இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

classic Classic list List threaded Threaded
11 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

Raja
அர்ஜுனன் பல திவ்ய அஸ்திரங்களை பெறும் முன்னரே, கர்ணனை இரு முறை  நேருக்கு நேர் போரில் வென்று இருந்த போதிலும், இந்திரன் கர்ணனிடம்  கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?
கர்ணனிடம் ஏதேனும் திவ்ய அஸ்திரங்கள் இருந்ததா ? கவச குண்டலங்கள் இருந்த போதும் கர்ணன் சித்திரசேனனிடம் புறமுதுகிட்டது ஏன் ? கவச குண்டலங்கள் இருந்த போதும் அர்ஜுனன் கர்ணனை வென்றது எப்படி?  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

கவசமும் குண்டலங்களும் அமிர்தத்தால் ஆனவை. அது கர்ணனின் உடலில் இருக்கும் வரை அவனைக் கொல்ல முடியாது. அதனாலேயே இந்திரன் அவற்றை இரந்து கேட்கிறான். கர்ணனை தேவர்கள் ஏமாற்றியதாக ஆகக்கூடாத என்பதற்காகவே சூரியனும் முன்பே கர்ணனுக்கு இந்திரனின் நோக்கத்தை முன்னறிவிக்கிறான்.

கவசகுண்டலங்களால் அவனது இறப்பைத்தான் தடுக்க முடியுமே தவிர, வீழ்ச்சியைத் தவிர்க்க முடியாது. மேலும் இங்கே கண்ணன் கர்ணன் அப்படி வீழ்வதை விரும்பவில்லை. இறப்பதையே விரும்புகிறான். கர்ணனின் இலட்சியமே அர்ஜுனனைவிடத் தான் பெரிய வீரன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே. அதற்கான வாய்ப்பினை கண்ணன் கர்ணனுக்கு அளிக்கிறான்.

நண்பரே இது போன்ற விஷயங்களில் மேலோட்டமாகவோ, உணர்வசப்பட்டோ சிந்தப்பதை விட அறம் என்ற நோக்கில் சிந்திப்பதே சிறந்தது. அறம் நுட்பமானது. நான் சொன்ன விளக்கங்களைவிட அதிகமான விளக்கங்கள் இருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கிறோம். அவ்வளவுதான்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-10-06 12:59 GMT+05:30 Raja [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
அர்ஜுனன் பல திவ்ய அஸ்திரங்களை பெறும் முன்னரே, கர்ணனை இரு முறை  நேருக்கு நேர் போரில் வென்று இருந்த போதிலும், இந்திரன் கர்ணனிடம்  கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?
கர்ணனிடம் ஏதேனும் திவ்ய அஸ்திரங்கள் இருந்ததா ? கவச குண்டலங்கள் இருந்த போதும் கர்ணன் சித்திரசேனனிடம் புறமுதுகிட்டது ஏன் ? கவச குண்டலங்கள் இருந்த போதும் அர்ஜுனன் கர்ணனை வென்றது எப்படி?  

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp371.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

Raja
நண்பரே,
               வனவாச காலத்தில் அர்ஜுனன் பல திவ்ய அஸ்திரங்களை பல தேவர்களிடமிருந்து பெற்றதாக அறிய முடிகிறது. இது போல் கர்ணன் ஏதேனும் திவ்ய அஸ்திரங்களை பெற்றதாக தகவல் உண்டா ?
விராட யுத்தத்தில் அர்ஜுனன் தனியொருவனாக கௌரவர்களை வெற்றி பெற்றானெனில், அர்ஜுனன் பீஷ்மரை விட மிகச் சிறந்த வீரனா ?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

R.MANIKKAVEL
//விராட யுத்தத்தில் அர்ஜுனன் தனியொருவனாக கௌரவர்களை வெற்றி பெற்றானெனில், அர்ஜுனன் பீஷ்மரை விட மிகச் சிறந்த வீரனா ?//

வெற்றித்தோல்வி என்பது காலம், சூழ்நிலை போன்ற புறக்காரணிகளை கொண்டு அமைவது அதற்கும் வீரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீரம் என்பது தன் முனைப்பு.

சிறைக்கைதியாக இருந்த சுபாஷ் சந்திரபோஸ், சிறையில் இருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்து தோல்வி அடைந்தார் ஆனாலும் அவர்தான் ஆங்கிலேயர் கண்ணுக்கு வீரன்.

பிதாமகன் பீஷ்மர் விராட யுத்தத்தில் தோற்றதால் வீரன் இல்லை என்று பொருள் இல்லை. கண்ணன்தான் கடவுள் என்று தெரிந்தபின்பும் கண்ணனை ஆயுதம் ஏந்த வைக்கிறேன் என்று ஆயுதம் ஏந்த வைத்தார்பாருங்கள் அதுதான் வீரம்.

சிகண்டி தன்னை கொல்லப்பிறந்தவன் என்று தெரிந்தபின்பும் அவனுக்கு தனுர்வேதம் கற்றுக்கொடுத்தார் பாருங்கள் அதுதான் வீரும். வெற்றியும் தோல்வியும் காலம் சூழல் கொடுப்பது. கடமையின் பலன் என்றும் சொல்லலாம். கடமையை செய்வதுதான் வீரம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

தாமரை
Administrator
சில விஷயங்களை அப்படி நடந்திராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்தால் புரியும்.

கர்ணனின் கவச குண்டலங்களைப் பெறாமல் இருந்திருந்தால் கர்ணன் வென்றிருப்பான் என்ற வாதம் தவறு. அவன் இறந்திருக்க மாட்டான்.

அவனைச் செயலிழக்க வைத்துவிட்டு பீமனுக்கும் துரியோதனனுக்கும் யுத்தம் உண்டாகி இருக்கும் அவ்வளவுதான்.

கர்ணன் இறக்காமல் துரியோதனன் இறந்திருந்தால் இரு வாய்ப்புகள் உண்டு

1. கர்ணன் முழுமையாக இருந்து ஆட்சி பீடம் ஏறி இருக்கலாம். இந்திரபிரஸ்தத்தின் அரசனாக கர்ணனின் மகனே பதவியேற்கிறான். (வ்ருஷகேது). இது கர்ண துரியோதன நட்பிற்கு மிகப் பெரிய இழுக்காக இருக்கும் என்பதால் கர்ணன் வாழவும் இயலாமல், சாகவும் இயலாமல் தவித்திருக்க வேண்டியதாகி இருக்கும்.

2. கர்ணனின் தலை துண்டிக்கப்பட்டு தலையும் முண்டமும் தனித்தனியே இராகு கேதுக்கள் போல் ஆகி இருக்கும்.

இரண்டுமே கடைசியில் கர்ணனுக்கு இழுக்காகவே முடிந்திருக்கும்.

உதாரணமாக அஸ்வத்தாமன் உயிருடன் கையில் பிரம்மாஸ்திரம் கொண்டிருந்த போதும் துரியோதனன் வீழ்த்தப்படுகிறான் எனில், அதே கதைதான் கர்ணனுக்கும் உண்டாகி இருக்கும். கர்ணன் - அஸ்வத்தாமன் ஒப்பீடு உங்களுக்கு உண்மையைக் காட்டும்.

கர்ணன் இறந்ததால் தான் இறவாப் புகழ் பெற்றான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

Arul Selva Perarasan
Administrator
ஆம்! அருமை நண்பரே

2014-10-11 12:30 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
சில விஷயங்களை அப்படி நடந்திராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்தால் புரியும்.

கர்ணனின் கவச குண்டலங்களைப் பெறாமல் இருந்திருந்தால் கர்ணன் வென்றிருப்பான் என்ற வாதம் தவறு. அவன் இறந்திருக்க மாட்டான்.

அவனைச் செயலிழக்க வைத்துவிட்டு பீமனுக்கும் துரியோதனனுக்கும் யுத்தம் உண்டாகி இருக்கும் அவ்வளவுதான்.

கர்ணன் இறக்காமல் துரியோதனன் இறந்திருந்தால் இரு வாய்ப்புகள் உண்டு

1. கர்ணன் முழுமையாக இருந்து ஆட்சி பீடம் ஏறி இருக்கலாம். இந்திரபிரஸ்தத்தின் அரசனாக கர்ணனின் மகனே பதவியேற்கிறான். (வ்ருஷகேது). இது கர்ண துரியோதன நட்பிற்கு மிகப் பெரிய இழுக்காக இருக்கும் என்பதால் கர்ணன் வாழவும் இயலாமல், சாகவும் இயலாமல் தவித்திருக்க வேண்டியதாகி இருக்கும்.

2. கர்ணனின் தலை துண்டிக்கப்பட்டு தலையும் முண்டமும் தனித்தனியே இராகு கேதுக்கள் போல் ஆகி இருக்கும்.

இரண்டுமே கடைசியில் கர்ணனுக்கு இழுக்காகவே முடிந்திருக்கும்.

உதாரணமாக அஸ்வத்தாமன் உயிருடன் கையில் பிரம்மாஸ்திரம் கொண்டிருந்த போதும் துரியோதனன் வீழ்த்தப்படுகிறான் எனில், அதே கதைதான் கர்ணனுக்கும் உண்டாகி இருக்கும். கர்ணன் - அஸ்வத்தாமன் ஒப்பீடு உங்களுக்கு உண்மையைக் காட்டும்.

கர்ணன் இறந்ததால் தான் இறவாப் புகழ் பெற்றான்.

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp371p379.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

muniyaraj
In reply to this post by Arul Selva Perarasan
por enpathu verathuku mattume sulchi alla but pandavar and kirishnan sulchi purichu ventrana ithu vetri alla
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

தாமரை
Administrator
சூழ்ச்சியால் மட்டுமே பாண்டவர் வென்றதாய் உங்கள் பதில் சொன்னாலும்..

அர்ச்சுனனை கர்ணன் எப்பொழுது வென்றான் எனச் சொல்லி இருந்தால் சிறப்பாக இருக்கும்.

கர்ணனை கொல்ல மட்டுமே கண்ணன் சிலகாரியங்களை செய்ய வேண்டி இருந்தது. வெல்ல அல்ல.

14 ஆம் நாள் போரில் பீமனிடம் கர்ணன் எத்தனை முறை தோற்றோடினான் என எண்ணிப் பார்த்துவிட்டு பேசவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

muniyaraj
thamrai karnan yepothum evan kiyttai yum thorka villai bemanukku uyir picha koduthavan athu 1st therijukonka illa maha paratham nalla padichutu vanga
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

muniyaraj
In reply to this post by தாமரை
nillal solluvathum unmai entral porkalam yen kannan vanthar manithar poril avarukku enna velai ayutham enthamal yen sulchi purichi gouravarkal thorkadithanar bethamagar beshmar maveran ipadi kolla pattar
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?

தாமரை
Administrator
In reply to this post by muniyaraj
முனியராஜ் அவர்களே...

பதினான்காம்  நாள் யுத்தத்தில் என்னென்ன நடந்தது தெரியுமா?

கர்ணன் பீமனால் 7 முறை தோற்கடித்தான்.

குருக்ஷேத்திரப் போருக்கு முன்பாக அர்ஜுனனும் கர்ணனும் இரண்டு முறை நேருக்கு நேராக போரிட்டனர்:

(1) திரௌபதியை அர்ஜுனன் மணமுடித்த பின்னர் நிகழ்ந்த யுத்தம்,
(2) அஞ்ஞாத வாசம் (யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கை)மேற்கொண்டிருந்த பாண்டவர்களைக் கண்டறிவதற்காக நிகழ்ந்த விராட யுத்தம்.

இந்த இரண்டிலும் அர்ஜுனனே வெற்றி வாகை சூடினான். திரௌபதியை மணந்த பின்னர், நிகழ்ந்த யுத்தத்தில் கர்ணன், துரியோதனன் உட்பட பல்வேறு மன்னர்களை அர்ஜுனனும் பீமனும் மட்டும் இணைந்து தோற்கடித்தனர்.

விராட யுத்தத்தில் அர்ஜுனன் தனி ஆளாக நின்று, கர்ணன், துரியோதனன், பீஷ்மர், துரோணர், உட்பட அனைத்து குரு வம்ச தலைவர்களையும் வெற்றி கொண்டான்.

இவை போதாதா, அர்ஜுனன் கர்ணனைக் காட்டிலும் சிறந்த வீரன் என்பதை நிரூபிப்பதற்கு? இருப்பினும், மேலும் மூன்று
நிகழ்ச்சிகளைக் காண்போம்.

(1) துரோணருக்கு குரு தட்சணை செலுத்துவதற்காக பெரும்படையுடன் பாஞ்சால தேசத்தின் துருபதனை தாக்கிய
கர்ணனும் துரியோதனனும் தோல்வியைத் தழுவினர். ஆனால் அதே துருபதனுடன் நிகழ்ந்த போரில், படைகள் ஏதுமின்றி,
பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வர் மட்டும் தனியாகச் சென்று வெற்றி வாகை சூடினர்.

(2) துவைதவனத்தில் கந்தர்வர்களுடன் நடைபெற்ற போரில் கர்ணன் புறமுதுகிட்டு வெளியேற, துரியோதனன் சிறைப்படுத்தப்பட்டான். ஆனால் யுதிஷ்டிரரின் கட்டளைப்படி துரியோதனனை விடுவிப்பதற்காக கந்தர்வர்களுடன் போர் புரிந்த அர்ஜுனன் வெற்றியை ருசித்தான்.

(3) அர்ஜுனனின் மகனான அபிமன்யுவால்கூட கர்ணன் தோற்கடிக்கப்பட்டவன். அபிமன்யு தனி ஆளாக குரு
வம்சத்தினர் அனைவரையும் தோற்கடிக்க, அதனால் பெருத்த அவமானமடைந்த கர்ணன் இதர மாவீரர்களுடன் இணைந்து கூட்டாக அபிமன்யுவைக் கொன்றான்; தனிப்பட்ட ரீதியில் அபிமன்யுவை சமாளிக்கும் திறன் கர்ணனுக்கு இல்லாமல் போனது. இந்நிகழ்ச்சி கர்ணனுக்கு பெருத்த அவப்பெயரைப் பெற்றுத் தந்தது.