பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

classic Classic list List threaded Threaded
25 messages Options
12
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
ராதையின் மகன் என்பது கர்ணனே. மேலும் நண்பர் இரமேஷ் அவர்கள் குறிப்பிடுவது கர்ண பர்வத்தில் கிருஷ்ணன் நேரடியாகவே கர்ணனிடம் பேசும் காட்சியாகும்.


2016-07-24 11:21 GMT+05:30 eelathavan [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
துரியனின் 99 சகோதரர்களில் கர்ணன் என்ற பெயரை உடையவனும் இருந்தான்.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p820.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Ramesh
In reply to this post by eelathavan
துரியோதனனுக்கு கர்ணன் என்ற சகோதரன் இருப்பது உண்மைதான், அனால் கிருஷ்ணன் சூர்ய புத்திரனான கர்ணனை பார்த்துதான் “ உன்னுடைய ஆலோசனையை கேட்டுத்தானே துரியன் பீமனுக்கு விஷம் கொடுத்தான் அப்பொழுது எங்கே போயிற்று நீ சொன்ன தர்மம் ? “ என்று கேட்கிறான்.


மேலும் இந்த கேள்வி  கர்ணன் அர்ஜுனனோடு செய்த இறுதி யுத்தத்தின் போது கிருஷ்ணனால் கர்ணனிடம் கேட்கப்பட்டதாகும்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Ramesh
In reply to this post by Arul Selva Perarasan
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே,

 தங்களது பதிலை கவனிக்காமலே, நானும் ஒரு பதிலை பதிவிட்டு விட்டேன். பிறகுதான் தங்கள் பதிலை படித்தேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
பரவாயில்லை. அதனாலென்ன. 😊


2016-07-25 10:14 GMT+05:30 Ramesh [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே,

 தங்களது பதிலை கவனிக்காமலே, நானும் ஒரு பதிலை பதிவிட்டு விட்டேன். பிறகுதான் தங்கள் பதிலை படித்தேன்.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p823.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

தாமரை
Administrator
விஷம் கொடுத்த காலகட்டம் கௌரவர்களும் பாண்டவர்களும் குருகுல வாசம் செல்லும் முன்பு என்பதுதான் இடிக்கிறது.

அப்படியெனில் கர்ணன் அத்தினாபுர அரண்மனையில் துரியோதனனுக்கு நண்பனாக இல்லாவிட்டாலும் ஒரு பணியாளனாக இருந்து கொண்டு  வந்திருந்தால் மட்டுமே, முக்கியமாக சகுனியுடன் தொடர்புள்ளவனாக இருந்திருந்தால் மட்டுமே சதியில் பங்கெடுத்து இருக்க முடியும்.

அதாவது, கிருபரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டே அரண்மனையில் பணியாற்றி இருக்க வேண்டும். அவன் திறமை கண்டு சகுனி இளவரசர்களுடன் அவனை நெருங்கிப் பழக வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்க வேண்டும். முக்கியமாக பாண்டவர் வரவிற்கு பின்....

அதனால் கௌரவர்கள் கிருபரிடம் குருகுல வாசம் சென்றபோது அவர்களுடனேயே கர்ணன் கிருபரிடம் சேர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியே துரோணருடனும் துரியோதனனின் பணியாளனாகவே தொடர்ந்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.

கிருபரிடம் செல்லும் முன்பு சூரியனை மானசீக குருவாக கொண்டு பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அரங்கப் போட்டிக்குப் பின் பரசுராமரிடம் சென்றிருக்க வேண்டும்.

கர்ணனின் ஆரம்ப காலம் இப்படித் தெளிவில்லாமல்தான் மஹாபாரதத்தில் இருக்கிறது. சில மஹாபாரத கதைகளில் பீஷ்மரால் கர்ணன் மகத நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அரங்கப் போட்டிக்கு மகத நாட்டில் இருந்து கர்ணன் வந்ததாகக் கொண்டால் கர்ணனை அடையாளம் தெரியாமல், பின்பு துரியோதனன் கண்டுகொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
12