பந்தயப்பொருள்!

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பந்தயப்பொருள்!

தாமரை
Administrator
திரௌபதி இருமுறை பந்தயப்பொருளாக இருந்திருக்கிறாள்.

அவளின் தந்தை விற்போட்டியில் பந்தயப்பொருளாக அவளை வைத்தான். அர்ஜூனன் வென்றெடுத்தான்.

தர்மன் சூதாட்டத்தில் அவளை பந்தயப்பொருளாக வைத்தான். சகுனி அவளை துரியோதனனுக்காக வென்றெடுத்தான்.

அப்பன் செய்தபோது வராத கோபம் கணவன் செய்தபோது வந்து விடுகிறது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பந்தயப்பொருள்!

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

உண்மைதான். இருப்பினும்...

திரௌபதியை அர்ஜுனனுக்காகவே ஈன்றான் துருபதன். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இச்சாதனையைச் செய்ய முடியாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே அந்தப் போட்டி. திரௌபதி அங்கே பந்தயப் பொருளாக இருந்தாலும், தகுந்த தலைவன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கவே அந்தப் போட்டி நடைபெற்றது. மேலும் கர்ணன் வென்றுவிடாமல் இருக்க திரௌபதியே அவனை மறுக்கும் உரிமையும் அவளுக்கு இருந்தது.

ஆனால், தர்மன் பிறருக்கு அடிமையாக தன் மனைவி திரௌபதியைப் பந்தயப் பொருளாக வைக்கிறான். இஙகே திரௌபதிக்கு எந்த உரிமையும் இல்லை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பெண் ஒரு பொருளாகக் காணப்பட்டாள் என்பது கண்கூடே.