கிருஷ்ணன் -ஜாரசந்தன் போர்

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கிருஷ்ணன் -ஜாரசந்தன் போர்

arunkumarnonascii
ஐயா,

எதன் காரணமாக ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனுடன் போர் புரிந்து,பின்பு பின் வாங்கினார் ?

//
When Krishna killed his uncle Kamsa in Mathura, Jarasandha become enraged because of Krishna and the entire Yadava clan on seeing his two daughters being widowed. So, Jarasandha attacked Mathura and the Yadavas 17 times. Once his army included the Panchalas and the Kurus among other kings of India. While Krishna and the Yadavas survived the attacks, sensing danger Krishna relocated his capital city to Dwaraka. Dwaraka was an island and it was not possible for anyone to attack it at all.

Krishna began a campaign to diminish the power of Jarasandha, one by one eliminating his powerful allies like Kalyavana, Naraksura, Hansha, Dimbaka. Jarasandha participated in the Swayamvara of Draupadi, and after being unable to lift the bow, left the place.

மூலம் :விக்கி
http://en.wikipedia.org/wiki/Jarasandha
//

நன்றியுடன்
அருண்குமார்
திருச்சிற்றம்பலம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணன் -ஜாரசந்தன் போர்

Arul Selva Perarasan
Administrator
நண்பரே,

இது குறித்து கிருஷ்ணனே சொல்வதைப் பார்ப்போம்....

சபாபர்வத்தின் பகுதி 14-ஐப் படித்தால், இது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.

http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html
http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html

படித்துப் பாருங்கள்...
ஆங்கிலத்தில் ஒப்பிட்டுப் பார்க்க...
http://www.sacred-texts.com/hin/m02/m02014.htm என்ற சுட்டியைப் பயன்படுத்தவும்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணன் -ஜாரசந்தன் போர்

தாமரை
Administrator
In reply to this post by arunkumarnonascii
ஜராசந்தன் மகதத்தின் அரசன்... பேரரசன். அவன் நூற்றுக்கணக்கான மன்னர்களை வென்றவன்.

அவனது நாடு மிகப்பெரியது. அவன பலருடன் கூட்டும் சேர்ந்திருந்தான்.

17 முறை அவன் மதுரா மீது படையெடுத்தபோதும் ஒரு முறை கூட அவன் வென்றது கிடையாது.

வருடா வருடம் படையெடுப்பது அவனுடைய வழக்கம். முக்கிய தளபதிகளை இழந்த பின்பு பின்வாங்கி விடுவான்.

ஆனால் அவனை கொல்வது இயலாத காரியமாக இருந்தது. போரில் யாதவர்கள் கொத்துக் கொத்தாய் மடிவதைத் தவிர்க்கவே மதுராவை விட்டு துவாரகையை உருவாக்கி இடம் மாறினான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் ஜராசந்தனைக் கொன்றிருந்தால், அவன் சக்கரவர்த்தி ஆகி இருப்பான்.

அப்புறம் தர்மனும், துரியோதனனும் சிற்றரசர்கள் ஆகி இருப்பார்கள். மகாபாரதமே நடந்திருக்காது.

தர்மன் சக்ரவர்த்தி என பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். பகதத்தன், பீஷ்மகன் இப்படி பல பலம் மிக்க அரசர்கள் இருந்தார்கள். இவர்கள் ஜராசந்தனுடன் உடன்பாடு கொண்டவர்கள்.

ஆக, தர்மனை அனைவரும் சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ளவேண்டுமெனில், குறிப்பாக யாதவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில் அவன் வலிமை மிகுந்தவன் என அறியப்படல் வேண்டும்.

அதற்காகவென்றே ஜராசந்தனின் விதி பீமனின் கைகளுக்கு எழுதப்பட்டது.

இடும்பன், பகாசூரன், ஜராசந்தன். கீசகன், துரியோதனன், பீமன், த்ருத்ராஷ்டிரன் ஆகியோர் சமபலம் கொண்டவர்களாக மகாபாரதத்தில் கருதப்படுகிறார்கள்.

இதில் பீமன் கையால் ஐவர் மாண்டனர்.