யாருக்கு அதிக மண்ணாசை?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

யாருக்கு அதிக மண்ணாசை?

தாமரை
Administrator
துரியோதனன் மண்ணாசை கொண்டவன் என்று பலரும் சொல்வார்கள்.

ஆனால் அவனின் குண வடிவமைப்பைப் பார்க்கும்பொழுது அவனுக்கு மண்ணாசை அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. அவன் பாண்டவர்களை  வெறுத்தான்.

கர்ணனுக்கு நாட்டையே கொடுத்த அவனால் பாண்டவர்களுக்கு ஒரு ஊசி முனை அளவு கூட இடம் கொடுக்க மனமில்லை. காரணம் தன் புகழை மறைப்பவர்களாக பாண்டவர்களை அவன் கருதினான்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பாண்டவருக்கு நாடு பிரித்துக் கொடுத்தாயிற்று. அவர்கள்  நகரம் எழுப்பி முடிசூடி திக்விஜயம் சென்று வெற்றிகள் ஈட்டி, சக்கரவர்த்தியாகவே தர்மன் ஆகிவிட்டான்.

ஆனால் தான் அமர்ந்த சிங்காதனத்தை விட்டு இறங்க த்ருதராஸ்டிரனுக்கு மனமில்லை. தான் அரச பதவிக்கு உகந்தவனல்ல என த்ருதராஷ்டிரனுக்குத் தெரியும். தனக்கு பார்வை இல்லாததால் பாண்டு அரசனானதும் தெரியும். இருந்தும் துரியோதனன் வசம் அரசாட்சியை த்ருதராஷ்டிரன் ஆட்சியை ஒப்படைக்கவில்லை.

அதன் பின் சூதாட்டத்தில் வென்ற அனைத்து பகுதிகளும் த்ருதராஷ்டிரனாலேயே ஆளப்பட்டன.

மகன் மீது அளவு கடந்த பாசம் கொண்டவன் எனச் சொல்லிக் கொள்ளும் த்ருதராஷ்டிரன் மகனுக்கு பட்டாபிஷேகமே செய்யவில்லை. ஏன்?

அனைவரும் தனக்கு அடங்க்கி நடக்க வேண்டும். அதில் ஆட்சிக் கட்டிலில் தான் இருப்பதே சிறந்தது என்பது த்ருதராஷ்டிரனின் எண்ணமோ?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: யாருக்கு அதிக மண்ணாசை?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே,

மண்ணாசை என்பது அடுத்த நாட்டைப் பிடிப்பது மட்டுமல்ல. தன்னைப் போலவே தன் நாட்டின் மீது சம அளவு உரிமை பெற்ற ஒருவனுக்கு, அவனது பங்கைக் கொடுக்கக்கூடாது என்று நினைப்பதும் மண்ணாசை தானே.

ஒன்றுக்கு உதவாத இடத்தைக் கொடுத்தும், அது இந்திரப்பிரஸ்தம் என்று சொல்லும் அளவுக்கு அந்நிலத்தை வளமாக மாற்றிய யுதிஷ்டிரனிடம் இருந்து வஞ்சகமாக நாட்டைத் துரியோதனன் பறித்தது பாண்டவர்கள் மீது கொண்ட வெறுப்பால் மட்டுமல்ல, மண் மற்றும் பொன் மீது கொண்ட ஆசையினாலும்தானே.

இந்திரப் பிரஸ்தத்தைக் கண்டு துரியோதனன் பொறாமை கொண்டதும் மண் மற்றும் பொன்னாசையினால்தானே.

துரியோதனன் முடிசூடிக்கொள்ளவில்லையே தவிர, ஒரு மன்னனுக்குரிய அனைத்து அதிகாரங்களையும் அவன் கொண்டிருந்தான் என்பதை மகாபாரதத்தில் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருதராஷ்டிரன், பேரளவுக்கு {தற்போதுள்ள கவர்னர் பெற்றிருக்கும் அதிகாரம் போன்ற} அதிகாரம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான்.

மன்னன் ஒருவன், தான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்து, வனவாசம் புறப்பட எண்ணும்போது மகனுக்கு பட்டம் கட்டுவதோ, அல்லது அந்த மன்னன் இறந்த பிறகு, அவனது மகன் அரியணை ஏறுவதோ தானே அன்றைய வழக்கம்.

இது {துரியோதனன் அரியணை ஏறுவது} குறித்து விதுரரோ, பீஷ்மரோ எங்கும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. ஏன் துரியோதனனே கூட தனக்கு அரசகட்டில் வேண்டும் என்று கேட்டதாகத் தெரியவில்லை.

சில பல அரசியல் ஆதாயங்களுக்காகவும் துரியோதனன் மன்னனாகாமல் இருந்திருக்கலாம்!

திருதராஷ்டிரன் அரசகட்டில் மீது ஆசை கொண்டவனாகவே இருந்தாலும், துரியோதனனுக்காக எதையும் செய்பவனாகவே இருந்தான்.

எனவே, துரியோதனனுக்கு ஆட்சிக்கட்டிலை திருதராஷ்டிரன் கொடுக்காதது மண்ணாசையின் காரணமாக அல்ல என்பதும், துரியோதனனுக்குத்தான் மண்ணாசை நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதும்தான் எனது எண்ணம்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: யாருக்கு அதிக மண்ணாசை?

தாமரை
Administrator
எனக்கு இந்த சந்தேகம் வரக்காரணம் மகாபாரதக் கால அட்டவணை என நீங்கள் அளித்திருக்கும் கால அட்டவணைதான்,

பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது   :76
பீமனுக்கு வயது         :75
அர்ஜுனனுக்கு வயது    :74
நகுல சகாதேவர்களுகு   :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது       :92
கிருஷ்ணனுக்கு வயது   :74

அப்படியானால் போர் மூளும்போது துரியோதனனுக்கு வயது 88.

அப்படியானால் த்ருதராஷ்டிரனின் வயது குறைந்த பட்சம் 110 க்கு மேல் இருக்கும். அந்த காலத்தில் நிறைந்த வயது 120 என்பார்கள். ஆக தன் காலத்தின் எல்லையில் இருக்கும் த்ருதராஷ்டிரன், ஆட்சிக்கட்டிலிலேயே..

தர்மன் இந்திரப்பிரஸ்தம் ஆண்டது 36 ஆண்டுகள் அதன் பிறகு 36+13, 49 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக் கட்டிலில் உட்காரவில்லை துரியோதனன். கடைசி 13 ஆண்டுகள் அவன் ஏற விரும்பாததற்கு காரணம் இருக்கலாம். பாண்டவர்கள் அழிந்த பின்தான் தனக்கு நிம்மதி என வாழ்ந்தவன் அவன். ஆனால் அரசுக் கட்டிலில் துரியோதனனை உட்கார வைப்பது பற்றி த்ருதராஷ்டிரன் 36 ஆண்டுகள் யோசிக்கவே யோசிக்காததுதான் காரணம். ஆட்சியில் அமர்ந்தால் உடனே பாண்டவர் மீது படையெடுத்து அழிந்து போய்விடுவானோ என அஞ்சி இருக்கலாம் என்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும். ஆனால் அது உண்மையெனில் அவன் ஐந்து கிராமங்களைக் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். பாண்டவர்கள் முதல் தாக்குதல் செய்யமாட்டார்கள் என்பது அவருக்கு உறுதியாகவேத் தெரியும்.

அப்படி இருந்தால்

மண்ணாசை துரியோதனனின் பலவீனம் என்றிருந்தால் அவன் பீஷ்மர், துரோணர், கர்ணன் மூவரைக் கொண்டு உலகத்தையே அடைந்திருப்பான். ஆனால் கர்ணனின் திக் விஜயம் தவிர வேறு நாடு பிடிக்கும் போர்கள் அவன் செய்யவில்லையே. பாண்டவர்களுக்குத் தோன்றிய ராஜசூய யாகம் அவனுக்கு தோன்றவில்லை. மற்ற நாடுகளைப் பிடிக்கும் எண்ணமே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

த்ருதராஷ்டிரன் துரியோதனனின் பெயரைச் சொல்லி 50 ஆண்டுகள் நாட்டை ஆண்டிருக்கிறார்.

தான் குருடன் என்பதால் நாடாள தகுதியற்றவன் என்று சொல்லி பாண்டுவுக்கு அரச பட்டம் கட்டப்பட்டதில் அவர் காயப்பட்டார்.

அதன் பின் பாண்டு வனவாசம் போனதால் வேறுவழியின்றி அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற வேண்டியதானது.

அதன் பிறகு அவன் தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து யாரும் தன்னை இறக்கி விடாதபிடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

பாண்டவர் மேல் துரியோதனனுக்கு இருந்த வெறுப்பை த்ருதராஷ்டிரன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான் என்றே சொல்லவேண்டும்.

துரியோதனனுக்கு, துரியோதனனுக்கு  என்று சொல்லிச் சொல்லியே கடைசி வரை துரியோதனனுக்குத் தரவே இல்லை. அவரே அனுபவித்து விட்டுச் சென்றார்.

துரியோதனனுக்கு உண்மையில் மண்ணாசை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?