அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

நலமாஹராஜன்
அக்னியின் வேண்டுகொளின்படி அர்ஜுனன் ஒரு முழு வனத்தோடு அதில் இருக்கும் மிருகங்களையும் எரித்தது சரியா? காந்தவ வனம் பாண்டவர்களின் பாதுகாப்பில் உள்ள வனம் அல்லவா, அதில் இருக்கும் மிருகங்களை இன்னொருவருக்காக எரிப்பது நியாம்தானா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

Mahesh
The duty of the King is to protect his subjects from the wild animals. So the Kings used to go on hunting to keep the wild animals in check. The Khandava vana was in the territory ruled by the Pandavas. So there is nothing wrong in Arjuna to go on hunting there.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

Arul Selva Perarasan
AdministratorOn Sun, May 10, 2015 at 3:53 PM, Mahesh [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
The duty of the King is to protect his subjects from the wild animals. So the Kings used to go on hunting to keep the wild animals in check. The Khandava vana was in the territory ruled by the Pandavas. So there is nothing wrong in Arjuna to go on hunting there.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp426p429.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

தாமரை
Administrator
In reply to this post by நலமாஹராஜன்
ஒரு வனத்தையே அதில் வாழும் உயிர்களுடன் எரிப்பது சரியா?

இப்படி ஒரு பொதுவான கேள்வி என்றால் தவறுதானோ எனத் தோன்றும். ஆனால் நல்லது மட்டும் கெட்டது ஆகியவற்றை அப்படி எளிதில் பிரித்து விட முடியாது.

கத்தி நல்லதா? கெட்டதா?

கத்தி நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல. அது யார் கையில் இருக்கிறது. அதை  எதற்காக பயன்படுத்துகிறோம். என்பதையெல்லாம் பொருத்தே அமைகிறது,

காண்டவ வனம் தக்சகன் போன்ற நாகங்களின் புகலிடமாய் இருந்தது, விஷ ஜந்துகள் நிறைந்த காட்டில் அவை கட்டுக்குள் இல்லாவிடில் உயிரிச் சமனிலை மாறிவிடும்.

காண்டவ வன எரிப்புக்குக் காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது, ஸ்வேதகி என்ற மன்னனின் கதை அது. அளவற்ற யாகங்கள் செய்த அந்த மன்னனால் அந்தணர்கள் அனைவரும் சோர்வடைந்த போதும் அவனின் யாக ஆசை தீரவில்லை. சிவனை நோக்கி தவமிருந்து அவரின் வரத்தினால் துர்வாசரின் துணையுடன் பனிரெண்டு வருட யாகம் செய்கிறான். அதுவும் அளவுக்கு மிஞ்சியதால் அக்னியின் தேஜஸ் குறைந்தது.

பிரம்மன் அக்னியிடம் , "ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையை போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய, எதிரிகள் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அது இப்போது எண்ணிலடங்கா உயிரங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், நீ உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களுடன் சென்று உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்." என்றான்.

1. இந்திரனே தேவர்களின் எதிரிகளின் புகலிடத்தைக் காக்கும் இக்கட்டில் இருந்தான் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். காண்டவ வனம் இருக்கும் வரை இந்திரனுக்கு அதில் விமோசனம் இல்லை.

2. விஷ ஜந்துகள் இந்திரப் பாதுகாப்பைப் பெற்றதால் உயிரிகளின் சமனிலை அவ்வனத்தில் இல்லாமல் போனது. கானகங்களில் வேட்டைகளாடி இந்த உயிரிச் சமனிலையை அரசர்கள் காப்பார்கள். காண்டவ வனம் இந்திரனால் பாதுகாக்கப்பட்டதால் அத்றகு வழியின்றி போனது.

ஆகவே காண்டவ வனத்தை எரிப்பது தவிர்க்க இயலாததாய் போனது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா ??

நலமஹாராஜன்
மிக அருமையான விளக்கம் . நன்றி திரு தாமரை