மாபாரதக் கதை மாந்தர்கள் தமிழராயிருப்பரோ?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மாபாரதக் கதை மாந்தர்கள் தமிழராயிருப்பரோ?

தமிழ் வள்ளுவர்
நமது நிகண்டுகளில் கூறப்பட்டுள்ள முதல், இடை, கடை வள்ளல்களைக் சற்று காண்போம்.

முதல்வள்ளல் -குமணன், சகரன், காரி, செம்பியன், துந்து மாரி, நளன், நிருதி.

இடைவள்ளல் -அக்குரன், அந்திமான், அரிச்சந்திரன், கர்ணன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன்.

கடைவள்ளல் -எழிலி, ஓரி, அதியமான், நள்ளி, பாரி, பேகன், மலையன்

இவற்றுள் சகரன், நளன், நிருதி, அக்குரன்,அரிச்சந்திரன், கர்ணன், சிசுபாலன் ஆகியவர்களைத் தவிர மற்றவர் அனைவரும் தமிழர்கள். வள்ளல்கள் என தமிழறிஞர் பட்டியலிடும் பொழுது வேற்றினத்தவரையா அதனுள் புகுத்தியிருப்பர்?

அடுத்ததாக, நமது தமிழ்ச் சங்கங்களைப் பற்றி நக்கீரர் இறையனார் களவியல் உரையில் குறிப்பிடும் பொழுது, இடைச் சங்கத்தில் அங்கம் வகித்த ஒருவரை துவரைக் கோமான் என குறிப்பிடுகிறார். ஆழ்ந்து; ஆய்ந்து நோக்கினால் துவாரகையின் அரசனைத்தான் (கண்ணன்) துவரைக் கோமான் என குறிப்பிடுகிறார் என தெளிவுறத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, வால்மீகி அயோத்தியா காண்டத்தில் 10-வது சர்கத்திலும் கிட்கிந்தா காண்டத்தில் 41-ஆவது சர்கத்திலும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றியும் ; கபாடபுரத்தைப் பற்றியும் ; இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும் ; அச்சங்கத்தில் தான் ஓர் உறுப்பினராக இருந்ததைப் பற்றியும் குறிப்பிடுகிறார்!

தொடர்ந்து மாபாரதத்திலும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
புறநானூற்றில் பாண்டவர் படைக்கு உணவிட்ட பெருஞ்சோற்று உதியன் சேரலை புகழ்ந்து முறஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடல் ஒன்று காணக் கிடைக்கின்றது. மார்க்கண்டேயர் பாடிய பாடலொன்று உள்ளது. தருமரைப் போற்றிப் பாடும் பாடலும் ஒன்று உள்ளது. தருமருக்குத் தமிழ் தெரிந்திருந்தால்தானே அவர் அப்பாடலைக் கேட்டிருக்க முடியும்.

ஆக, ஒரு வேளை மாபாரதக் கதை மாந்தர்கள் தற்போதைய ஆங்கில மோகம் கொண்ட தமிழர்களைப் போல் சமசுகிரத மோகம் கொண்ட தமிழர்களாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு அல்லவா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மாபாரதக் கதை மாந்தர்கள் தமிழராயிருப்பரோ?

Arul Selva Perarasan
Administrator
திரு.தமிழ்வள்ளுவர் அவர்களே!

மிக அற்புதமான தகவல்கள்.

நீங்கள் கேட்கும் இதே கருத்தைத் தான் எனது நண்பர் ஒருவரும் அடிக்கடி கேட்பார்.

மகாபாரத மாந்தர்கள் தமிழராய் இருக்கலாமோ என்று! {அதுவும் கிருஷ்ணன், அர்ஜுனன், திரௌபதி என்று பலபேர் கருப்பர்களாகவே காட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அப்படிக் கேட்பார்}

ஏன் அப்படி இருக்கக்கூடாது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது!

இது குறித்து நீங்கள் ஒரு நீண்ட பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வான்மீகி தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இருந்தாரென்பதற்கு சான்று இருக்கிறதா?

அப்படி இருப்பின் அதைக் குறித்து விபரமாகக் குறிப்பிடவும்.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மாபாரதக் கதை மாந்தர்கள் தமிழராயிருப்பரோ?

தமிழ் வள்ளுவர்
In reply to this post by தமிழ் வள்ளுவர்

ஐயா, கூடிய விரைவில் நீங்கள் கூறியது போல் ஒரு பதிவை எழுதுகிறேன்.