மஹாபாரதத்தில் நம்பிக்கை துரோகம் – திருதராஷ்டிரன் செய்த துரோகம்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மஹாபாரதத்தில் நம்பிக்கை துரோகம் – திருதராஷ்டிரன் செய்த துரோகம்

திருவாழ்மார்பன்
துரோகம் – பஞ்ச மாபதகங்களில் ஒன்று. ஒரு மனிதன் செய்யக்கூடாத பாவச் செயல். தர்மம் மெலிந்து வரும் கலியுக மனிதர்களிடையே துரோகம் சகஜமாகக் காணப்படுகிறது. ஆனால் மஹாபாரத்திலேயே பல துரோகங்கள் பல இடங்களில் செய்யப்படுகின்றன. சிலவற்றைக் குறித்து இந்த மேடையில் விவாதிக்க விரும்புகிறேன் .

முதலில் திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு செய்த துரோகம்.

உண்மையில் துரோகம் என்று சொல்வதை விட துரோகங்கள் என்று தான் சொல்ல வேண்டும். தன் தம்பி பிள்ளைகளுக்கு வயது வந்தவுடன் அரசை அவர்களுக்கு அளிக்காமல் தானே வைத்துக் கொண்டு அவர்களுக்கு துரோகம் செய்தார். பாண்டு போன பிறகு தான் அரசுக்கு ஒரு பாதுகாவலனாக நியமிக்கப்பட்டவன் என்பதை மறந்துவிட்டு அரசுரிமை கொண்டாடினார்.

அடுத்து அரசை பகிர்ந்தளிக்க முன் வந்த போது பொட்டல் காட்டை அவர்களுக்கு அளித்து மீண்டும் பாண்டவர்களுக்கு துரோகம் செய்தார். உண்மையில் பாண்டு ஆண்டு வந்த அஸ்தினாபுரத்தை தானே அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும்.

அடுத்த துரோகம் பாண்டவர்களை வஞ்சகமாக சூதில் வென்று அவர்களின் நாட்டை மீண்டும் கைப்பற்றக் காரணமாக இருந்தார். உண்மையில் பாண்டவர்கள் திருதராஷ்டிரன் மேல் இருந்த நம்பிக்கையில் தான் அஸ்தினாபுரம் வந்து சூதாட ஒப்புக்கொண்டணர். சூதாட அழைத்து வருமாறு விதுரனை அனுப்பியது திருதராஷ்டிரன் தானே. ஆக பல வகையில் பாண்டவர்களுக்கு  நம்பிக்கை துரோகம் இழைத்து தன் குல நாசத்துக்கே காரணமாக இருந்தவன் திருதராஷ்டிரன் தான் என்பது அடியேனுடைய அபிப்பிராயம்.

மற்ற அன்பர்களின் கருத்துக்களைய்ம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மேலும் பல மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள பல துரோகங்கள் குறித்தும் விவாதிக்க விரும்புகிறேன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதத்தில் நம்பிக்கை துரோகம் – திருதராஷ்டிரன் செய்த துரோகம்

தாமரை
Administrator
This post was updated on .
சந்திரன் தன் குருவின் மனைவி தாரையுடன் கூடி புதனைப் பெற்றதில் ஆரம்பிக்கிறது மஹாபாரதத்தில் துரோகம். யயாதி தன் மனைவி தேவயானிக்கு துரோகம் செய்து சர்மிஷ்டையுடன் கூடுவதும் துரோகம்தான். ஆக சந்திரனில் எப்படி களங்கம் உள்ளதோ அப்படி சந்திர வம்சத்திலும் களங்கங்கள் இருந்தது நிதர்சனம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதத்தில் நம்பிக்கை துரோகம் – திருதராஷ்டிரன் செய்த துரோகம்

தாமரை
Administrator
In reply to this post by திருவாழ்மார்பன்
த்ருதராஷ்டிரன் பற்றி சிலபல கேள்விகளை இன்னொரு திரியில் எழுப்பி உள்ளேன். இரண்டையும் இணைத்துவிடலாமே


பாண்டவருக்கு நாடு பிரித்துக் கொடுத்தாயிற்று. அவர்கள்  நகரம் எழுப்பி முடிசூடி திக்விஜயம் சென்று வெற்றிகள் ஈட்டி, சக்கரவர்த்தியாகவே தர்மன் ஆகிவிட்டான்.

ஆனால் தான் அமர்ந்த சிங்காதனத்தை விட்டு இறங்க த்ருதராஸ்டிரனுக்கு மனமில்லை. தான் அரச பதவிக்கு உகந்தவனல்ல என த்ருதராஷ்டிரனுக்குத் தெரியும். தனக்கு பார்வை இல்லாததால் பாண்டு அரசனானதும் தெரியும். இருந்தும் துரியோதனன் வசம் அரசாட்சியை த்ருதராஷ்டிரன் ஆட்சியை ஒப்படைக்கவில்லை.

அதன் பின் சூதாட்டத்தில் வென்ற அனைத்து பகுதிகளும் த்ருதராஷ்டிரனாலேயே ஆளப்பட்டன.

எனக்கு இந்த சந்தேகம் வரக்காரணம் மகாபாரதக் கால அட்டவணை என நீங்கள் அளித்திருக்கும் கால அட்டவணைதான்,

பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது   :76
பீமனுக்கு வயது         :75
அர்ஜுனனுக்கு வயது    :74
நகுல சகாதேவர்களுகு   :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது       :92
கிருஷ்ணனுக்கு வயது   :74

அப்படியானால் போர் மூளும்போது துரியோதனனுக்கு வயது 88.

அப்படியானால் த்ருதராஷ்டிரனின் வயது குறைந்த பட்சம் 110 க்கு மேல் இருக்கும். அந்த காலத்தில் நிறைந்த வயது 120 என்பார்கள். ஆக தன் காலத்தின் எல்லையில் இருக்கும் த்ருதராஷ்டிரன், ஆட்சிக்கட்டிலிலேயே..

தர்மன் இந்திரப்பிரஸ்தம் ஆண்டது 36 ஆண்டுகள் அதன் பிறகு 36+13, 49 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக் கட்டிலில் உட்காரவில்லை துரியோதனன். கடைசி 13 ஆண்டுகள் அவன் ஏற விரும்பாததற்கு காரணம் இருக்கலாம். பாண்டவர்கள் அழிந்த பின்தான் தனக்கு நிம்மதி என வாழ்ந்தவன் அவன். ஆனால் அரசுக் கட்டிலில் துரியோதனனை உட்கார வைப்பது பற்றி த்ருதராஷ்டிரன் 36 ஆண்டுகள் யோசிக்கவே யோசிக்காததுதான் காரணம். ஆட்சியில் அமர்ந்தால் உடனே பாண்டவர் மீது படையெடுத்து அழிந்து போய்விடுவானோ என அஞ்சி இருக்கலாம் என்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும். ஆனால் அது உண்மையெனில் அவன் ஐந்து கிராமங்களைக் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். பாண்டவர்கள் முதல் தாக்குதல் செய்யமாட்டார்கள் என்பது அவருக்கு உறுதியாகவேத் தெரியும்.

அப்படி இருந்தால்

மண்ணாசை துரியோதனனின் பலவீனம் என்றிருந்தால் அவன் பீஷ்மர், துரோணர், கர்ணன் மூவரைக் கொண்டு உலகத்தையே அடைந்திருப்பான். ஆனால் கர்ணனின் திக் விஜயம் தவிர வேறு நாடு பிடிக்கும் போர்கள் அவன் செய்யவில்லையே. பாண்டவர்களுக்குத் தோன்றிய ராஜசூய யாகம் அவனுக்கு தோன்றவில்லை. மற்ற நாடுகளைப் பிடிக்கும் எண்ணமே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

த்ருதராஷ்டிரன் துரியோதனனின் பெயரைச் சொல்லி 50 ஆண்டுகள் நாட்டை ஆண்டிருக்கிறார்.

தான் குருடன் என்பதால் நாடாள தகுதியற்றவன் என்று சொல்லி பாண்டுவுக்கு அரச பட்டம் கட்டப்பட்டதில் அவர் காயப்பட்டார்.

அதன் பின் பாண்டு வனவாசம் போனதால் வேறுவழியின்றி அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற வேண்டியதானது.

அதன் பிறகு அவன் தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து யாரும் தன்னை இறக்கி விடாதபிடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

பாண்டவர் மேல் துரியோதனனுக்கு இருந்த வெறுப்பை த்ருதராஷ்டிரன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான் என்றே சொல்லவேண்டும்.

துரியோதனனுக்கு, துரியோதனனுக்கு  என்று சொல்லிச் சொல்லியே கடைசி வரை துரியோதனனுக்குத் தரவே இல்லை. அவரே அனுபவித்து விட்டுச் சென்றார்.

துரியோதனனுக்கு உண்மையில் மண்ணாசை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதத்தில் நம்பிக்கை துரோகம் – திருதராஷ்டிரன் செய்த துரோகம்

திருவாழ்மார்பன்
முற்றிலும் உண்மை நண்பரே. எப்பொழுது பாண்டவர்களுக்கு காண்டவபிரஸ்தத்தை பிரித்துக் கொடுத்தானோ, அப்பொழுதே தான் ஆண்டு வந்த அஸ்தினாபுரத்தை துரியோதனனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். எனவே திருதராஷ்டிரனுக்கு மண்ணாசை இருந்தது தெளிவாகிறது. பிள்ளைப் பாசம் என்பது வெறும் வெளி வேஷத்துக்காகவே போட்டுக்கொண்டதாக நினைக்கிறேன்.