புத்தக திருத்த ஆலோசனைகள்.

classic Classic list List threaded Threaded
58 messages Options
123
Reply | Threaded
Open this post in threaded view
|

புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
நான் உங்கள் மகாபாரத மொழிபெயர்ப்பை படிக்க ஆரம்பித்துள்ளேன். எனது கருத்துகளை இந்தத் திரியில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். உங்களுக்கு என் கருத்து சரி என்று தோன்றும் பட்சத்தில் திருத்தம் செய்து கொள்ளவும்.

1. ரோமஹர்ஷணர்

இது காரணப் பெயர். இவரின் உடல் முழுதும் ரோமங்க்கள் இருக்கும். அந்த ரோமங்கள் இவர் நடக்கும்பொழுது நிலை மின்னூட்டம் (ஸ்டேடிக் எலெக்ட்ரிசிட்டி) பெற்று சிலிர்த்து குத்திட்டு நிற்கும்.இதனால் ரோமம் ஹர்ஷணம் ஆகி நிற்பதால் ரோம ஹர்ஷணர். இவர் ரோமஹர்ஷண சூதர் எனவே அழைக்கப்படுபவர். இவரே புராணங்களைச் சொல்லும் பௌராணிகராக இருந்தார். இவர் பிராமணத் தாய்க்கும் ஷத்ரிய தந்தைக்கும் பிறந்தவர். வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது.

2. சூத முனிவர்

பலராமருக்கு மரியாதை தராத ரோமஹர்ஷணர் பலராமரால் கொல்லப்பட்ட பின் அவருடைய மகன் உக்ரஸ்வர சூதர் பௌராணிகர் ஆனார். இவர் சூத பௌராணிகர் என மிகப் பெரும் புகழ்பெற்றார். நீங்கள் இவரை சௌதி என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

3. பித்ரிக்கள்

பித்ருக்கள் என்றுதான் இது வரை நான் படித்திருக்கிறேன்.

4. சமந்த பஞ்சகம் ஒரு இடத்தில் சமந்த பஞ்சத்தில் என உள்ளது.Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

வைசம்பாயனர் என்ற பெயரை சபா பர்வம் முடியும் நிலை வரை வைசம்பாயணர் என்று மூன்று சுழி 'ண' வையே இட்டு வந்தேன். இது நான் வடமொழி அறியாததால் ஏற்பட்ட குறைபாடு. இன்னும் அந்தக் குறை என்னில் நீடிக்கிறது.

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பவை, நான் வடமொழி அறியாததால் மட்டும் வரும் பிழைகளல்ல. ஆங்கிலத்தில் இருந்து நேரடி ஒலிவடிவ மாற்றம் செய்வதாலேயே  பெயர்களில் இதுபோன்ற பிழைகள் ஏற்படுகின்றன. அவற்றில் பலவற்றை மாற்றிக் கொள்ளலாம்... கங்குலிக்கு இணங்காத சிலவற்றை மட்டும் மாற்ற இயலாது போகலாம்.

ஆங்கிலத்தில் கங்குலி "Ugrasrava, the son of Lomaharshana, surnamed Sauti, well-versed in the Puranas" என்று எழுதியிருக்கிறார். பாரதக் கதையைச் சொன்னது சூதர் என நான் பல பதிப்புகளில் படித்திருந்தாலும், ஆங்கில ஒலிவடிவத்திற்கு இணங்கி அப்படியே சௌதி என்று தந்திருக்கிறேன். தற்போது ஒரு இடத்தில் மட்டும் சௌதி என்றும் இட்டுவிட்டு {} அடைப்புக்குறிக்குள் {சூதர்} என்று இட்டிருக்கிறேன். வேறு பகுதிகளில் மாற்ற வேண்டாம் என்றிருக்கிறேன். கங்குலி மட்டுமின்றி மன்மதநாத தத்தரும் ஆங்கிலத்தில் சூதரைச் சௌதி என்றே சொல்லியிருக்கிறார். இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது தெரியவில்லை.

லோமஹர்ஷணர் {Lomaharshana} என்று கங்குலி ஏன் எழுதியிருக்கிறார் என்பது தெரியவில்லை. நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை கங்குலிக்கு இணங்கவில்லையென்றாலும், அப்பெயர்ச்சொல்லின் காரணம் கெட்டுப் போவதால், இங்கு கங்குலியில் இருந்து மாறுபடுவதில் தவறில்லை என்பதை ஏற்றுக் கொண்டு, அப்பெயரை மாற்றிவிடுகிறேன். சமந்தபஞ்சகத்தில் ஏற்பட்டிருக்கும் பிழை நான் தட்டெழுதியதில் ஏற்பட்டது. அதையும் திருத்திவிடுகிறேன்.

இது போன்ற பிழைகளையும், குறிப்பாக கருத்தில் ஏதேனும் பிழை இருந்தாலும் தெரிவிக்கவும், ஆய்ந்து பார்த்து திருத்திக் கொள்கிறேன்.

ஒவ்வொரு பதிவின் கீழேயும் கங்குலி அவர்கள் எழுதிய ஆங்கில பகுதியின் லிங்க் இருக்கிறது.

எந்தத் திருத்தமாக இருந்தாலும் அது கங்குலியின் அந்தப் பதிப்புக்கு குறைந்தபட்சமாவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சூதரின் தந்தையைப் பலராமர் கொன்றார் என்பது எனக்குப் புதிய தகவல். இந்தச் சம்பவம் எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டால் எனது ஆவல் தணியும். மேலும் இது போன்ற சம்பவங்கள் இருந்தாலும், இதே முழுமஹாபாரத விவாத மேடையில் தனித்திரி தொடங்கி நீங்களே தெரிவிக்கலாம் நண்பரே, இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பிழைதிருத்தங்களை இத்திரியிலேயே தொடருங்கள்... உங்களைப் பார்த்து, இன்னும் பலர் பிழை சுட்டிக் காட்டவும், புதிய தகவல்களுக்கு தனித்திரி தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் செய்யும் பிழை திருத்தங்களும், அளிக்கும் புதிய தகவல்களும் எனக்குப் பேருதவியாக இருக்கும்.

நன்றிReply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by தாமரை
ஒன்றை விட்டுவிட்டேன். பித்ரிக்கள் என்பதை பித்ருக்கள் என்று மாற்றிவிடுகிறேன்.Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
பலராமர் ரோமஹர்சணரைக் கொன்றது பாகவத புராணத்தில் வருவதாகும்.

புராணங்கள் பதினெட்டு. ஏன் பதினெட்டு என்று உங்களுக்குள் கேள்விகள் எழலாம்.

இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. சாத்வீகப் புராணங்கள். விஷ்ணுவை முதற்பொருளாகக் கொண்டவை - 6
2. இராஜஸ புராணங்கள். பிரம்மன், சூரியன் இன்னபிற படைப்புக் கடவுளை முதற்பொருளாகக் கொண்டவை - 6
3. தாமஸ புராணங்கள், சிவன், கந்தன் போன்ற சைவ புராணங்கள் - 6.

மொத்தம் பதினெட்டு புராணங்கள். எதற்காக இப்படி ஒன்றுடன் ஒன்று முரண்படவேண்டும்?

ஒரே புராணம் என்றால் அது பல வித திருத்தங்களுக்கு ஆளாகி மூலப்பொருள் சிதைந்துவிடும். புராணம் 18 ஆனாலும் அவற்றில் சொல்லப்பட்டவை ஒன்றே ஒன்றுதான். அதைச் சுற்றியே அனைத்துக் கதைகளும் பின்னப்பட்டிருக்கும். அனைத்தையும் கற்ற பின்னரே ஒருவன் முழுதான உண்மைப் பொருளை அறிய முடியும். காரணம் 18 புராணங்களையும் ஒரே மாதிரி யாராலும் திருத்தி எழுத இயலாது. ஆக ஒரே விஷயத்தை பல கோணங்களில் காட்டுவது என்பது புராணங்களின் அடிப்படை. வெறும் கதைகளாக படிக்க ஆரம்பித்து சிறிது சிறிதாக ஆழம் சென்று, தத்துவம் உணர்வதே புராணங்களின் அடிப்படை.

ஆனால் நம்மக்கள் அவற்றை வெறும் கதைகளாக மட்டுமே நினைவில் நிறுத்தி பல வித சமயங்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

நினைத்துப் பாருங்கள் ஒரே தத்துவத்தை 18 கோணங்களில் கற்று அலசினால் சரியான தத்துவம் கிடைக்கும். இன்று கணினிகளில் இருக்கும் எர்ரர் கரெக்சன் மெதடாலஜிகள் பிச்சை எடுக்க வேண்டும். 18 புராணங்களையும் ஒரே மாதிரி திருத்த இயலாது. ஆக புராணங்களில் நடக்கும் இடைச் செருகல்களை இதைக் கொண்டு எளிதில் களைந்து உண்மை பொருளை சரியாக அடையாளம் காணலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
அருமை! அருமை!

2014-12-10 21:57 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
பலராமர் ரோமஹர்சணரைக் கொன்றது பாகவத புராணத்தில் வருவதாகும்.

புராணங்கள் பதினெட்டு. ஏன் பதினெட்டு என்று உங்களுக்குள் கேள்விகள் எழலாம்.

இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. சாத்வீகப் புராணங்கள். விஷ்ணுவை முதற்பொருளாகக் கொண்டவை - 6
2. இராஜஸ புராணங்கள். பிரம்மன், சூரியன் இன்னபிற படைப்புக் கடவுளை முதற்பொருளாகக் கொண்டவை - 6
3. தாமஸ புராணங்கள், சிவன், கந்தன் போன்ற சைவ புராணங்கள் - 6.

மொத்தம் பதினெட்டு புராணங்கள். எதற்காக இப்படி ஒன்றுடன் ஒன்று முரண்படவேண்டும்?

ஒரே புராணம் என்றால் அது பல வித திருத்தங்களுக்கு ஆளாகி மூலப்பொருள் சிதைந்துவிடும். புராணம் 18 ஆனாலும் அவற்றில் சொல்லப்பட்டவை ஒன்றே ஒன்றுதான். அதைச் சுற்றியே அனைத்துக் கதைகளும் பின்னப்பட்டிருக்கும். அனைத்தையும் கற்ற பின்னரே ஒருவன் முழுதான உண்மைப் பொருளை அறிய முடியும். காரணம் 18 புராணங்களையும் ஒரே மாதிரி யாராலும் திருத்தி எழுத இயலாது. ஆக ஒரே விஷயத்தை பல கோணங்களில் காட்டுவது என்பது புராணங்களின் அடிப்படை. வெறும் கதைகளாக படிக்க ஆரம்பித்து சிறிது சிறிதாக ஆழம் சென்று, தத்துவம் உணர்வதே புராணங்களின் அடிப்படை.

ஆனால் நம்மக்கள் அவற்றை வெறும் கதைகளாக மட்டுமே நினைவில் நிறுத்தி பல வித சமயங்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

நினைத்துப் பாருங்கள் ஒரே தத்துவத்தை 18 கோணங்களில் கற்று அலசினால் சரியான தத்துவம் கிடைக்கும். இன்று கணினிகளில் இருக்கும் எர்ரர் கரெக்சன் மெதடாலஜிகள் பிச்சை எடுக்க வேண்டும். 18 புராணங்களையும் ஒரே மாதிரி திருத்த இயலாது. ஆக புராணங்களில் நடக்கும் இடைச் செருகல்களை இதைக் கொண்டு எளிதில் களைந்து உண்மை பொருளை சரியாக அடையாளம் காணலாம்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p402.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section19.html

மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர்.

http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section22.html

கேகய நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, பழைய நிலையை அடைய விரும்புபவர்களான அந்நிலத்தின் {கேகய நாட்டின்} ஐந்து பலமிக்கச் சகோதரர்கள் {கேகய இளவரசர்கள்}, போருக்குத் தயாராகப் பலமிக்க விற்களைத் தாங்கிக் கொண்டு, பிருதையின் மகன்களை {பாண்டவர்களை} இப்போது தொடர்ந்து வருகிறார்கள்.

எது சரி?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
http://sacred-texts.com/hin/m05/m05019.htm

And those tigers among men, the five royal brothers, the princes of Kekaya, hastened to Duryodhana with an Akshauhini of troops, and gladdened his heart.http://sacred-texts.com/hin/m05/m05022.htm

Deposed from the throne of the Kekaya land, and desirous of being reinstated thereon, the five mighty brothers from that land, wielding mighty bows, are now following the sons of Pritha ready to fight.

என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.

ஒரு வேளை கேகய நாட்டின் ஆட்சியில் இருக்கும் ஐந்து சகோதரர்கள் ஓர் அக்ஷௌஹிணி படையுடன் துரியோதனனுக்கும், ஆட்சியைவிட்டுத் துரத்தப்பட்ட ஐந்து சகோதரர்கள் சிறு படையுடன் பாண்டவர்கள் தரப்பிலும் போரிட்டிருப்பார்களோ என்னவோ....

கும்பகோணம் தமிழ்ப்பதிப்பில் 22ம் பகுதியில் கேகய இளவரசர்கள் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது. ஆனால் 19ம் பகுதியில் கேகய இளவரசர்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை.

இதில் குழப்பமே இருக்கிறது..2015-01-27 13:15 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section19.html

மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர்.

http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section22.html

கேகய நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, பழைய நிலையை அடைய விரும்புபவர்களான அந்நிலத்தின் {கேகய நாட்டின்} ஐந்து பலமிக்கச் சகோதரர்கள் {கேகய இளவரசர்கள்}, போருக்குத் தயாராகப் பலமிக்க விற்களைத் தாங்கிக் கொண்டு, பிருதையின் மகன்களை {பாண்டவர்களை} இப்போது தொடர்ந்து வருகிறார்கள்.

எது சரி?

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p413.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
கேகய நாட்டவர் இருபக்கமும் போரிட்டதாகவே யுத்த செய்திகள் சொல்கின்றன. நீங்கள் சொன்னது போல கேகயமும் பங்காளிச் சண்டை கொண்டதாக இருந்திருக்கலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
அப்படித்தான் இப்போதைக்கு நம்ப வேண்டியிருக்கிறது. பார்ப்போம், இது குறித்து வேறேதேனும் ஆய்விருக்கிறதா என்று!Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.

    [1] விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
ஆம்! அதைக் கவனித்தேன். மேலும் அதன் விளக்கமான [1] என்ற குறிப்பை ம.வீ.ரா. கும்பகோணம் பதிப்பில் இருந்து எடுத்தேன்.

2015-04-08 9:07 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.

    [1] விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.
If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p427.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
உமியற்ற எள் விதையாகவே {எள்ளுப்பதர்களாகவே} நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. - See more at: http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section161d.html#sthash.oO4NrUag.dpuf

இதில் பதப் பிரயோகம் தவறு.

வெற்று உமியாக உள்ளவற்றையே பதர் எங்கிறோம். உமி என்பது மேற்தோல் ஆகும். நெல் என்பது உமியும் அரிசியும் அல்லவா?

ஆகவே "விதையற்ற எள் உமியாகவே{எள்ளுப்பதர்களாகவே} நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. என்று மாற்றவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

ஆங்கிலத்தில் I characterised you all as sesame seeds without kernel என்று வருகிறது. Kernel என்றால் உமி Sesame seeds என்றால் எள் விதைகள். அதனால் உமியற்ற எள் விதை என்று மொழிபெயர்த்தேன். எள்ளுப் பதர் என்ற சொல்லை கும்பகோணம் பதிப்பில் இதே பகுதியில் கண்டேன். அதனால் அடைப்புக்குறிக்குள் {எள்ளுப்பதர்} என்று இட்டேன். இங்கே  நீங்கள் சொல்வது போலவே, கும்பகோணம் பதிப்பின் சொல்லே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், கங்குலியின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்கும்போது அப்படி வரவில்லை. எனவே அந்த வாக்கியத்தை வேறு மாதிரியாக மாற்றி அமைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் ஆலோசனை கூறினால் மகிழ்வேன்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
Kernal என்றால் a softer, usually edible part of a nut, seed, or fruit stone contained within its hard shell என்று பொருள். இது விதை, கொட்டை, பருப்பு என சொல்லப்படும்.

ஆகவே

உள்ளே பருப்பொன்றுமில்லா வெற்று எட்பதர்களாகவே நினைக்கிறேன் என்று எழுதினால் பொருத்தமாக இருக்கும்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
சரி அப்படியே திருத்திவிடுகிறேன் நண்பரே

2015-07-13 17:04 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
Kernal என்றால் a softer, usually edible part of a nut, seed, or fruit stone contained within its hard shell என்று பொருள். இது விதை, கொட்டை, பருப்பு என சொல்லப்படும்.

ஆகவே

உள்ளே பருப்பொன்றுமில்லா வெற்று எட்பதர்களாகவே நினைக்கிறேன் என்று எழுதினால் பொருத்தமாக இருக்கும்

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p489.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
முகப்பில் ஆய்வை வெளியிட்டதற்கு நன்றி. சில வல்லுனர்களின் பார்வைக்காவது இது சேரும் என்று மகிழ்ச்சி.

ஒரு திருத்தம் தேவை,...

கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன்விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறத்த அதன்கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html
அதாவது சந்திரனின் சுழலும் வேகம் சற்று மாறி இருக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் திடீரென அதிகரித்தது. பூமியின் மீது எரிகற்கள் விழுகின்றன. அவற்றில் சில மிகப் பெரியவை.

இவையெல்லாம் குறிப்பது என்னவென்றால் சந்திரனுக்கு மிகச் சமீபமாக வால் நட்சத்திரம் கடந்து போனது. அதன் தூசிகள் சந்திரனிலும் சூரியனிலும் விழுந்தன.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/08/When-did-mahabharata-war-happen.html#more

இதில் சூரியனிலும் தூசிகள் விழுந்தன எனத் தவறாக எழுதிவிட்டேன். அதை சந்திபின் வருமாறு மாற்றி விடவும்.

"இவையெல்லாம் குறிப்பது என்னவென்றால் சந்திரனுக்கு மிகச் சமீபமாக வால் நட்சத்திரம் கடந்து போனது. அதன் தூசிகள் சந்திரனிலும் பூமியிலும் விழுந்தன. மலைகளில் விழுந்தபோது மலைகள் உடைந்து விழுந்தன. கடல்களில் விழுந்த பொழுது சுனாமிகளால் கடல்கள் எல்லைகளைத் தாண்டி வந்தன."
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
In reply to this post by தாமரை

பெரும் மனிதன் ஒருவன் {உயர்ந்தோன்} செய்வதை எல்லாம், தாழ்ந்த மக்களும் செய்கிறார்கள் {இதர மக்கள் பின்பற்றுகிறார்கள்}. அவர்களால் (பெரும் மனிதர்களால்) அமைக்கப்பட்ட {நிர்ணயிக்கப்பட்ட} குறிக்கோள்களையே சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள் [2]. 3.21

    [2] இங்கே குறிப்பிடப்படும் Itaras "இதரர்" என்ற சொல் "பிறர்" என்ற பொருளைத் தராது; இழிந்தவர்கள் என்ற பொருளையே இங்குத் தரும் என்கிறார் கங்குலி.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-027.html#sthash.zOzVuJw5.dpuf

இதரர் என்ற சொல் நேர் எதிரான பொருளைத் தராது.

உதாரணமாக

அரசர் மற்றும் இதரர் என்றால் அரசனும், அடிமைகளும் என்று ஆகாது. ஆளப்படாத முனிவர்கள் உண்டு. ஆட்சியில் பங்கு கொள்ளும் அமைச்சர்களும், அதிகாரிகளும் உண்டு. அரசனே வணங்கக் கூடிய மாதா, பிதா, குருக்கள் உண்டு.

நல்லவர் மற்றும் இதரர் என்றால், நல்லவர் என உறுதியாக அறியப்பட்டவர் மற்றும் கெட்டவர் என அறியப்பட்டவர், நல்லவரா கெட்டவரா என வகுக்கப்பட இயலாதோர், நல்லது கெட்டதுகளில் இருந்து விலகி இருக்கும் ஞானிகள் என இன்னும் சிலரையும் சேரும்.

 நல்லவர் - கெட்டவர் எனச் சொல்ல, நல்லவர் - அல்லாதோர் என்று சொல்லுவோமே தவிர நல்லவர் - இதரர் எனச் சொல்லக் கூடாது.

பெரும்மனிதன் - இதரர் என்றால், பெரும்மனிதனாக முயற்சிப்போரையும் குறிக்கும். அதனால் இழிந்தவர் என்ற பொருள்தவறாகும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

தாமரை
Administrator
This post was updated on .
நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் அழிந்துவிடும். மேலும் அதனால் நான் சாதிகளில் [3] கலப்பை ஏற்படுத்தி, இந்த மக்களை அழித்தவனாவேன். 3.24

    [3] மூலத்தில் சாதிகள் என்ற சொல் இல்லை. saṅkarasya—Intermixture; ca—and; kartā—creator "ஸங்கரஸ்ய கர்தா" என்றே இருக்கிறது. இதற்குப் பாரதியார் "குழப்பத்தை ஆக்கியோன்" என்று உரை எழுதியிருக்கிறார். எனினும் "ஸங்கரஸ்ய கர்தா" என்பது கலப்பை ஏற்படுத்தியவன் என்ற பொருளைத் தரும் என்றே கருதுகிறேன். இதையே கங்குலி சாதிக்கலப்பு என்று கொண்டிருக்கிறார்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-027.html#sthash.zOzVuJw5.dpuf

சங்கர்ஷனன் என்ற சொல்லில் பொருளை தீர ஆராய வேண்டும்.

சங்கரன் என்ற பெயர் தோன்றியது சம்ஹாரம் என்ற சொல்லில் இருந்து. சம்ஹாரம் என்பது அழித்தல் என மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், அதன் ஆழ்ந்த பொருள் மாயையை அழித்தல் ஆகும்.

சம் - சமம். ஹாரம் - ஆக்குதல். உலகின் அனைத்து படைப்புகளும் பிரம்மனால் படைக்கப்பட்டன. பிரம்மனின் படைப்பின் மூலப்பொருள் சத் எனப்ப்டும் நித்யமானவை, ஞானமுள்ளவை அதாவது ஆன்மாக்கள் மற்றும் அசத் என்னும் நித்யமற்றவை, ஞானமற்றவை அதாவது ஜடப்பொருட்கள். நாம் அசடு என்று திட்டுகிறோமே அதன் பொருள் இதுதான். ஞானமற்றவன் என்று பொருள்.

பிரம்மன் என்பது காரணப்பெயர். பிரம்மையை, அதாவது மாயையை உண்டாக்குவதால் அவன் பிரம்மன். பிரம்மனின் படைப்புகள் என்பது வெறும் மாயையே என்பதால் பிரம்மனின் படைப்புக்கு நித்யத்துவம் கிடையாது. அதனால் பிரம்மனால் ஒரு காலத்திலும் சாகாவரம் அளிக்க இயல்வதில்லை.

இந்த மாயையை நீக்கி படைப்புகளை "சத்" மற்றும் "அசத்" துகளாக உண்மை உருவுக்கு கொண்டு வருதலையே சம் ஹாரம் என்கிறோம். இதனாலேயே தெய்வங்கள் தீய சக்திகளை சம்ஹாரம் செய்கின்றனர் எனச் சொல்கிறோம்.

சம்ஹாரத்தின் தலைவன் சங்கரன் எனப்படும் சிவன் ஆவார்.

விஷ்ணுவுக்கு ஐந்து வடிவங்கள் பாகவதத்தில் சொல்லப்படுகின்றன.

பர வாசுதேவன் - பரமபதம் எனப்படும் மோட்சம் பெற்றோர் மட்டும் செல்லக்கூடிய வைகுந்தத்தில் உள்ள இறைவன்

வியூக வாசுதேவன் - தேவர்கள், முனிவர்கள் மற்றும் பலர் சென்று இறைவனைக் காணக்கூடிய வைகுந்தத்தில் இருப்பவர்.

பிரத்யும்னர் : படைப்புத் தொழிலின் கர்த்தா. இவரின் அம்சமே பிரம்மனாயிற்று என்கிறது பாகவதம். பிரத்யும்னன் என்பது கிருஷ்ணனின் மகன் என்பதையும் கவனிக்க.

அனிருத்தர் : காக்கும் தொழிலின் அம்சம். இது நாம் இன்று வணங்கும் விஷ்ணுவின் அம்சம். அனிருத்தன்  என்பது கிருஷ்ணனின் பேரன் என்பதையும் கவனிக்க.

சங்கர்ஷணர் : அழிக்கும் தொழிலின் அம்சம். அழித்தல் என்பது மாயையை நீக்குதல் என்ற பொருளிலேயே வரும். சங்க்கர்ஷணரின் இரு அம்சங்கள் சிவன் மற்றும் ஆதிசேசன். பலராமரும் சங்கர்ஷணர் என்றே அறியப்படுவார்.

ஆக கிருஷ்ண அவதாரம் வாசுதேவன், சங்கர்ஷணர், அனிருத்தர் மற்றும் பிரத்யும்னர் என அனைத்தும் கூடிய முழு அவதாரமாகும்.

இப்பொழுது தொடங்கிய விஷயத்திற்கு வருவோம்.

பானையை மண்ணிலிருந்து செய்தல் படைத்தல். பானையை மண்ணாக்குதல் அழித்தல்
பொன்னும் செம்பும் கலந்து நகை உருவாக்கல் படைத்தல். அதை உருக்கி பொன் தனியாக செம்பு தனியாக பிரித்தல் அழித்தல்.

"ஸங்கரஸ்ய கர்தா" என்றால் படைப்புகள் அழியக் காரணமானவன் என்று பொருளே தவிர, கலப்பை உண்டாக்கி அழிப்பவனல்ல.

இப்பொழுது உங்கள் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

"நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் அழிந்துவிடும். மேலும் அதனால் நான் சாதிகளில் [3] கலப்பை ஏற்படுத்தி, இந்த மக்களை அழித்தவனாவேன்"

நான் செயல்படவில்லை என்றால் பிரம்ம மாயையினால் படைக்கப்பட்ட இவை அனைத்தும் அழிந்துவிடும். சத் மற்றும் அசத் ஆகிய மூலப்பொருள்கள் தங்களின் படைப்பு வடிவை இழந்து மூல வடிவை அடைந்து சத் - சித்துக்களாக பிரம்மத்தில் ஒடுங்கும். நான் அதற்கு காரணமானவனாக ஆகிவிடுவேன்.

இதன் மூலம் கண்ணன் சொல்வது, இறைவன் தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருப்பதனாலே உலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு படைப்பும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அந்த மூலப்பொருளை பின்பற்றி.

உதாரணமாக கல்லுக்குள் இருக்கும் அணுவில் இருக்கும் எலெக்ட்ரான் சுழன்று கொண்டே இருக்கிறது. கல் பூமியுடன் இணைந்து சுழன்று சூரியனைச் சுற்ற சூரியன் பால்வெளியைச் சுற்ற, பால் வெளி பேரண்டத்தில் எதையோ மையமாக கொண்டு சுற்றுகிறது. அதாவது ஜடப்பொருட்களும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. மண் கல்லாகிறது. கல் மலையாகிறது. மலை அரிக்கப்பட்டு மண்ணாகிறது. மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இறைவன் இயங்குகிறான். இறைவனைப் பின்பற்றி படைப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

இந்த பேரண்டத்தில் உள்ள அத்தனையும் இந்த இயக்கத்தால் உருவானவையே. அறிவியல் ரீதியாக பார்த்தால் அணுவின் உள்ளே உள்ள அணுத்துகள்களே மூலம். இவற்றின் இயக்கம் நின்று போனால் என்ன ஆகும்?

இந்த துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு-விலக்கு விசைகள் அகலும். அனைத்தும் சிறிய சக்தியற்ற ஒரே மாதிரியான துகள்களாக ஆகும். தங்கமோ - இரும்போ இருக்காது. அவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலெக் ட்ரான், புரோட்டான், நியூட்ரான் கூடி உருவாக வேண்டும். ஆனால் இயக்கம் இல்லாமல் ஈர்ப்பு விசை இல்லை. அதனால் தங்கமும் இரும்பும் இருக்காதே. இப்படி இயக்கம் நிற்பதால் பேரண்டம் வெறும் தூசிமண்டலமாக மட்டுமே இருக்கும். அந்த விசையாக, சக்தியாக இறைவன் ஒவ்வொரு அணுவின் துகள்களிலும் இருந்து இயங்க்குகிறான்.

 நான் உலகமாகப் போகிறேன் என்பதே பிரம்ம படைத்தலை ஆரம்பிக்கும் பொழுது எடுத்துக் கொள்ளும் சங்கல்பம் அதாவது உறுதி ஆகும்.

இதையே கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்கிறார். நான் இயங்காவிட்டால் படைப்புகள் அழியும் காரணமாகி விடுவேன் என்கிறார். சாதிக் கலப்பு என்ற வார்த்தை இங்கே தேவையில்லை.

இதை கம்பராமாயணத்தின் முதல் பாடலில் அருமையாகச் சொல்வார் கம்பர்

  "உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
      நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
   அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
      தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே."

உலகம் யாவையும் தாம் உள்ளதாகவே ஆக்குகிறானாம் இறைவன். ஒவ்வொரு அணுவிலும் இறைவன் தான் உள்ளதாகவே ஆக்கினான். உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தினாலே ஆக்கினான் அதாவது சங்கல்பத்தினாலே ஆக்கினான் என்ற வேத வரிகளை தாமுளவாக்கல் என்ற ஒரே வார்த்தையில் கம்பர் சொல்லி விடுகிறார்.

நிலைபெறுத்தல் என்பதை காத்தல் என்று சொல்ல முடியாது. இதுவும் அறிவியல் உண்மைதான். ரிலேடிவிடி தியரி. ஓடும் ரெயிலுக்கு நாம் நிலையாகத் தெரியவேண்டுமானால் நாம் அதனுடன் ஓடவேண்டும். அதேசமயம் ஓடும் ரயிலினுள் உள்ள நாம் அமைதியாக இருந்தாலும் வெளியில் உள்ளோருக்கு நகர்ந்து கொண்டே இருப்போம். ஆக நிலைபெறுதல் என்பது இயற்கையோடு ஒத்திசைந்து இயங்குவது என்று பொருளே தவிர யாரோ வந்து காப்பாற்றுவார்கள் என்று பொருளல்ல. நிலைபெறுத்தல் என்றால் தன்னுடைய இயல்பான நிலையை அடைதல் என்றாகும்.

nilai.jpg

அழித்தல் என்று அடுத்து சொல்லவில்லை கம்பர். நீக்கல் என்கிறார். மாயையை நீக்குதல். பொருள்களுக்கிடையேயான பேதத்தை நீக்கி அவற்றை மூலப்பொருளாகவே ஆக்கிவிடுதல். அதையே நீக்கல் என்போம். மண்ணில் நீர் சேர்த்து பிள்ளையார் செய்தல் ஆக்கல். பூசையும் படையலும் செய்தல் நிலைபெறுத்தல். அதே நீரில் பிள்ளையாரை கரைத்து மண்ணாக்கி விடுதல் நீக்கல். இம்மூன்றையும் இறைவன் செய்கிறான். எப்படி செய்கிறான்?

 நீங்கலா அலகிலா விளையாட்டுடையான்.

1. அதை நீங்காமல் செய்கிறான். அதாவது இறைவன் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறான். கிருஷ்ணர் சொன்னது இதுதான்.

2. அலகில்லாத அளவிற்கு செய்கிறான். எதையும் நாம் அளந்து பார்க்க முயற்சிப்போம். தங்கத்தை கிராமில் அளக்கிறோம். குடி நீரை லிட்டரில் அளக்கிறோம். ஆற்று நீரை டி.எம்.சி என்ற அலகால் அளக்கிறோம். கடலை கன சதுர கிலோ மீட்டராக அளக்கிறோம். நட்சத்திரங்களுக்கிடையேயான தூரத்தை ஒளி ஆண்டுகளில் அளக்கிறோம். இப்படி எத்தனையோ அலகுகள் கொண்டு அளக்கிறோம். ஆனால் இறைவனிப் விளையாட்டை அளக்க அலகுகள் இல்லை. அது அளக்க இயலா விளையாட்டு.

அலகிலா விளையாட்டுடையான் என்ற சொல்லே அனிருத்தன் என்பதன் பொருளும் ஆகும். என் மகனுக்கு இப்பெயரையே வைத்துள்ளேன். காப்பது என்பது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய காரியம் என்பதால் அது அலகிலா விளையாட்டு.

இந்த நீக்கலைச் செய்பவனே சங்கர்ஷண கர்த்தா ஆவன். படைப்பினால் உண்டாகிய மாறுதல்களை நீக்கி, மூலப்பொருளாக ஆக்குபவன். அதனால் சாதிக்கலப்பை உருவாக்குதல் என்ற பதப் பிரயோகம் தவறானதாகும்.Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
நண்பரே! கங்குலி எழுதியதை மொழி பெயர்ப்பதால், அவர் வார்த்தைகளில் நாம் கைவைக்க இயலாது. ஆனால், அடிக்குறிப்பில், மொழிபெயர்ப்பில் ஏற்பட்டிருக்கும் பிழையைச் சுட்டிக் காட்டலாம். அவ்வகையில், நீங்கள் மேலே சுட்டிக்காட்டிருப்பது போல சாதிக்கலப்பு என்ற வார்த்தை இங்கு தேவையில்லாதது என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். அதே வேளையில், "ஸங்கரஸ்ய கர்தா" என்றால் படைப்புகள் அழியக் காரணமானவன் என்ற பொருள் என்றும் மேற்கோளில் திருத்திவிடுகிறேன். இவற்றைச் சுட்டிக்காட்டி, விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே.

2015-09-11 8:45 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் அழிந்துவிடும். மேலும் அதனால் நான் சாதிகளில் [3] கலப்பை ஏற்படுத்தி, இந்த மக்களை அழித்தவனாவேன். 3.24

    [3] மூலத்தில் சாதிகள் என்ற சொல் இல்லை. saṅkarasya—Intermixture; ca—and; kartā—creator "ஸங்கரஸ்ய கர்தா" என்றே இருக்கிறது. இதற்குப் பாரதியார் "குழப்பத்தை ஆக்கியோன்" என்று உரை எழுதியிருக்கிறார். எனினும் "ஸங்கரஸ்ய கர்தா" என்பது கலப்பை ஏற்படுத்தியவன் என்ற பொருளைத் தரும் என்றே கருதுகிறேன். இதையே கங்குலி சாதிக்கலப்பு என்று கொண்டிருக்கிறார்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-027.html#sthash.zOzVuJw5.dpuf

சங்கர்ஷனன் என்ற சொல்லில் பொருளை தீர ஆராய வேண்டும்.

சங்கரன் என்ற பெயர் தோன்றியது சம்ஹாரம் என்ற சொல்லில் இருந்து. சம்ஹாரம் என்பது அழித்தல் என மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், அதன் ஆழ்ந்த பொருள் மாயையை அழித்தல் ஆகும்.

சம் - சமம். ஹாரம் - ஆக்குதல். உலகின் அனைத்து படைப்புகளும் பிரம்மனால் படைக்கப்பட்டன. பிரம்மனின் படைப்பின் மூலப்பொருள் சத் எனப்ப்டும் நித்யமானவை, ஞானமுள்ளவை அதாவது ஆன்மாக்கள் மற்றும் அசத் என்னும் நித்யமற்றவை, ஞானமற்றவை அதாவது ஜடப்பொருட்கள். நாம் அசடு என்று திட்டுகிறோமே அதன் பொருள் இதுதான். ஞானமற்றவன் என்று பொருள்.

பிரம்மன் என்பது காரணப்பெயர். பிரம்மையை, அதாவது மாயையை உண்டாக்குவதால் அவன் பிரம்மன். பிரம்மனின் படைப்புகள் என்பது வெறும் மாயையே என்பதால் பிரம்மனின் படைப்புக்கு நித்யத்துவம் கிடையாது. அதனால் பிரம்மனால் ஒரு காலத்திலும் சாகாவரம் அளிக்க இயல்வதில்லை.

இந்த மாயையை நீக்கி படைப்புகளை "சத்" மற்றும் "அசத்" துகளாக உண்மை உருவுக்கு கொண்டு வருதலையே சம் ஹாரம் என்கிறோம். இதனாலேயே தெய்வங்கள் தீய சக்திகளை சம்ஹாரம் செய்கின்றனர் எனச் சொல்கிறோம்.

சம்ஹாரத்தின் தலைவன் சங்கரன் எனப்படும் சிவன் ஆவார்.

விஷ்ணுவுக்கு ஐந்து வடிவங்கள் பாகவதத்தில் சொல்லப்படுகின்றன.

பர வாசுதேவன் - பரமபதம் எனப்படும் மோட்சம் பெற்றோர் மட்டும் செல்லக்கூடிய வைகுந்தத்தில் உள்ள இறைவன்

வியூக வாசுதேவன் - தேவர்கள், முனிவர்கள் மற்றும் பலர் சென்று இறைவனைக் காணக்கூடிய வைகுந்தத்தில் இருப்பவர்.

பிரத்யும்னர் : படைப்புத் தொழிலின் கர்த்தா. இவரின் அம்சமே பிரம்மனாயிற்று என்கிறது பாகவதம். பிரத்யும்னன் என்பது கிருஷ்ணனின் மகன் என்பதையும் கவனிக்க.

அனிருத்தர் : காக்கும் தொழிலின் அம்சம். இது நாம் இன்று வணங்கும் விஷ்ணுவின் அம்சம். அனிருத்தன்  என்பது கிருஷ்ணனின் பேரன் என்பதையும் கவனிக்க.

சங்கர்ஷணர் : அழிக்கும் தொழிலின் அம்சம். அழித்தல் என்பது மாயையை நீக்குதல் என்ற பொருளிலேயே வரும். சங்க்கர்ஷணரின் இரு அம்சங்கள் சிவன் மற்றும் ஆதிசேசன். பலராமரும் சங்கர்ஷணர் என்றே அறியப்படுவார்.

ஆக கிருஷ்ண அவதாரம் வாசுதேவன், சங்கர்ஷணர், அனிருத்தர் மற்றும் பிரத்யும்னர் என அனைத்தும் கூடிய முழு அவதாரமாகும்.

இப்பொழுது தொடங்கிய விஷயத்திற்கு வருவோம்.

பானையை மண்ணிலிருந்து செய்தல் படைத்தல். பானையை மண்ணாக்குதல் அழித்தல்
பொன்னும் செம்பும் கலந்து நகை உருவாக்கல் படைத்தல். அதை உருக்கி பொன் தனியாக செம்பு தனியாக பிரித்தல் அழித்தல்.

"ஸங்கரஸ்ய கர்தா" என்றால் படைப்புகள் அழியக் காரணமானவன் என்று பொருளே தவிர, கலப்பை உண்டாக்கி அழிப்பவனல்ல.

இப்பொழுது உங்கள் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

"நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் அழிந்துவிடும். மேலும் அதனால் நான் சாதிகளில் [3] கலப்பை ஏற்படுத்தி, இந்த மக்களை அழித்தவனாவேன்"

நான் செயல்படவில்லை என்றால் பிரம்ம மாயையினால் படைக்கப்பட்ட இவை அனைத்தும் அழிந்துவிடும். சத் மற்றும் அசத் ஆகிய மூலப்பொருள்கள் தங்களின் படைப்பு வடிவை இழந்து மூல வடிவை அடைந்து சத் - சித்துக்களாக பிரம்மத்தில் ஒடுங்கும். நான் அதற்கு காரணமானவனாக ஆகிவிடுவேன்.

இதன் மூலம் கண்ணன் சொல்வது, இறைவன் தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருப்பதனாலே உலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு படைப்பும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அந்த மூலப்பொருளை பின்பற்றி.

உதாரணமாக கல்லுக்குள் இருக்கும் அணுவில் இருக்கும் எலெக்ட்ரான் சுழன்று கொண்டே இருக்கிறது. கல் பூமியுடன் இணைந்து சுழன்று சூரியனைச் சுற்ற சூரியன் பால்வெளியைச் சுற்ற, பால் வெளி பேரண்டத்தில் எதையோ மையமாக கொண்டு சுற்றுகிறது. அதாவது ஜடப்பொருட்களும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. மண் கல்லாகிறது. கல் மலையாகிறது. மலை அரிக்கப்பட்டு மண்ணாகிறது. மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இறைவன் இயங்குகிறான். இறைவனைப் பின்பற்றி படைப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

இந்த பேரண்டத்தில் உள்ள அத்தனையும் இந்த இயக்கத்தால் உருவானவையே. அறிவியல் ரீதியாக பார்த்தால் அணுவின் உள்ளே உள்ள அணுத்துகள்களே மூலம். இவற்றின் இயக்கம் நின்று போனால் என்ன ஆகும்?

இந்த துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு-விலக்கு விசைகள் அகலும். அனைத்தும் சிறிய சக்தியற்ற ஒரே மாதிரியான துகள்களாக ஆகும். தங்கமோ - இரும்போ இருக்காது. அவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலெக் ட்ரான், புரோட்டான், நியூட்ரான் கூடி உருவாக வேண்டும். ஆனால் இயக்கம் இல்லாமல் ஈர்ப்பு விசை இல்லை. அதனால் தங்கமும் இரும்பும் இருக்காதே. இப்படி இயக்கம் நிற்பதால் பேரண்டம் வெறும் தூசிமண்டலமாக மட்டுமே இருக்கும். அந்த விசையாக, சக்தியாக இறைவன் ஒவ்வொரு அணுவின் துகள்களிலும் இருந்து இயங்க்குகிறான்.

 நான் உலகமாகப் போகிறேன் என்பதே பிரம்ம படைத்தலை ஆரம்பிக்கும் பொழுது எடுத்துக் கொள்ளும் சங்கல்பம் அதாவது உறுதி ஆகும்.

இதையே கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்கிறார். நான் இயங்காவிட்டால் படைப்புகள் அழியும் காரணமாகி விடுவேன் என்கிறார். சாதிக் கலப்பு என்ற வார்த்தை இங்க்கே தேவையில்லை.
If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p536.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by தாமரை
நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் இரண்டு சுலோகங்களின் அடிக்குறிப்பிலும், சில  திருத்தங்களைச் செய்திருக்கிறேன் நண்பரே. பார்த்துவிட்டு பிழையிருப்பின் மீண்டும் சுட்டிக் காட்டுங்கள்.

2015-09-11 16:07 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>: