அந்தணனை உயர்த்தி காட்டுவதன் நோக்கம்?

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அந்தணனை உயர்த்தி காட்டுவதன் நோக்கம்?

வெண்ணிலா
நான் வட இந்தியாவில் வசிக்கும் ஒரு தமிழ்ப்பெண்.

நான் ஒரு முறை எனது அலுவலக நண்பர்களுடன் மகாபாரதம் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்...
அப்பொழுது, ஒரு நண்பர் என்னிடம் "நீ எந்த மகாபாரதம், யாரால் இயற்றப்பட்ட மகாபாரதம் படித்துள்ளாய்?" என்று வினவினார். நான் இரண்டு மூன்று பெயர்களை உரைத்தேன். அவர், "நீ எந்த மகாபாரதம் படித்திருந்தாலும், எது உண்மையானது என்று உன்னால் கூற முடியுமா?" என்றார். பிறகு, "உண்மையான மகாபாரதம் என்று கூறப்படும் எதிலும், பிராமணர்களையும் அந்தணர்களையும் உயர்த்தியே காட்டுவர். காரணம், உண்மையான பாரதத்தை பிராமணர்களால் மாற்றி எழுதப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு பின்னர், அவர்கள் உண்மையான மகாபாரத நூலை எரித்துவிட்டனர்", என்று கூறினார்.

நான் இந்த website'இல் தொடரப்படும் மகாபாரதத்தை படித்து வருகிறேன். நான் படிக்க தொடங்கயதில் இருந்து "ஏன் பிராமணர்களையும் அந்தணர்களையும் எப்பொழுதும் உயர்வாக காட்ட வேண்டும்?" என்ற எண்ணம் வரும். மேலே நண்பர் கூறியபடி, காரணம் அதுவாக தான் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அந்தணனை உயர்த்தி காட்டுவதன் நோக்கம்?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே,

மகாபாரதத்தை இயற்றிய வியாசர் என்னதான் மீனவ சமுதாயத்தில் பிறந்தவராக இருந்தாலும் அந்தணராகவே வாழ்ந்தார். மூல மகாபாரதமே பிராமணர் எழுதியதுதான். அதைப் பாதுகாத்து, உரை நிகழ்த்திக் கொண்டிருந்தவர்களும் பிராமணர்களே. ஆனால் கதை க்ஷத்திரியர்களுடைய கதை. ஆங்காங்கே இடைசெருகல்கள் உண்டு என்பதை ஏற்கலாம். ஆனால் உண்மை மகாபாரதத்தை எரித்துவிட்டார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதில் அந்தணர் பெருமை பேசும் இடங்கள் பல உண்டு, ஆனால் அதில் சில நீதிக்கதைகளும் உண்டு. அந்தணர் என்பதைச் சாதியாகப் பார்த்தால் அதன் மீது காழ்ப்பே ஏற்படும். அந்தணர் எனப்பட்டோர் அறவோர், தவம் பயில்வோர், முனிவர்களாக வாழ்ந்தோர் என்று நாம் கொண்டோமேயானால், இது போன்ற உணர்ச்சிகள் எழாது.

இடைசெருகல் இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. நம்மிடையே இருக்கும் மகாபாரதம் சௌதி என்ற சூதர் சொன்னது.

வியாசர் மகாபாரதத்தைத் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, வியாசரின் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனர், பாம்புவேள்வி நடத்திக் கொண்டிருந்த ஜனமேஜயனுக்கு அதை உரைக்க, அங்கிருந்து கேட்ட சௌதி என்ற சூதர், நைமிசாரண்யத்தில் 12 வருட வேள்வி நடத்திக் கொண்டிருந்த சௌனகர் உட்பட்ட அந்தணர்களுக்குச் சொன்னதே இன்று நம்மிடம் இருக்கும் மகாபாரதம். கண்டிப்பாக இடைசெருகல்கள் உண்டு. ஆனால் இடைசெருகல்களிலும் பல தகவல்கள் சேந்தே வந்திருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல், இது நம் முன்னோர்களின் நினைவுத்திரட்டு என்றுதான் பார்க்க முடியும்.

//நீ எந்த மகாபாரதம் படித்திருந்தாலும், எது உண்மையானது என்று உன்னால் கூற முடியுமா?// என்று கேட்கிறார்கள் என்று சொன்னீர்கள்

கிசாரி மோகன் கங்குலி அவர்களால் ஆங்கிலத்தில் செய்யப்பட்ட மகாபாரதம், மூல மகாபாரதத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று பல பண்டிதர்களால் ஏற்கப்பட்டுள்ளது. அந்த மகாபாரதத்தை நாம் பெயர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் செய்யும் மகாபாரதம் உண்மையானதே.

மேலும், இதற்கு முன்பே ம.வீ.ராமானுஜாச்சாரியார் அவர்களால் முழு மஹாபாரதமும் வடமொழி மூல நூலில் இருந்து தமிழில் நேரடியாக மொழிமெயர்க்கப்பட்டுள்ளது. கங்குலி தவிர்த்திருக்கும் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. ம.வீ.ரா. அவர்கள்  வடமொழி புலமை கொண்டவர்களைக் கொண்டு அந்தப் பதிப்பைச் செய்தார். இரண்டு மூன்று பதிப்புகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவற்றை ஆய்வு செய்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாக அவர் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அது கும்பகோணம் மகாபாரதம் பதிப்பு என்று பெயர் பெற்றுள்ளது.

கங்குலியின் மொழிபெயர்ப்பில் எனக்கு ஏற்படும் சில சந்தேகங்களுக்கு, நான் கும்பகோணம் பதிப்பையே நாடுகிறேன். ஆனால் கங்குலியின் வரிகளையே அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்த்துவருகிறேன்.


2014-08-31 20:47 GMT+05:30 வெண்ணிலா [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
நான் வட இந்தியாவில் வசிக்கும் ஒரு தமிழ்ப்பெண்.

நான் ஒரு முறை எனது அலுவலக நண்பர்களுடன் மகாபாரதம் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்...
அப்பொழுது, ஒரு நண்பர் என்னிடம் "நீ எந்த மகாபாரதம், யாரால் இயற்றப்பட்ட மகாபாரதம் படித்துள்ளாய்?" என்று வினவினார். நான் இரண்டு மூன்று பெயர்களை உரைத்தேன். அவர், "நீ எந்த மகாபாரதம் படித்திருந்தாலும், எது உண்மையானது என்று உன்னால் கூற முடியுமா?" என்றார். பிறகு, "உண்மையான மகாபாரதம் என்று கூறப்படும் எதிலும், பிராமணர்களையும் அந்தணர்களையும் உயர்த்தியே காட்டுவர். காரணம், உண்மையான பாரதத்தை பிராமணர்களால் மாற்றி எழுதப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு பின்னர், அவர்கள் உண்மையான மகாபாரத நூலை எரித்துவிட்டனர்", என்று கூறினார்.

நான் இந்த website'இல் தொடரப்படும் மகாபாரதத்தை படித்து வருகிறேன். நான் படிக்க தொடங்கயதில் இருந்து "ஏன் பிராமணர்களையும் அந்தணர்களையும் எப்பொழுது உயர்வாக காட்ட வேண்டும்?" என்ற எண்ணம் வரும். மேலே நண்பர் கூறியபடி, காரணம் இதுவாக தான் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது...If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp345.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML