தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

classic Classic list List threaded Threaded
53 messages Options
123
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
சகோ மெய்யப்பன் அருண் அவர்களுக்கு,

ஒருவேளை கர்ணன் மயங்கியிருந்தால், மஹாபாரதப் போரே நடந்திருக்காதே!

தேவர்களுக்கு மனைவியான பின்பே ஒரு மனிதனுக்கு மனைவியாகின்றாள் என்று கிருஷ்ணன் சொல்கிறானா?

அந்தப் பகுதிகளைச் சுட்டிக்காட்டினால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

KalaiSelvi
வியாசரின் திறன் கர்ணனின் கதாப்பாத்திரத்தை செதுக்கியத்தில் உள்ளது. மகாபாரத்திலேயே அவ்வளவு எளிதாக பபுரிந்துகொள்ள முடியாத காதப்பாத்திரம் ம்ம் மகாபாரத்தை விருவிருப்பக்கியத்தில் இக்கதாபத்திரத்திற்கு முக்கிய பங்குண்டு.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் கலைச்செல்வி அவர்களை வரவேற்கிறேன்.

நீங்கள் சொன்னது போல கர்ணனின் கதாப்பாத்திரம் கதைப்போக்கின் திசையை நிர்ணயிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது.

வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

KalaiSelvi
Well I’ve one doubt from above discussion : karna vs arjun  நா என்ன நினைக்கின்றேன்னா.., போர் விதிமுறைகளுக்கு உட்பட்டு  எதிரியின் பலவீனம் அல்லது பலவீன நிலையை பயன்படுத்தி வெற்றி கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது தன் வீரத்தின் அடிப்படையில் பெற்ற வெற்றியை போன்று சிறப்பாகாது. அப்படி இருக்கும்போது  அர்ஜுன் இங்க போர் விதிமுறைகளுக்கு உட்படாத எதிரியின் பலவீன நிலையை அல்லவா பயன்படுத்திள்ளார் ??? அனா கர்ணா அப்பொழுது அது மாதிரி ஏதும் செய்யலையே. So I need suitable explanation from viyasa Mahabharata.

Thanks and my hearty wishes to your website prosperous future.  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
In reply to this post by Arul Selva Perarasan


//பாண்டுவுக்கு மணமுடித்துக்கொடுக்கப்பட்ட பிறகு கர்ணன் பிறந்திருந்தால் அது சரிதான். பாண்டுவுக்கு மணமுடிப்பதற்கு முன்னர் கர்ணன் பிறந்ததால் இதில் அறத்தின் விதி என்ன? //

http://ancientvoice.wikidot.com/src-mbh-05:section-140

Vasudeva said, O son of Radha, thou hast worshipped many Brahmanas fully conversant with the Vedas. With concentrated attention and mind free from envy thou hast also on many an occasion enquired of them after truth. Thou knowest, therefore, O Karna, what the eternal saying of the Vedas are. Thou art also well-versed in all the subtle conclusions of the scriptures.

“It is said by those conversant with the scriptures that the two kinds of sons called Kanina and Sahoda that are born of a maiden, have him for their father who weddeth the maid. Thou, O Karna, hast been born in this way. Thou art, therefore, morally the son of Pandu”.

 Come, be a king, according to the injunction of the scriptures. On the side of thy father, thou hast the sons of Pritha, on the side of thy mother, thou hast the Vrishnis, for thy kinsmen. O bull among men, know that thou hast these two for thy own. Proceeding this very day with me hence, O sire, let the Pandavas know thee as a son of Kunti born before Yudhishthira. The brothers, the five Pandavas, the son of Draupadi, and the invincible son of Subhadra, will all embrace thy feet. All the kings and princes, again, that have been assembled for the Pandava-cause, and all the Andhakas and Vrishnis, will also embrace thy feet. Let queens and princesses bring golden and silver and earthen jars full of water and delicious herbs and all kinds of seeds and gems, and creepers, for thy installation.During the sixth period, Draupadi also will come to thee as a wife.

இப்பொழுது சொல்லுங்கள் அண்ணா..?

யார் வேத சாஸ்த்திரங்களின் படி பாண்டுவின் முதல் மகன் ?
யார் அஸ்த்தினாபுரியின் அரசுரிமைக்கு முதல் உரிமையாளன் ?
யார் பஞ்சபாண்டவர்களுக்கும் முதன்மையானவன் ?

வாழ்த்துகளுடன் என் நன்றிகள்.

And I agree with u Miz.Kalaiselvi.


Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் மெய்யப்பன் அருண் அவர்களுக்கு,

கிருஷ்ணன் சொல்வதே அறம் என்று ஏற்றுக் கொள்வோர் வரிசையில்தான் நானும் நிற்கிறேன்.

ஆகையால், கிருஷ்ணன் சொல்லி விட்டான் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும்... During the sixth period, Draupadi also will come to thee as a wife.  என்ற அந்த வரி ஆபாசமாகத்தான் உள்ளது. வேறு வழியில்லை அதையும் மொழிபெயற்றே ஆக வேண்டும்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

கர்ணன் பாண்டுவின் மானசீக மகன் என்பதில் இனி மாற்றுக் கருத்தில்லை.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by மெய்யப்ப அருண்
சகோ மெய்யப்பன் அருண் அவர்களுக்கு,

கிருஷ்ணன் சொல்வதே அறம் என்று ஏற்றுக் கொள்வோர் வரிசையில்தான் நானும் நிற்கிறேன்.

ஆகையால், கிருஷ்ணன் சொல்லி விட்டான் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும்... During the sixth period, Draupadi also will come to thee as a wife.  என்ற அந்த வரி ஆபாசமாகத்தான் உள்ளது. வேறு வழியில்லை அதையும் மொழிபெயற்றே ஆக வேண்டும்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

கர்ணன் பாண்டுவின் மானசீக மகன் என்பதில் இனி மாற்றுக் கருத்தில்லை.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

மகாபாரதம் உலகத்தின் ஒப்பிலா காவியம். மாற்று கருத்து இல்லை.
நீதியின் களஞ்சியம் ; ஐந்தாவது வேதம். உண்மையே.

இருப்பினும்

'ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை'

என்ற வள்ளுவன் வாக்கினை சிரமேற்கொண்டு செயல்படும் நாம்,
ஒருத்திக்கு ஐந்து கணவன் என்ற கருத்தினை ஏற்க முடியமா? அதற்கு சாபங்களும் காரணங்களும் இருப்பினும் சான்றோர் பழித்த செயலை ஏற்க முடியுமா?

கண்ணனே; இறைவனே உரைத்தாலுந்தான் என்ன? தவறிழைத்தால் இறைவனையும் சபித்து ஒதுக்கிய நாயன்மார்களைக் கொண்ட பேரினம்; நமது தமிழினம்.  

என்னைப் பொறுத்தவரை அக்காலத்து ஒழுக்காமிலா வடவர்களால் உட்புகுத்தப் பட்ட அற்பக் கருத்தாகவே நான் இதனைக் கொள்கிறேன்.

ஒருவனுக்கொருத்தி எனும் பண்பினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே கொண்டு விளங்கும் நாம் இக்கருத்தை எப்படி ஏற்பது?

இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

ganesh
In reply to this post by தமிழ் வள்ளுவர்
 வணக்கம் அய்யா,
                இராமன் தர்மத்தை காக்க வாலியை அதர்மமாக பின்னால் இருந்து தானே தாக்கினான் ஆகவே பாண்டவர்கள் செய்தது மட்டும் எப்படி தவறாக கருத முடியும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்.

நீதியைக் காக்கவே இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றுருந்தாலும், அது தவறு எனும் காரணத்தினால்தான் மறுபிறவியான கிருஷ்ண அவதாரத்தில், வாலியின் மறுபிறவியான வேடனால் கொல்லப் பட்டான்.

இந்த "தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?" என்ற நீண்ட விவாதத்திற்குப் பிறகே, பாண்டவர்கள் செய்த குற்றத்திற்குக் கிடைத்த தண்டனை, போருக்குப் பின் அவர்கள் அனுபவித்த, உறவுகளை இழந்த தனிமைத் துயர் என்ற பதில் கிடைத்தது. போருக்குப் பின் தனிமைத் துயரில் வாடிய தருமன் கானகம் ஏக முடிவெடுத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதானே?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

R.MANIKKAVEL
In reply to this post by தமிழ் வள்ளுவர்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

அன்புள்ள நண்பர் அருட்செல்வப்பேரரசன் வணக்கம்!

தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை? -நல்ல பதில் மொத்த பாரதத்தையும் சுருக்கி சொன்னது போல் அருமை. பலகிளைகள் கொண்ட சிந்தனை.

{வாழ்வில் மனிதன் வெள்ளையாகவோ கருப்பாகவோ இருக்க முடிவதில்லை. சாம்பல் நிறத்தில்தான் இருக்கிறான். ஆனால் எவ்வளவு கருப்பாக இருக்கிறான் என்பதே கேள்வி. அப்படிப் பார்க்கையில் கௌரவர்களின் சாம்பல் நிறத்தில் அதிக கறுப்பும், பாண்டவர்களிடத்தில் குறைவான கறுப்புமே இருந்தது.} நல்ல உவமை

குணம்நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் -திருக்குறள் நினைவுக்கு வந்தது.


நன்றி!
வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நன்றி நண்பரே!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


2013/11/27 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>
ஓம் ஸ்ரீ முருகன் துணை

அன்புள்ள நண்பர் அருட்செல்வப்பேரரசன் வணக்கம்!

தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை? -நல்ல பதில் மொத்த பாரதத்தையும் சுருக்கி சொன்னது போல் அருமை. பலகிளைகள் கொண்ட சிந்தனை.

{வாழ்வில் மனிதன் வெள்ளையாகவோ கருப்பாகவோ இருக்க முடிவதில்லை. சாம்பல் நிறத்தில்தான் இருக்கிறான். ஆனால் எவ்வளவு கருப்பாக இருக்கிறான் என்பதே கேள்வி. அப்படிப் பார்க்கையில் கௌரவர்களின் சாம்பல் நிறத்தில் அதிக கறுப்பும், பாண்டவர்களிடத்தில் குறைவான கறுப்புமே இருந்தது.} நல்ல உவமை

குணம்நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் -திருக்குறள் நினைவுக்கு வந்தது.


நன்றி!
வாழ்க வளமுடன்


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp32p147.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

நரேன்
In reply to this post by மெய்யப்ப அருண்
கர்ணனின் வீரம் :

௧. ஆரம்பம் முதலே அர்ச்சுனனின் தனுர் வித்தையின் ஆற்றல் கண்டு பொறாமை கொண்டு ஆசாரியர் துரோனரிடம் சென்று வெளிப்படையாகவே அர்ச்சுனனை தோற்கடிக்க தமக்கு மேம்பட்ட பிரம்மாஸ்திரத்தை பயிற்றுவிக்கும்படி கேட்பது...

௨. பிரம்மாஸ்திரம் மறுக்கப்பட்ட காரணமாகவே புதிய குருவை தேடிச்சென்று போய் சொல்லி பயின்று வந்தது...

௩. அழையா விருந்தாளியாய் மன்னவர்களின் மகன்கள் தங்கள் வீர பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் களத்திற்க்கு வந்து தானும் வில்லெடுத்து சாகசம் புரிந்து தான் முதல் அவமானத்தை சந்திப்பது...

௪. தன் பிறப்பை பற்றிய முழு உண்மை தெரியும் முன்னரே சபையிலும் பொதுவிலும் பாண்டவர் பிறப்பை குறித்து பேசுவது..

௫. சுதன் மகன் என சொல்லி தன்னை மறுத்ததால் சபை நடுவே வந்த பாஞ்சாலியின் துகில் களைய தூண்டியது...

௬. துரியனுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லியே பாண்டவர்கள் மீதிருந்த வன்மத்தை வளர்த்தது...

௭. கனகம் சென்றவர்களை பின்தொடர்ந்து சென்று படாடோபம் கட்ட முயன்று உயிர் நண்பனாம் துரியனையும் மற்றவர்களையும் கந்தர்வர்களிடத்து விட்டு புறம காட்டியது...

௮. மாடுபிடி சண்டையில் மற்றெல்லோரையும் விட்டு முதன் முதலில் புறமிட்டோடியது...

௯. பச்சிளம் பாலகனின் முன்னின்று தோற்று பின்னின்று மாய்த்தது...

௰. ஆறு  நாள் போரிலும் சேர்த்து பீமனிடம் மட்டுமே எட்டு முறை தோற்றது...

௧௧. தன்னிடம் தோற்ற சகதேவனையும் எள்ளி நகை ஆடியது...

௧௨. தான் தலைமை ஏற்றபின்பே அறமும் நலமும் நிலைக்க போர்புரிந்தது...


அர்ச்சுனன் வீரம்:

௧. குருவே துணை, குரு அருளே நிறை என நின்றது...

௨. தலைமைக்கு கீழ்படிந்தது, நண்பன் சொல்லின் வழி நின்றது...

௩. சுயம்வரம் முடிந்த சமரில் பீமானுடன் மட்டும் சேர்ந்து எதிரிகளை புறந்தள்ளியது...

௫. அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு கந்தர்வனிடமிருந்தும் எதிரியை மீட்டது...

௬. உலகில் எந்த ஒரு தேவரும், மாநனிடரும் பெறாத பாசுபதத்தையும் மற்றெல்லா தேவ அஸ்திரங்களையும் சீரிய தவத்தின் மூலம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் மானுட யுத்தத்தில் பயன்படுத்தாமல் அறவழி நின்றது...

௭. மாடுபிடி சண்டையில் தனி ஒருவனாகவே கௌரவ சேனையை வென்றது...

௮. மற்றெல்லா துணையும் விட கிருஷ்ணனே பெரும் துணை என வேண்டி பெற்றது...

௯. சொந்தத்தை கொன்று நாட்டை வென்றெடுக்க தயங்கியது...
 
௰. பலனை எதிர்பார்க்காது கடமை ஆற்றியது...

௧௧. குலத்தை அழித்த குருவின் மகனை பிழைக்க விட்டது...

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

நரேன்
In reply to this post by தமிழ் வள்ளுவர்
மகாபாரதம் உணர்த்தும் உண்மை இதுவே...
மண்ணாசை கேடு தரும்...
பெண்பாவம் குலநாசம்...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

நரேன்
In reply to this post by R.MANIKKAVEL
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இது முதலில் தமிழில் இயற்றப்பட்டது அல்ல.. அகவே வள்ளுவம் கூற்றுக்கு எற்பவெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும் மகாபாரதம் தற்கால சமநிலையை உறக்க சொல்லும் வேதம்.. அதன் மெய்ப்போருளையே நாட வேண்டும். அது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே நிறைத்திருக்கும் நல்ல மற்றும் தீய பண்புகள், அதன் வெளிப்பாட்டின் விளைவுகளையே பெரிதும் பேசுகிறது... இந்த உலகம் நன்மை தீமை நிறைந்தது. நன்மையையும் அறமும் செழிக்க வேண்டும், தீமைகள் அழிய வேண்டும். அதற்கான வழிகளை நாமே ஆராய வேண்டும். எனவே தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்மை தீமை கலந்தே உருவகப்படுத்தப் பட்டுள்ளது...
தருமனும் பொய் உரைக்கிறான். துரியனும் அச்வதாமனிடம் இளம் பஞ்ச பாண்டவர்களின் சிரசை கொண்டுவரும்போது சினம் கொள்கிறான்... ஆனால் கவனிக்கப்பட வேண்டியது யாரிடம் எவ்வளவு நன்மையையும் தீமையும் உள்ளது என்பது மட்டுமே. மேலும் எங்கே அறம் மீறப்படுகிறதோ, அங்கே ஏன் மீறப்படுகிறது, எதற்காக, எப்படி எனவும் ஆராய்தல் அவசியமாகிறது...

வள்ளுவமே உரைக்கிறது "பொய்மையும் வாய்மையிடத்து அங்கே புரந்தீர்ந்த நன்மை பயக்குமெனின்"...

பாரதத்தில் பாண்டவர் பக்கம் சாரும் குறைகளும், அற மீறல்களும் நன்மை பயப்பதர்க்கே... ஆகவே அறம் ஓங்கட்டும்.. நலம் பெருகட்டும்...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
திரு.நரேன் அவர்களுக்கு,

நண்பரே அருமையான விளக்கங்கள்.

தங்களின் ஆழ்ந்த மகாபாரத அறிவு புலப்படுகிறது

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

R.Santhanakrihnan
In reply to this post by Arul Selva Perarasan
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

R.Santhanakrihnan
In reply to this post by மெய்யப்ப அருண்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

R.Santhanakrihnan
In reply to this post by மெய்யப்ப அருண்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Narmatha
In reply to this post by மெய்யப்ப அருண்
hi
123