எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

classic Classic list List threaded Threaded
10 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

திருவாழ்மார்பன்
எல்லோருக்கும் வணக்கம்.

இந்த விவாத மேடையில் ஒரு புதிய தலைப்பை துவக்க விரும்புகிறேன். நண்பர் திரு.தாமரை அவர்கள் சென்ற ஒரு பதிவில் இராமாயணத்தின் பல கணக்குகள் மஹாபாரதத்தில் முடிகின்றன என்று விளக்கமளித்திருந்தார். அதை படித்ததும் இந்த கேள்வி எனக்குள் எழுந்தது. உண்மையில் இராமாயணம் சிறந்த இதிகாசமா அல்லது மஹாபாரதம் சிறந்த இதிகாசமா? இந்த காலத்து மனிதர்களுக்கு தேவையான தர்மத்தை சிறந்த முறையில் எடுத்து சொல்வது எது? எனது கருத்துகளை இங்கே முன்வைக்கிறேன்.

இராமாயணம் என்பது இராமன் என்ற ஒருவனது சரிதையை மட்டும் சொல்வது. அவனும் அவனுடைய மனைவி, பெற்றோர், மக்கள் ஆகியோரின் வாழ்க்கையை சொல்வது. ஆனால் மஹாபாரதமோ ஒரு குலத்தின் (வம்சத்தின்) தொடக்கத்தில் இருந்து அக்குலத்தின் அழிவு வரை சொல்லும் பெருங்காவியம்.

இராமாயணம் திரேதா யுகத்தில் நடந்த கதை. கலியுகத்திற்கும் திரேதாயுகத்திற்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. ஆனால் மஹாபாரதம் துவாபர யுகத்தில் ஆரம்பித்து கிட்டதட்ட கலியுகம் தொடக்கம் வரை நீள்கிறது. ஆகையால் தற்காலத்துக்கு நெருக்கமாகவே சம்பவங்கள் நடக்கிறது.

மேலும் இராமாயணத்தில் நல்லவர்கள் நல்லவர்களாகவும், தீயவர்கள் தீயவர்களாகவுமே இருந்தனர். ஆனால் மஹாபாரத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நல்ல குணமும் தீய குணமும் கலந்தே காணப்படுகின்றன. இதுவும் தற்கால மனிதர்களை பிரதிபலிப்பதாகவே உள்ளது அல்லவா?

இராம இராவண யுத்தத்தின் போது இராமனின் சைனியத்தில் எந்த ஒரு முக்கிய தளபதியும் மரணமடையவில்லை. நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் முதலிய யாவரும் மரணமடையவில்லை. இறந்த மற்ற சாதாரண குரங்குகளும் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன. ஆனால் பாரத யுத்தத்தில் பாண்டவர்களைத் தவிர பாண்டவ சைனியம் முழுவதுமே முடிந்தது. இதைக் கொண்டு பாண்டவர்க்ளின் பக்கத்திலும் அதர்மம் இருந்தது என்பது உறுதியாகிறது.

இதைப் போன்ற மேலும் பல உதாரணங்கள். கலியுகமான தற்காலத்திற்கு தேவையான தர்மங்களை எடுத்து சொல்வதால், மஹாபாரதமே சிறந்தது என்று தோன்றுகிறது.
அடியேனுடைய கருத்துகளில் பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். மற்ற அன்பர்களின் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

தாமரை
Administrator
மிகச் சிறந்த தலைப்பு விவாதிப்பதற்கு. ஆனால் தலைப்பை சற்று மாற்றினால் இன்னும் மிகவும் நன்றாக இருக்கும்.

இராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் இரு வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் இரண்டும் ஒன்றிற்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஒரு இதிகாசத்தை ஒதுக்கி விட்டு இன்னொரு இதிகாசத்தை மட்டுமே படித்தால் நிறைவு கிட்டாது.

மகாபாரதத்தின் பல முடிச்சுகளை இராமாயணம் அறியாமல் திறக்க முடியாது.

இராமாயணம் ஒரு கோணத்தில் வாழ்க்கையைச் சொல்கிறது, மகாபாரதம் இன்னொரு கோணத்தில் சொல்கிறது.

மஹாபாரதம் எழுதிய வியாசர் மஹாபாரதத்தின் காலம் முழுதும் பயணித்தவர். பல முடிச்சுகளை இட்டவர் இவரே.

இராமாயணம் எழுதிய வால்மீகியோ மனக்கண்ணிலேயே எல்லாவற்றையும் கண்டு எழுதுகிறார். அதனால் மகாபாரதம் அளவிற்கு இராமாயணம் விரிவில்லாமல் இருப்பதாக தோன்றும்.

இராமாயணத்திலும் சரி, மஹாபாரதத்திலும் சரி பல நுட்பமான தர்ம விளக்கங்கள் உண்டு.

இராமன் முற்றிலும் நேர்மையானவனாக கருதப்படுகிறான்

கிருஷ்ணன் விவேகத்தில் வல்லவனாக கருதப்படுகிறான்

இராமாயணத்தில் இராமன் நேரடியான தலைவன்.

மஹாபாரதத்து கிருஷ்ணன் ஒரு வழிகாட்டி.

///இராம இராவண யுத்தத்தின் போது இராமனின் சைனியத்தில் எந்த ஒரு முக்கிய தளபதியும் மரணமடையவில்லை. நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் முதலிய யாவரும் மரணமடையவில்லை. இறந்த மற்ற சாதாரண குரங்குகளும் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன. ஆனால் பாரத யுத்தத்தில் பாண்டவர்களைத் தவிர பாண்டவ சைனியம் முழுவதுமே முடிந்தது. இதைக் கொண்டு பாண்டவர்க்ளின் பக்கத்திலும் அதர்மம் இருந்தது என்பது உறுதியாகிறது. ///

இதை நாம் விரிவாக  நோக்க வேண்டும். இராம இராவண யுத்தத்தின் நோக்கம் இராமன் என்ற மனிதனுக்கும் இராவணன் என்ற அசுரனுக்கும் நடந்தது, வானரர்கள் இராமனுக்கு உதவினர். அரசன் என்ற முறையில் இராவணனுக்கு அசுரர் உதவினர். அது ஒரு நோக்குப் போர்.

மஹாபாரத யுத்தம் அப்படியில்லை. அதில் போரிட்ட ஒவ்வொரு பெருந்தலைக்கும் தனித்தனிப் போர் இருந்தது. அது ஒரு கூட்டுப் போர்.

சிகண்டி - பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன் - திருஷ்டத்துய்மன், துருபதன், கௌரவர் - பீமன், அர்ச்சுனன் - கர்ணன், விராடன்-சுசர்மன், கடோத்கஜன் - அலம்புசன், சாத்யகி - பூரிஸ்வரவசு சகுனி - சகாதேவன் இப்படி தனித்தனியே பல நோக்கங்கள்.

இராமாயணம் நேரடியாக இது தர்மம். இப்படிச் செய் எனச் சொல்வதாக இருக்கும்.

ஆனால் மஹாபாரதம் இதெல்லாம் தர்மம் போன்றே தோன்றும், இவற்றில் எப்படி தர்மத்தை பிரித்தரிவது? என சற்று மேலே சென்று சொல்வதாகும்.

அதாவது இதுதான் தர்மம் என்று சொல்வதோடு நின்றது போதவில்லை. தர்மம் என்ற போர்வையில் அதர்மம் எப்படியெல்லாம் நிகழும். இடம் பொருள் நேரம் இவற்றிற்கேற்ப தர்ம முரண்களை எப்படிக் களைவது என்பதை மஹாபாரதம் விளக்கும்.

ஆக இராமாயணம் படிக்காமல் மஹாபாரதம் படித்தாலும் பயணில்லை. அடிப்படை தர்மங்கள் புரியாது.

இராமாயணம் படித்து விட்டு மஹாபாரதம் படிக்காமல் விட்டாலும் தர்மசிக்கல்களை விடுவிக்க முடியாது.

விதுரனையும் விபீஷணனையும் ஒப்பிட்டும், கர்ணனையும் கும்பகர்ணனையும் அலசியும், இராமாயண சகோதரத்துவம் மகாபாரதச் சகோதரத்துவும் ஒப்பிட்டு கூட்டுக் குடும்பமும் வாலி மரணம், இந்திரஜித் மரணம் பீஷ்ம,துரோண,கர்ண, துரியோதன மரணம் ஆகியவற்றை ஒப்பிட்டு தர்ம அறிவும் பெறலாம். மஹாபாரதத்தின் புரியாத விஷயங்களை இராமாயண இணைகாட்சிகளுன் சேர்த்து ஆராய்ந்தால் மிகுந்த தெளிவு கிட்டும். அதனாலேயே இராமாயணம் எளிமையாகவும் மகாபாரதம் சிக்கலானதாகவும் இராமன் எளிமையானவனாகவும், கிருஷ்ணன் சிக்கலானவனாகவும் இருக்கிறபடி அமைந்துள்ளது.

ஆகவே எது உயர்ந்தது என வாதிடுவது கடுமையான காரியமாகும்.

இவ்விடம் பல அரிய அறிவுடை பெருமக்கள் கூடி உள்ளதால் இது சரியான இடம்தான் விவாதிக்க!!!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

Arul Selva Perarasan
Administrator
//இராமாயணம் நேரடியாக இது தர்மம். இப்படிச் செய் எனச் சொல்வதாக இருக்கும்.

ஆனால் மஹாபாரதம் இதெல்லாம் தர்மம் போன்றே தோன்றும், இவற்றில் எப்படி தர்மத்தை பிரித்தரிவது? என சற்று மேலே சென்று சொல்வதாகும்.

அதாவது இதுதான் தர்மம் என்று சொல்வதோடு நின்றது போதவில்லை. தர்மம் என்ற போர்வையில் அதர்மம் எப்படியெல்லாம் நிகழும். இடம் பொருள் நேரம் இவற்றிற்கேற்ப தர்ம முரண்களை எப்படிக் களைவது என்பதை மஹாபாரதம் விளக்கும்.

ஆக இராமாயணம் படிக்காமல் மஹாபாரதம் படித்தாலும் பயணில்லை. அடிப்படை தர்மங்கள் புரியாது.

இராமாயணம் படித்து விட்டு மஹாபாரதம் படிக்காமல் விட்டாலும் தர்மசிக்கல்களை விடுவிக்க முடியாது.//

நண்பரே... அருமை... அருமை... நல்ல விளக்கம்.

2015-06-25 19:33 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
மிகச் சிறந்த தலைப்பு விவாதிப்பதற்கு. ஆனால் தலைப்பை சற்று மாற்றினால் இன்னும் மிகவும் நன்றாக இருக்கும்.

இராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் இரு வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் இரண்டும் ஒன்றிற்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஒரு இதிகாசத்தை ஒதுக்கி விட்டு இன்னொரு இதிகாசத்தை மட்டுமே படித்தால் நிறைவு கிட்டாது.

மகாபாரதத்தின் பல முடிச்சுகளை இராமாயணம் அறியாமல் திறக்க முடியாது.

இராமாயணம் ஒரு கோணத்தில் வாழ்க்கையைச் சொல்கிறது, மகாபாரதம் இன்னொரு கோணத்தில் சொல்கிறது.

மஹாபாரதம் எழுதிய வியாசர் மஹாபாரதத்தின் காலம் முழுதும் பயணித்தவர். பல முடிச்சுகளை இட்டவர் இவரே.

இராமாயணம் எழுதிய வால்மீகியோ மனக்கண்ணிலேயே எல்லாவற்றையும் கண்டு எழுதுகிறார். அதனால் மகாபாரதம் அளவிற்கு இராமாயணம் விரிவில்லாமல் இருப்பதாக தோன்றும்.

இராமாயணத்திலும் சரி, மஹாபாரதத்திலும் சரி பல நுட்பமான தர்ம விளக்கங்கள் உண்டு.

இராமன் முற்றிலும் நேர்மையானவனாக கருதப்படுகிறான்

கிருஷ்ணன் விவேகத்தில் வல்லவனாக கருதப்படுகிறான்

இராமாயணத்தில் இராமன் நேரடியான தலைவன்.

மஹாபாரதத்து கிருஷ்ணன் ஒரு வழிகாட்டி.

///இராம இராவண யுத்தத்தின் போது இராமனின் சைனியத்தில் எந்த ஒரு முக்கிய தளபதியும் மரணமடையவில்லை. நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் முதலிய யாவரும் மரணமடையவில்லை. இறந்த மற்ற சாதாரண குரங்குகளும் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன. ஆனால் பாரத யுத்தத்தில் பாண்டவர்களைத் தவிர பாண்டவ சைனியம் முழுவதுமே முடிந்தது. இதைக் கொண்டு பாண்டவர்க்ளின் பக்கத்திலும் அதர்மம் இருந்தது என்பது உறுதியாகிறது. ///

இதை நாம் விரிவாக  நோக்க வேண்டும். இராம இராவண யுத்தத்தின் நோக்கம் இராமன் என்ற மனிதனுக்கும் இராவணன் என்ற அசுரனுக்கும் நடந்தது, வானரர்கள் இராமனுக்கு உதவினர். அரசன் என்ற முறையில் இராவணனுக்கு அசுரர் உதவினர். அது ஒரு நோக்குப் போர்.

மஹாபாரத யுத்தம் அப்படியில்லை. அதில் போரிட்ட ஒவ்வொரு பெருந்தலைக்கும் தனித்தனிப் போர் இருந்தது. அது ஒரு கூட்டுப் போர்.

சிகண்டி - பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன் - திருஷ்டத்துய்மன், துருபதன், கௌரவர் - பீமன், அர்ச்சுனன் - கர்ணன், விராடன்-சுசர்மன், கடோத்கஜன் - அலம்புசன், சாத்யகி - பூரிஸ்வரவசு சகுனி - சகாதேவன் இப்படி தனித்தனியே பல நோக்கங்கள்.

இராமாயணம் நேரடியாக இது தர்மம். இப்படிச் செய் எனச் சொல்வதாக இருக்கும்.

ஆனால் மஹாபாரதம் இதெல்லாம் தர்மம் போன்றே தோன்றும், இவற்றில் எப்படி தர்மத்தை பிரித்தரிவது? என சற்று மேலே சென்று சொல்வதாகும்.

அதாவது இதுதான் தர்மம் என்று சொல்வதோடு நின்றது போதவில்லை. தர்மம் என்ற போர்வையில் அதர்மம் எப்படியெல்லாம் நிகழும். இடம் பொருள் நேரம் இவற்றிற்கேற்ப தர்ம முரண்களை எப்படிக் களைவது என்பதை மஹாபாரதம் விளக்கும்.

ஆக இராமாயணம் படிக்காமல் மஹாபாரதம் படித்தாலும் பயணில்லை. அடிப்படை தர்மங்கள் புரியாது.

இராமாயணம் படித்து விட்டு மஹாபாரதம் படிக்காமல் விட்டாலும் தர்மசிக்கல்களை விடுவிக்க முடியாது.

விதுரனையும் விபீஷணனையும் ஒப்பிட்டும், கர்ணனையும் கும்பகர்ணனையும் அலசியும், இராமாயண சகோதரத்துவம் மகாபாரதச் சகோதரத்துவும் ஒப்பிட்டு கூட்டுக் குடும்பமும் வாலி மரணம், இந்திரஜித் மரணம் பீஷ்ம,துரோண,கர்ண, துரியோதன மரணம் ஆகியவற்றை ஒப்பிட்டு தர்ம அறிவும் பெறலாம். மஹாபாரதத்தின் புரியாத விஷயங்களை இராமாயண இணைகாட்சிகளுன் சேர்த்து ஆராய்ந்தால் மிகுந்த தெளிவு கிட்டும். அதனாலேயே இராமாயணம் எளிமையாகவும் மகாபாரதம் சிக்கலானதாகவும் இராமன் எளிமையானவனாகவும், கிருஷ்ணன் சிக்கலானவனாகவும் இருக்கிறபடி அமைந்துள்ளது.

ஆகவே எது உயர்ந்தது என வாதிடுவது கடுமையான காரியமாகும்.

இவ்விடம் பல அரிய அறிவுடை பெருமக்கள் கூடி உள்ளதால் இது சரியான இடம்தான் விவாதிக்க!!!If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp465p466.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

திருவாழ்மார்பன்
In reply to this post by தாமரை
அருமையான விளக்கம் நண்பரே. அடியேனுக்கு இராமாயணத்தை குறைவாக பேசும் எண்ணம் இல்லை. இந்த தலைப்பு தாங்கள் சொன்னது போல் சற்று மாற்றியிருக்க வேண்டும்.  

இராமாயணத்தை விட மஹாபாரதம் பல நுட்பமான தர்மங்களை உடையது. மஹாபாரதத்தில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் தற்காலத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் தான் கலியுகத்திற்கு தேவையான அனேக தர்மங்களை இராமாயணத்தை விட மஹாபாரதம் அதிகம் உரைப்பதாகக் கருதுகிறேன்.

இராமனைப் பார்த்து நடக்க வேண்டும். கண்ணன் சொல் (கீதை) கேட்டு நடக்க வேண்டும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

தாமரை
Administrator
என்னிடம் ஒரு குறை உண்டு. நானாக எதையும் ஆரம்பிப்பதில்லை. ஆனால் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அதன் ஆழம் வரை சென்று முழுமையான பதிலை வெளிக்கொண்டுவர மிக அக்கறையுடன் படிப்பேன்..

எனவே பொதுவாக பேசாமல் குறிப்பிட்ட சம்பவங்களையோ அல்லது தர்மங்களையோ கேள்வியாகத் தந்தால் விளக்கி மகிழ்வேன்.

வாலியின் மரணம் - கர்ணன் மரணம் இரண்டும் ஒப்பிடத் தகுந்த சம்பவங்கள். அவற்றைப் பற்றி விரிவாக பேசலாமா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

Arul Selva Perarasan
Administrator
வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு என தனித்தலைப்பிட்டு பேசுங்கள் நண்பரே. நல்ல தலைப்புதான்Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

திருவாழ்மார்பன்
In reply to this post by தாமரை
அருமையான தலைப்பு நண்பரே. இரண்டுமே இன்று வரை மக்களால் விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்களாகும். இரண்டிலும் தர்மம் சூட்சுமமாக மறைந்துள்ளது.  பல்வேறு கோணங்களில் இவ்விரண்டு சம்பவங்களையும் அலசும் வகையில் தங்கள் பதிவு இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆவலுடன் தங்கள் பதிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

தாமரை
Administrator
இராமாயணத்தின் சிறப்பு அதன் எளிமைதான். "அ" என்று எழுத்தில் தொடங்கும் சொற்களாலே யாரோ ஒருவர் இராமாயணத்தை வடித்திருக்கிறார்

அனந்தனே
அசுரர்களை
அழித்து
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.

அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன் ?

அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!

அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .

அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!

அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.

அங்கேயும்
 அபாயம்!

அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்

அத்தசமுகனின்
அக்கிரமங்களுக்கு,
அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை.
அயோத்தி அண்ணல் ,
அன்னை
அங்கிருந்து
அகன்றதால்
அடைந்த
அவதிக்கும்
அளவில்லை.

அத்தருணத்தில்
அனுமனும்,
அனைவரும்
அரியை
அடிபணிந்து,
அவனையே
அடைக்கலமாக
அடைந்தனர்.

அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.

அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
 அலைந்தனர்,
அலசினர்.

அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.

அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்

அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.

அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.

அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,

அசாத்தியமான
அதிசாகசம்.

அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.

அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.

அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.

அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல்.

அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேயே
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

தாமரை
Administrator
This post was updated on .
அடியேனும் ஒரு முயற்சி செய்தேன்,,

 கீரையாமணம்.

    பொன்னாங்கண்ணி
    பசலை

    முசுமுசுக்கை
    தூதுவளை

    வல்லாரை
    சிறுகீரை
    முருங்கை
    அறுகீரை

    கரிசலாங்கண்ணி
    குப்பைமேனி
    ஆரை
    அகத்தீக்கீரை

    வெந்தயக்கீரை
    மணத்தக்காளி
    இறுதியில்
    கறிவேப்பிலை

    புளிச்சங்கீரை
    புதினாக் கீரை

-------------------------------------------------------------------------------------------------

பொன்னாங்கண்ணி  பொன்னிறம் கொண்டவளுக் அழகிய கண்கொண்ட சீதை

பசலை - கணவனைப் பிரிந்ததினால் பிரிவுத்துயரில் பசலை படர்ந்தவளாய் இருந்தாள்.

முசுமுசுக்கை குரங்காகிய (முசு) கைகளின் மூலமாய் தூதாக வளை(வளையம் - ரிங் - மோதிரம்) வந்தது.

வல்லாரை - அசுரர்களை;

சிறுகீரை - எளியவர்களான வானரங்கள் மற்றும் ராம லட்சுமணர்கள்

முருங்கை - தம்முடைய அழகிய கைகளினால்

அறுகீரை - அழித்தார்கள்..

கரிசலாங்கண்ணி - கரிய நிறமும் அழகிய கண்ணும் கொண்ட ராமன்,

குப்பைமேனி - மக்கள் மனதில் எழக்கூடிய சந்தேகங்கள் என்னும் குப்பைகளை எண்ணி,

ஆரை - ஆரணங்கு

அகத்தீக்கீரை - உளச்சுத்தி காட்ட உடலைத் தீக்கிரையாகச் சொன்னான்.

வெந்தயக்கீரை - வெந்த தங்கம் - புடம் போட்ட தங்கம் போட்ட வெளிப்பட்ட அவள் ,

மணத்தக்காளி - புகழாகிய நறுமணத்தை தக்க வைத்துக் கொண்டவளானாள்.

கறிவேப்பிலை - இறுதியில் அவள் கறிவேப்பிலையாய் வெறும் மணப் பொருளாய் மட்டுமே மாறிப்போனாள்.. ஓருரிமையும் இல்லாமல் போயிற்றவளுக்கு.,

புளிச்சக் கீரை - இது சொல்லிச் சொல்லிப் புளித்துப் போன கதை

புதினாக்கீரை - இன்னும் ஒரு புதிய வடிவில்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?

YAJNASENI S.B.P.GAYATHRI
Wonderful.Really Nice...I have enjoyed a lot...