம் புரிந்து ரிஷிகளின் சாபத்தை பெற்றதாக படித்தேன். அதிர்ச்சியாக உள்ளது. உலகத்திற்கே வழிகாட்டிய கிருஷ்ணர், தன்னுடைய மகன்களுக்கு வழிகாட்ட முடியாமல் போனது எப்படி? தயவு செய்து தெளிவு படுத்துங்கள். நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணரின் வாரிசுகள்

தாமரை
Administrator
வாரிசு அரசியலே வேணாம்னு கிருஷ்ணர் நமக்கு போதனை செஞ்சதா நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணரின் வாரிசுகள்

தாமரை
Administrator
இதை ஆன்மீகமாகப் பார்க்காமல் சாதாரண மனிதரின் கோணத்தில் பார்ப்போம்.

மகாபாரத யுத்தத்தில் உயிர்பிழைத்தவர்களில் யாதவர்களே அதிகம். கிருஷ்ணனின் புகழ் இதனால் பன்மடங்க்கு உயர்ந்தது. கிருதவர்மன், சாத்யகி ஆகிரோருக்கும் கர்வம் உண்டானது. யாதவர்கள், சக்ரவர்த்தியான தர்மனே யாதவர்களின் தயவில்தான் இருப்பதாக இறுமாப்பு அடைந்தனர். இதனால் யாதவர்கள் மிகுந்த மமதையில் இருந்தனர்.

யாதவர்கள் இதனால் யாரையும் மதிக்காமல் இருந்தனர் முனிவர்களையும் மதிக்கவில்லை ஆதலால் காந்தாரி என்ற பத்தினி சாபத்தோடு பிராம்மண சாபமும் தோன்றியது.

கிருஷ்ணன் என்ன செய்திருக்க வேண்டும்? இதில் யாரை எதற்காக தண்டிக்க இயலும்? பாவத்திற்கும் குற்றத்திற்கும் வித்தியாசம் உண்டு. பாவம் என்பது தர்மத்திற்கு எதிராக செய்யப்படுவது. குற்றம் என்பது சட்டத்திற்கு எதிராகச் செய்யப்படுவது. தர்மத்தை மீறுபவனை காலனுமும் தெய்வமும் தண்டிக்கும். சட்டத்தை மீறுபவனை அரசன் தண்டிப்பான்.

யாதவர்கள் தர்மங்களை மீறியதால் காலத்தாலும் தெய்வத்தாலும் தண்டிக்கப்பட்டனர்.

துவாரகை அழிவை முன்னரே அறிந்த கிருஷ்ணர் அனைவரையும் பிரபாஸ சேத்திரம் எனப்படும் இடத்துக்கு வரச் சொல்கிறார். பாதி பேருக்கு மேல் முன்னரே அங்க்கு வந்து விட்டனர். இதில் வீரர்களான அனைத்து யாதவர்களும் கள்ளுண்டு போதையேறி கிடக்கிறார்கள்.

ஏற்கனவே அவர்கள் உள்ளத்தில் இருந்த கர்வமும் இறுமாப்பும் ஈகோவாய் கிளர்ந்தெழ ஒருவன் இன்னொருவனை இழித்துப் பேச .. பேச்சு வார்த்தை கைகலப்பாய் ஆயுதப் போராய் மாறி அனைவரும் அழிகிறார்கள்.

இதில் மூன்று விஷயங்கள் உள்ளன.

1. ஒரு பலம் வாய்ந்த தலைவன்ன் இருந்தால் அவனுடைய அல்லக்கைகள் இறுமாப்புடன் நடந்து கொள்வார்கள். தலைவனின் இறுதிக் காலத்தில் இவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு நாட்டையே அழித்து விடுவார்கள்.எனவே தலைவன் காமராஜர் போல் அல்லக்கைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

2. கலியுகம் ஆரம்பிக்கும்பொழுது பலம் வாய்ந்த ஷத்ரியன் யாரும் துவாபார யுகத்திலிருந்து வரக்கூடாது என்பது கிருஷ்ணாவதார நோக்கம். அதனால் பலம் மிகுந்த யாதவ ஷத்ரியர்களை அழிய விட்டார்

3. தலைவனுக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவன் தகுந்த வாரிசாகி விட முடியாது. அதற்குரிய தகுதிகளை ஒருவன் தானே வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர வேறு யாராவது தட்டி குட்டி பாடம் கற்பித்து தலைவர்களை உருவாக்க முடியாது.

ஆக இம்மூன்றுமே கிருஷ்ணர் தன் வாரிசுகளை காப்பாற்றாமல், நேர்வழிப்படுத்தாமல் விட்டதற்குக் காரணமாகும்.

இன்றும் இந்த பாடங்கள் ஒவ்வொரு வாரிசுக்கும் அவசியமானதாக இருக்கிறது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணரின் வாரிசுகள்

Karthik
அருமையான விளக்கம். இந்த கேள்விக்கு பதில் பல மாதங்களாக தேடிக்கொண்டு இருந்தேன். மிக்க நன்றி.