பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

classic Classic list List threaded Threaded
25 messages Options
12
Reply | Threaded
Open this post in threaded view
|

பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Raja
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
பிறகு ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாரிக்கொண்டனர். அதே நேரத்தில் அந்தத் தீய துரியோதனன், பீமனை ஒழிக்க எண்ணி, உணவில் கடும் நஞ்சைக் கலந்தான். நாவில் தேனையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன், வேகமாக எழுந்து, பீமனிடம் நட்பு பாராட்டி, நஞ்சு கலந்த உணவைக் கொடுத்தான். உணவைக் கொடுத்தவிட்டு, தான் தனது காரியத்தை ஈடேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இதயத்தால் மகிழ்ந்தான். see more at : http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section128.html

On Tue, Sep 30, 2014 at 4:50 PM, Raja [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by Raja
அதற்கு அடுத்த பகுதியையும் நோக்கவும்

சில காலம் கழித்து, மறுபடியும் துரியோதனன் பீமனின் உணவில் புத்தம்புதிய கடும் விஷத்தைக் கலந்தான். ஆனால், பாண்டவர்கள் மீது யுயுத்சு (திருதராஷ்டிரனுக்கு வைசிய மனைவியின் மூலம் பிறந்தவன்) கொண்ட நட்பினால், அந்தக் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான். இருப்பினும் விருகோதரன் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை விழுங்கி, முழுவதுமாகச் செரித்தும் விட்டான். அந்தக் கடும் விஷத்தால் பீமனின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.

பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் கூடி பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர். அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரரின் ஆலோசனைப்படி அவர்கள் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர். see more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section129.html

2014-09-30 21:08 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>:
பிறகு ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாரிக்கொண்டனர். அதே நேரத்தில் அந்தத் தீய துரியோதனன், பீமனை ஒழிக்க எண்ணி, உணவில் கடும் நஞ்சைக் கலந்தான். நாவில் தேனையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன், வேகமாக எழுந்து, பீமனிடம் நட்பு பாராட்டி, நஞ்சு கலந்த உணவைக் கொடுத்தான். உணவைக் கொடுத்தவிட்டு, தான் தனது காரியத்தை ஈடேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இதயத்தால் மகிழ்ந்தான். see more at : http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section128.html

On Tue, Sep 30, 2014 at 4:50 PM, Raja [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Raja
// பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் கூடி பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர். //

நண்பரே, மேற்காணும் வரிகளிலிருந்து கர்ணனும் அந்த திட்டத்தில் ஈடுபட்டிருப்பான், என எடுத்து கொள்ளலாமா ?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
நஞ்சூட்டியதில் அவனுக்கு பங்கு என்று மேற்கண்ட வாசகங்களை வைத்துச் சொல்ல முடியாது. ஆனால் ஆதற்குப் பிறகு வகுக்கப்பட்ட பல தீய திட்டங்களில் அவனுக்கும் பங்குண்டு என்று கொள்ளலாம்!

2014-09-30 21:54 GMT+05:30 Raja [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
// பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் கூடி பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர். //

நண்பரே, மேற்காணும் வரிகளிலிருந்து கர்ணனும் அந்த திட்டத்தில் ஈடுபட்டிருப்பான், என எடுத்து கொள்ளலாமா ?

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p369.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

தாமரை
Administrator
This post was updated on .
In reply to this post by Raja
இங்கு புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. பீமனுக்கு விஷம் கொடுத்தது குருகுல வாசம் ஆரம்பிக்கும் முன்பு. கர்ணன் நட்பு உருவாவது குருகுல வாச முடிவில். எனவே பீமனுக்கு  நஞ்சளித்த பொழுது அதில் கர்ணனின் பங்கு கிடையாது,

இங்கு வரும் கர்ணன் என்பது கேள்விக்குரியது ஆகும். துச்சாதனன் என்பது கர்ணனாக தவறாக அச்சிடப்பட்டிருக்கலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

R.MANIKKAVEL
//ஓ! தெய்வமே {சூரியனே}, ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய்// என்று வனப்பர்வம்-300ல் வந்து உள்ளது கொண்டுப்பார்க்கும்போது, கர்ணன் துரோணரிடம் குருகுலத்தில் கல்விக்கற்று உள்ளான் என்றுதான் தெரிகின்றது. அப்போது அவன் (கர்ணன்) துரியோதனின் நண்பனாக இல்லாமல் இருந்தாலும் அந்த கூட்டத்தில் இருந்து பீமனைக்கொல்ல சதி செய்து இருக்கலாம் அல்லது அந்த சதிக்கு உடனாக இருக்காலம் என்றுக்கொள்ளலாம்.

கர்ணன் துரோணன் நட்பு அரங்கேற்றவேளைக்குப்பிறது பிரிக்கமுடியாத மற்றும் நன்றிக்கடன் நட்பாக மாறி உள்ளது. கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு என்பது துரியோதனன் கொண்ட நட்பு.  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
ஆதிபர்வம் பகுதி 129ல் வரும் கர்ணன் என்ற பதம் சந்தேகத்திற்குரியதென்றாலும், நண்பர் மாணிக்கவேல் சுட்டிக்காட்டும் வனபர்வம் பகுதி 300ல் வரும் செய்தி கர்ணன் வாயாலேயே வருவதாக இருப்பதால் இதில் சந்தேகங்கொள்ள இடமில்லையல்லவா?

2014-10-09 17:34 GMT+05:30 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
//ஓ! தெய்வமே {சூரியனே}, ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய்// என்று வனப்பர்வம்-300ல் வந்து உள்ளது கொண்டுப்பார்க்கும்போது, கர்ணன் துரோணரிடம் குருகுலத்தில் கல்விக்கற்று உள்ளான் என்றுதான் தெரிகின்றது. அப்போது அவன் (கர்ணன்) துரியோதனின் நண்பனாக இல்லாமல் இருந்தாலும் அந்த கூட்டத்தில் இருந்து பீமனைக்கொல்ல சதி செய்து இருக்கலாம் அல்லது அந்த சதிக்கு உடனாக இருக்காலம் என்றுக்கொள்ளலாம்.

கர்ணன் துரோணன் நட்பு அரங்கேற்றவேளைக்குப்பிறது பிரிக்கமுடியாத மற்றும் நன்றிக்கடன் நட்பாக மாறி உள்ளது. கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு என்பது துரியோதனன் கொண்ட நட்பு.  

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p375.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

தாமரை
Administrator
This post was updated on .
1. கர்ணன் துரோணரின் மாணவனாக  நஞ்சு கொடுத்த போது இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்பொழுது குருகுல வாசமே ஆரம்பிக்கவில்லை. துரோணர் கிருபரின் மனையில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். துரோணர் இருப்பது பீஷ்மருக்கே தெரியாத பட்சத்தில் கர்ணன் அவரிடம் குரு குலத்தவருடன் பாடம் கற்றான் என்பது இயலாத காரியம்.

2. கர்ணன் துரோணரின் மாணவனாக, குருகுலத்தில் ஏக காலத்தில் பயின்றிருந்தால், எந்த பயிற்சியிலும் அவன் பெயர் இடம் பெறாதது ஏன்? ஏகலைவனை அடையாளம் கண்ட துரோணர், கர்ணனை ஏன் அடையாளம் காணவில்லை?

3. நான் அறிந்த வரையில், அரச குலத்தவர் தவிர வேறு யாருக்கும் அஸ்திரவித்தைகளை துரோணர் பயிற்றுவிக்கவில்லை. அவர் கர்ணனுக்கு கற்றுத்தர மறுத்துவிடுகிறார். அதனால் கர்ணன் சூரியனையே குருவாகக் கொண்டு தன் விற்பயிற்சியை ஆரம்பிக்கிறான். பின்னர் பரசுராமரிடம் பிராமண வேடத்தில் சென்று கற்கிறான்.

4. கர்ணன் துரோணரின் குருகுலத்தில் கற்றிருந்தால் அவன் குல கோத்திரங்கள் கிருபர் முன்னரே அறிந்திருப்பார். அவர் கேட்டிருக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது.

5. கர்ணன் துரியோதனனுக்கு முன்பே அறிமுகம் ஆகியிருந்தால், துரியோதனனுக்கும் அவன் தேரோட்டி மகன் என்பது தெரிந்திருக்குமே.

குரு துரோணர், அரங்கேற்றத்திற்குப் பிறகு கர்ணன் அங்க மன்னன் என்ற முறையில் அவனைச் சீடனாக ஏற்று, திஷ்டதுய்மன் அவரிடன் கற்ற காலத்தில் சிறிது அஸ்திரப் பயிற்சிகள் அளித்திருக்கலாம்.

ஏனென்றால் அரங்கேற்ற வேளையில் திஷ்டதுய்மன் பிறக்கவே இல்லை. இருந்தாலும் துரோணர் அவனுக்கு குருவாக இருந்திருக்கிறார். அதனால் அரங்க்கேற்றத்திற்கு பின்னரும் துரோணர் அஸ்திரப் பயிற்சிகள் தந்து கொண்டுதான் இருந்தார் என்றே கொள்ள வேண்டும்.

பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்த பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார். அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section169.html#sthash.7XYmf7l2.dpuf
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே,

நஞ்சு கொடுத்தபோது கர்ணன் துரோணரின் சீடனாக இருந்திருக்கமாட்டேன். ஏன் பாண்டவர்களே இல்லைதான் அவர் மறைந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அப்போதும் துரியோதனன் அறிந்திருக்க நிறைய வாய்ப்புண்டு...

அடுத்து நான் மொழிபெயர்க்க இருக்கும் வனபர்வம் பகுதி 307 //And it came to pass that at this time a Suta named Adhiratha, who was a friend of Dhritarashtra, came to the river Ganga, accompanied by his wife.// என்று கர்ணனின் வளர்ப்புத் தந்தை அதிரதன் திருதராஷ்டிரனின் நண்பர் என்று காட்டப்படுகிறார்.

அப்படியிருக்கும்போது, திருதராஷ்டிரனின் நண்பரின் மகனை துரியோதனன் அறியாதிருந்திருப்பானா?

கர்ணன் துரோணரின் சீடனாக இருந்திருப்பான் என்பதற்கு ஆதிபர்வம் பகுதி 134ல் வரும் வரிகளைக் கவனியுங்கள்

//

விரிஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத சாதியில் வந்த ராதையின் மகன் (கர்ணன் {சூரியமைந்தன்}) ஆகியோர் துரோணருக்குச் சீடர்களானார்கள். ஆனால் அவர்கள் எல்லோரிலும், சூதப் பிள்ளையான கர்ணன் மட்டும் அர்ஜூனன் மேல் பொறாமை கொண்டு, அவனை அடிக்கடி எதிர்த்தான். துரியோதனனின் துணை கொண்டு பாண்டவர்களை எப்போதும் அவன் அவமதித்தான்.//

என்று தெளிவாக கர்ணனை ராதையின் மகன், சூத சாதிக் காரன் எனச் சுட்டுகிறார்கள். இங்கு கர்ணனையும் துரியோதனனின் தம்பியான விகர்ணனையும் குழப்பிக் கொள்ள இயலாதே. மேலும் அடுத்த வரியிலேயே பாருகள் சூதப்பிள்ளையான கர்ணன் மட்டும் என்று பெயர் சுட்டப்பட்டிருக்கிறது. மேலும் அவன் அர்ஜுனன் மீது பொறாமை கொண்டிருந்தான் என்றும் சுட்டப்பட்டிருக்கிறது. எனவே கர்ணன் துரோணரின் மாணவனாக இருந்திருக்கவே வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

மேலும் பல இடங்களில் கர்ணனின் பெயர்க்குறிப்புகள் வருகின்றனவே,

ராதையின் மகன் என்றும், ராதேயன் என்றும், சூத குலத்தவன் என்றும் அங்கும் இங்குக் குறிக்கப்பட்டே இருக்கிறான்.

உங்கள் ஆய்வில் இந்தக் கருத்துகளையும் கொண்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-10-11 10:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
1. கர்ணன் துரோணரின் மாணவனாக  நஞ்சு கொடுத்த போது இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்பொழுது குருகுல வாசமே ஆரம்பிக்கவில்லை. துரோணர் கிருபரின் மனையில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். துரோணர் இருப்பது பீஷ்மருக்கே தெரியாத பட்சத்தில் கர்ணன் அவரிடம் குரு குலத்தவருடன் பாடம் கற்றான் என்பது இயலாத காரியம்.

2. கர்ணன் துரோணரின் மாணவனாக, குருகுலத்தில் ஏக காலத்தில் பயின்றிருந்தால், எந்த பயிற்சியிலும் அவன் பெயர் இடம் பெறாதது ஏன்? ஏகலைவனை அடையாளம் கண்ட துரோணர், கர்ணனை ஏன் அடையாளம் காணவில்லை?

3. நான் அறிந்த வரையில், அரச குலத்தவர் தவிர வேறு யாருக்கும் அஸ்திரவித்தைகளை துரோணர் பயிற்றுவிக்கவில்லை. அவர் கர்ணனுக்கு கற்றுத்தர மறுத்துவிடுகிறார். அதனால் கர்ணன் சூரியனையே குருவாகக் கொண்டு தன் விற்பயிற்சியை ஆரம்பிக்கிறான். பின்னர் பரசுராமரிடம் பிராமண வேடத்தில் சென்று கற்கிறான்.

4. கர்ணன் துரோணரின் குருகுலத்தில் கற்றிருந்தால் அவன் குல கோத்திரங்கள் கிருபர் முன்னரே அறிந்திருப்பார். அவர் கேட்டிருக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது.

5. கர்ணன் துரியோதனனுக்கு முன்பே அறிமுகம் ஆகியிருந்தால், துரியோதனனுக்கும் அவன் தேரோட்டி மகன் என்பது தெரிந்திருக்குமே.

குரு துரோணர், அரங்கேற்றத்திற்குப் பிறகு கர்ணன் அங்க மன்னன் என்ற முறையில் அவனைச் சீடனாக ஏற்று, திஷ்டதுய்மன் அவரிடன் கற்ற காலத்தில் சிறிது அஸ்திரப் பயிற்சிகள் அளித்திருக்கலாம்.

ஏனென்றால் அரங்கேற்ற வேளையில் திஷ்டதுய்மன் பிறக்கவே இல்லை. இருந்தாலும் துரோணர் அவனுக்கு குருவாக இருந்திருக்கிறார். அதனால் அரங்க்கேற்றத்திற்கு பின்னரும் துரோணர் அஸ்திரப் பயிற்சிகள் தந்து கொண்டுதான் இருந்தார் என்றே கொள்ள வேண்டும்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p378.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

தாமரை
Administrator
1. அதிரதன் திருதராஷ்டிரனுக்கு நண்பனே என்றாலும் கூட கர்ணன் அரங்கேற்றக் களத்தில் அங்க மன்னனாக முடிசூட்டப்பட்ட பின்னரே அவன் அதிரதனின் மகன் என்பது அவர்களுக்கெல்லாம் வெளிப்படுகிறது. எனவே அந்த வகையில் முன்னரே துரியோதனன் கர்ணனை தந்தையின் நண்பரின் மகனாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் அவன் பாண்டவர்களின் நட்பை முன்பே பெற்றிருப்பான் என நினைக்கிறேன். அதனால் அதுவரை அவன் சூதன். ராதேயன் என்பது மட்டுமே அறியப்பட்டிருக்கிறான். அவனைப் பெற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

2. துரோணர் ஷத்ரியர்களுக்கு உரிய அஸ்திர வித்தைகளை கர்ணனுக்கு கற்பிக்கவில்லை என்றே கொள்ளலாம் என  நினைக்கிறேன், இல்லையெனில் கர்ணன் பரசுராமரை தேடிச் சென்றிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. துரோணரும் கர்ணனை அர்ச்சுனனுக்கு நிகராக வருபவன் எனக் கணிக்கவில்லை.

3. துரோணருக்கு முன்பே க்ருபரிடம் கர்ணன் வில்வித்தை கற்க ஆரம்பித்திருக்கலாம். கர்ணன் 16 வயது மூத்தவன் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவன் அங்க தேசத்திலிருந்து வில்வித்தை கற்க அஸ்தினாபுரம் வந்தவன். அதிரதனின் மகன் என்பதால் அவரே கிருபரிடம் செல் எனச் சொல்லி அனுப்பி இருக்க காரணம் உண்டு. எனவே அவன் துரியோதனாதிகள் கிருபரிடம் பாடம் கற்க ஆரம்பிக்கும் முன்பே கர்ணன் கிருபரின் மாணாக்கனாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அவன் சூதன் என்பதால் அவன் யார் மகன் என்பதைப் பற்றி கிருபர் கவனம் செலுத்தாமல் வில்வித்தையில் பயிற்சி கொடுத்திருக்கலாம். அஸ்திர பயிற்சி அளித்திருக்க மாட்டார். அதனாலேயே கர்ணனின் அஸ்திர சாமர்த்தியங்களை துரோணரோ, கிருபரோ முன்பே அறிந்திருக்கவில்லை எனக் கொள்ளலாம்.

4. இவைகளை ஒப்பிட்டு நோக்கும் பொழுது, கர்ணன் கிருபரிடமே முதலில் தன் பயிற்சியை ஆரம்பித்திருக்க வேண்டும். திவ்யாஸ்திரப் பயிற்சிகள் மறுக்கப்பட்டதால் அவற்றை சூரியனை குருவாகக் கொண்டு கற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் பரசுராமரிடம் சென்று அஸ்திரப்பயிற்சி, பிரம்மாஸ்திரம், பார்க்கவாஸ்திரம் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

அப்படியானால், முதல் நஞ்சு கலந்த போது கர்ணன் துரியோதனனின் நண்பனாக இல்லாமல் இருந்து, பின்னர் மற்ற பாலபருவச் சதிகளில் பங்கேற்று இருக்கலாம். அதுவும் கிருபர் இளவரசர்களுக்கு பாடம் ஆரம்பித்த பிறகு.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
சரிதான்! மறுப்பதற்கில்லை நண்பரே.2014-10-12 8:43 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:

http://x.2334454.n4.nabble.com/-tp366p382.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

R.MANIKKAVEL
வனப்பர்வம்-307 பகுதியில் வருவது இது.

//தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்//

இந்த பகுதிப்படி, குந்தி தனது மகன் கர்ணன் அதிரதனிடம் வளர்வதை முன்னமே அறிந்து இருக்கிறாள். பாண்டுவின் மனைவியானதாலும், குருகுலத்தின் முதல்மகன் தருமன் என்பதாலும் அவள் பாண்டவர் பக்கம் இருக்கிறாள். இரண்டு கர்ணனை தனது மகன் மூத்தவன் என்று தெரிவித்தால் தருமனுக்கும் பட்டம் பரிபோகும் நிலமை. இதைக்கருத்தில் கொண்டே அவள் ராஜதந்திரத்துடன் தனது மகன் வேறு இடத்தில் நலமாக இருக்கட்டும் என்று நினைக்கிறாள்.

மேல்கண்ட பாராவில் கர்ணன் துரோணர், கிருபர் பரசுராமர் மூவரிடமும் வில் வித்தை கற்று உள்ளான். துரோணர் அவனுக்கு வேதக்கல்வி தராமல் இருக்கலாம் ஆனால் ஆயுத கல்வி தந்து இருக்கின்றார். வேதக்கல்வியை அவன் சூரியன் இடம் படித்து இருக்கலாம். கர்ணன் துரோணரின் மாணவன் என்பது மறைவான ஒன்று இல்லை. முதலாலி மகனும், வாட்மேன் மகனும் ஒரே பள்ளியில் படிப்பதுபோல்தான், சூதனாகிய கர்ணனும், இளவரசனாகிய பீமனும் துரோணரிடம் படித்து உள்ளனர்.

ஏகலைவனிடம் கட்டைவிரல் வாங்கியது கல்வி குருகாணிக்கை மட்டும் இல்லை, அஸ்தினபுரிக்கு எதிரான மகதநாட்டுக்கு உடன்பட்ட வேடுவகுலத்தை சேர்ந்தவன் ஏகலைவன் என்பதால்தான் அவன் கட்டைவிரல் காணிக்கையாக வாங்கப்பட்டது.

நன்றி
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

muniyaraj
In reply to this post by Arul Selva Perarasan
arul selvam beman visam koduthathu kallivi payilum pothu apothu karnan thuriyothanan oruvarukku oruvar theriyathu apo eppadi inthamathi seyuvan karnan kodai vallal ipadi seyya mattan avan maviran story nalla padichu sollunga mrt ravi
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே நீங்கள் மகாபாரதத்தைக்கூடப் படிக்கத்தேவையில்லை. மேற்கண்ட விவாதத்தைப் படித்திருந்தீர்கள் என்றாலும் உங்களுக்குப் புரிந்திருக்கும். புரிந்து கொள்ளும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்பது நீங்கள் உங்கள் கருத்துகளை வைக்கும் தோரணையில் தெரிகிறது. விவாதங்களையாவது முழுமையாகப் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள். அர்த்தமற்ற கேள்விகள் கேட்பது உங்களுக்கும் நேர விரயம். எனக்கும் நேரவிரயம்.

இப்போதுதானே கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறீர்கள். விவாதங்களைக் கூர்ந்து கவனியுங்கள், பிறகு மகாபாரதத்திற்குள் நுழையுங்கள். அதன் பிறகும் நீங்கள் கேள்வி கேட்பீர்கள். ஆனால் அப்போது கேட்கும் கேள்விகள் அனைத்தும் வேறு விதமாக இருக்கும்.

On Tue, Oct 20, 2015 at 9:01 PM, muniyaraj [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
arul selvam beman visam koduthathu kallivi payilum pothu apothu karnan thuriyothanan oruvarukku oruvar theriyathu apo eppadi inthamathi seyuvan karnan kodai vallal ipadi seyya mattan avan maviran story nalla padichu sollunga mrt ravi

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p562.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

muniyaraj
nanpare nan padivittu than inge vanthiruken ninga mahaparatham patri fulla therinjutu  vanga
 
vivatha medai porutha varai pandavar tharapil pesuringa nan karnan tharappu pesurom ninga karnan patri therinjuttu pesunga
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

தாமரை
Administrator
 நண்பர் முனியராஜ் முழு விவாதத்தையும் படித்து விட்டு தன் வாதத்தை வைப்பது நலம்.  நான் ஏற்கனவே நீங்கள் சொன்ன கருத்தை விளக்கி அதை ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Ramesh
வணக்கம் நண்பரே

ஆதி பர்வத்தில் துரியன் பீமனுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் கர்ணனுக்கும் பங்கு உள்ளது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது உண்மைதான். அனால் கர்ணபர்வதில் பகுதி 91இல் கண்ணன் கர்ணனிடம் அவன் செய்த அதர்மங்களை ஒவ்வொன்றாக சுட்டிகாட்டும் பொழுது கர்ணனிடம் “ உன்னுடைய ஆலோசனையை கேட்டுத்தானே துரியன் பீமனுக்கு விஷம் கொடுத்தான் அப்பொழுது எங்கே போயிற்று நீ சொன்ன தர்மம் ? “ என்று கேட்கிறான்.

        // When the Kuru king (Duryodhana), acting under thy counsels, treated Bhimasena in that way with the aid of snakes and poisoned food, whither had this virtue of thine then gone? // (இது கங்குலியின் பதிப்பில் வரும் வரிகள்) thy counsels -என்றால் உன்னுடைய ஆலோசனைகள் என்ற அர்த்தமாகிறது, acting under thy counsels -என்றால் உன்னுடைய ஆலோசனைகளின் படி செய்தான் என்று அர்த்தமாகிறது.

        மேலும் ம.வீ.ராமானுஜாச்சாரியார் அவர்கள் பதிப்பிலும் அவ்வாறே குறிபிடப்பட்டுள்ளது. // அரசனான துரியோதனன் உன்னுடைய சம்மதின்மேல் பீமசேனனை சர்ப்பங்களாலும் விஷங்கலந்த போஜனங்களாலும் கொல்லமுயன்றானன்றோ, அப்பொழுது உனக்கு தர்மம் எங்கே போய்விட்டது? // (இது ம.வீ.ராமானுஜாச்சாரியார் பதிப்பில் வரும் வரிகள்)

        இங்கே “உன்னுடைய சம்மதின்மேல்” என்பதற்கு உன்னுடைய ஆலோசனையின்மேல் என்றே பொருள் கொள்ளவேண்டும். காரணம் துரியன் கர்ணனையும் கலந்து ஆலோசித்த பிறகே பீமனுக்கு விஷம் கொடுத்தான் என்ற கருத்தை விளக்கவே அவ்வரிகள் எழுதப்பட்டது.

        எனவே இதன் மூலம் பீமனுக்கு விஷம் கொடுத்ததில் கர்ணனுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அறிந்து கொள்ளலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

Ramesh
. // அரசனான துரியோதனன் உன்னுடைய சம்மதின்மேல் பீமசேனனை சர்ப்பங்களாலும் விஷங்கலந்த போஜனங்களாலும் கொல்லமுயன்றானன்றோ, அப்பொழுது உனக்கு தர்மம் எங்கே போய்விட்டது? //

இவ்விடத்தில் உன்னுடைய சம்மதத்தின் மேல் என்பதற்கு பதிலாக உன்னுடைய சம்மதின்மேல் என்று தவறாக டைப் செய்துள்ளேன், எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?

eelathavan
In reply to this post by R.MANIKKAVEL
துரியனின் 99 சகோதரர்களில் கர்ணன் என்ற பெயரை உடையவனும் இருந்தான்.
12