உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

தாமரை
Administrator
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? தன் நண்பணுக்காக உயிரையே தந்தானே?.

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா?

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டுச் சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்

இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர். அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்தியபோது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான். அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்களைக் கொடுத்தான். இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் கூட கர்ண துரியோதன நட்பை உயர்ந்ததாகக் கருத முடியாது. அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான். அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான். அவனுடைய அண்ணன் தம்பிகள் மனைவி மக்கள் என அனைவருக்கும் வழிகாட்டினான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு, நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன. கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை. இதனாலேயே கர்ண - துரியோதன நட்பை மிகச் சிறந்த நட்பாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே...

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

Arul Selva Perarasan
Administrator
நண்பரே உங்கள் கருத்தை வலைத்தளத்தின் முகப்பில் இடுகிறேன். இதற்கு ஏதாவது மறுப்பு வருகிறதா என்று பார்ப்போம். என்னளவில் உங்கள் நிலை சரியானதே. இதற்கு தெளிவான மாற்றுக் கருத்து வந்தால் அதையும் முகப்பில் வெளியிடலாம்.

நன்றி அருமையான பதிவு.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-09-25 15:02 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? தன் நண்பணுக்காக உயிரையே தந்தானே?.

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா?

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டுச் சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்

இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர். அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்தியபோது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான். அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்களைக் கொடுத்தான். இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் கூட கர்ண துரியோதன நட்பை உயர்ந்ததாகக் கருத முடியாது. அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான். அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான். அவனுடைய அண்ணன் தம்பிகள் மனைவி மக்கள் என அனைவருக்கும் வழிகாட்டினான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு, நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன. கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை. இதனாலேயே கர்ண - துரியோதன நட்பை மிகச் சிறந்த நட்பாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே...
If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp360.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

Parthasarathy
In reply to this post by தாமரை
நணபர் சரியாகத்தான் சொலலியிருக்கிறார். இக் காலத்தில் நட்பு எனபது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது / சித்தரிக்கப்படுகிறது. இந்த போலியான நட்புதான் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவனுக்கு தவறான பாதையைக் காட்டுகிறது. ஒரு நல்லவன் கெட்டவனி்டம் நட்பு கொண்டால் அவனை நல் வழிக்கு கொண்டு வரும் பொறுப்பு அந்நல்வனிடத்தில் உள்ளது. அவ்வாறு இல்லையெனில் அது நட்பே இல்லை. மேலும் அத்தீயவனின் சாயல் அந்நல்லவனுக்கும் ஏற்பட்டு அவனும் தீயவனாகி விடுவான். கர்ணன் நல்லவனாக இருந்திருந்தால் துரியோதனனை கண்டிப்பாக நல்வழிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நடந்தோ வேறு.. நண்பர் சொல்வதுபோல் துரியோதனனுக்கு கர்ணன் தேவைப்பட்டான். அதுதான் கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் என்பது என் கருத்து.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

தாமரை
Administrator
மையக் கருத்துகளை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி. நட்பின் சிறப்பு பற்றி பல பட்டிமன்றங்களில் பல அறிஞர்கள் விவாதிக்கின்றனர். அவற்றில் நான் கண்ட / கேட்ட சில பல முட்டாள்தனமான வாதங்களே எனது இந்த ஆய்வுக்கு காரணம். முக்கியமாக இது சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்ற உறவா நட்பா என்ற பட்டிமன்றத்தைக் கேட்டதால் வந்த பின்விளைவு. நண்பனாக கர்ணனையும், உறவினனாக கண்ணனையும் கொண்டு ஒரு ஒப்பீட்டு ஆய்வை ஆரம்பித்தேன். பல விஷயங்கள் வித்தியாசமாக விளங்கின. கண்ணன் அர்ச்சுனனின் உறவினனா? நண்பனா? என இரு கோணங்கள் கிடைத்தன. கண்ணன் அர்ச்சுன நட்பு என்ற கோணத்தில் பார்த்தபோது இந்த புதிய கோணம் கிடைத்தது.

இவற்றை முகநூலில் அய்யா பகிர்ந்த பொழுது சில நல்ல கேள்விகள் வந்தன. விளக்கங்கள் எழுத அவை இன்னும் வாய்ப்பு தந்தன. அவற்றை கூடிய விரைவில் அய்யா தொகுத்து இதனுடன் சேர்த்த, முழுத் தகவல்களையும் வெளிப்படுத்துவார் என்று எண்ணுகிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: உயர்ந்த நட்புக்கு உதாரணம்... !

Arul Selva Perarasan
Administrator
செய்யலாம் நண்பரே

2014-09-27 9:49 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
மையக் கருத்துகளை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி. நட்பின் சிறப்பு பற்றி பல பட்டிமன்றங்களில் பல அறிஞர்கள் விவாதிக்கின்றனர். அவற்றில் நான் கண்ட / கேட்ட சில பல முட்டாள்தனமான வாதங்களே எனது இந்த ஆய்வுக்கு காரணம். முக்கியமாக இது சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்ற உறவா நட்பா என்ற பட்டிமன்றத்தைக் கேட்டதால் வந்த பின்விளைவு. நண்பனாக கர்ணனையும், உறவினனாக கண்ணனையும் கொண்டு ஒரு ஒப்பீட்டு ஆய்வை ஆரம்பித்தேன். பல விஷயங்கள் வித்தியாசமாக விளங்கின. கண்ணன் அர்ச்சுனனின் உறவினனா? நண்பனா? என இரு கோணங்கள் கிடைத்தன. கண்ணன் அர்ச்சுன நட்பு என்ற கோணத்தில் பார்த்தபோது இந்த புதிய கோணம் கிடைத்தது.

இவற்றை முகநூலில் அய்யா பகிர்ந்த பொழுது சில நல்ல கேள்விகள் வந்தன. விளக்கங்கள் எழுத அவை இன்னும் வாய்ப்பு தந்தன. அவற்றை கூடிய விரைவில் அய்யா தொகுத்து இதனுடன் சேர்த்த, முழுத் தகவல்களையும் வெளிப்படுத்துவார் என்று எண்ணுகிறேன்.

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp360p364.html