கர்ணன் சொன்னதுதான் சரி!

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கர்ணன் சொன்னதுதான் சரி!

Jayavelan
Administrator
கர்ணன்,”பாண்டவர்கள் அழியும் வரை அவர்களை தாக்கி அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்தப் போக்கே உனக்கு பரிந்துரைக்கப்பட வேண்டியது. நமது கட்சி பலமாக இருக்கும் வரையும், பாண்டவ மன்னனின் கட்சி பலவீனமாய் இருக்கும் வரையும், அவர்களைத எந்த மன உறுத்தலும் இன்றித் தாக்க வேண்டும்”.
”இந்திரன் வீரத்தை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான். ஓ மன்னா, வீரம் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு வீரமே முக்கியமான அறமாகும்”.
”உனது வீரத்தைக் கொண்டு வெற்றி கொள். உனது வீரத்தைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்த பரந்த உலகத்தை ஆட்சி செய்”.

பீஷ்மர்,” {பாண்டவர்களுக்கு} பாதி நாட்டைக் கொடுத்துவிடு. சந்தேகமற, இந்நாடு அந்த குரு குலத்தின் முதன்மையானவர்களுக்கும் தந்தையின் வழி வந்த நாடுதான்.”

துரோணர்,” மக்களின் விருப்பப்படி அவர்களது தந்தைவழி வந்த அரியணையில் அவர்கள் அமரட்டும்”.

கர்ணன் சொல்வது போல் போர்கலையில் சிறந்த வீரனே நாட்டை ஆளத்குதியானவன். நாட்டை பிரித்துவிட்டால் பாண்டவர்கள் வேறு நாட்டினர் தான். எனவே அவர்களை அழிப்பது ஒன்று தான் துரியோதனாதிகளுக்கு ஒரே வழி.
அதையே கர்ணன் சொல்கிறான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சொன்னதுதான் சரி!

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான் என்றாலும்,

அதை இப்படி எண்ணிப்பாருங்கள்.

பாண்டு தம்பியாகவே இருந்தாலும், மன்னனானவன் அவன்தான்.

திருதராஷ்டிரன் குருடன் என்பதனால் ஏற்கனவே அவனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டுவிட்டது.

பாண்டு போர்க்களைப்பு நீங்க கானகம் சென்றதனால், நாட்டை பீஷ்மரின் பொறுப்பில், திருதராஷ்டிரனின் ஆளுகையில் விட்டுச் செல்கிறான். கானகம் புகுந்தவன் அங்கேயே சபிக்கப்பட்டு இறந்தும் போகிறான்.

ஆகவே, திருதராஷ்டிரனுக்கு பொது அதிகாரம் தான் கொடுக்கப்பட்டிருந்ததே தவிர, அவன் முழு மன்னன் கிடையாது. அங்கேயே துரியோதனின் ஆட்சி உரிமை ஆட்டம் காண்கிறது.

இன்னுமொரு காரணம், யுதிஷ்டிரனே அனைவருக்கும் மூத்தவன்.

துரியோதனன் பிறக்கும் போதே, திருதராஷ்டிரன் துரியோதனன் மன்னனாக முடியுமா என்ற கேள்வியை வைக்கிறான்.

அப்போதே யுதிஷ்டிரன்தான் இளவரசன் என்று திட்டவட்டமாக வரையறுக்கப் படுகிறது.

பின்பு துரியோதனனுக்கு ஏது உரிமை.

இந்தச் சூழ்நிலையில், துரியோதனன் எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் எனக் கேட்கும் நிலையில் தான் உள்ளானே தவிர. பங்கைப் பிரித்துக் கொடுக்கும் நிலையில் இல்லை.

இருப்பினும் பொறாமையும் பழி உணர்ச்சியும் அவனை இருக்க விடவில்லை.

கர்ணனின் பேச்சை கவனித்தீர்களா? ஆதிபர்வம் பகுதி 204ல் துரியோதனனை ஏசிய கர்ணன் என்ற தலைப்பில் வரும் பகுதியைப் படியுங்கள்.

ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது. ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய். அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் இளம் வயதுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போது உன்னால் அவர்களுக்கு தீங்கு செய்ய முடிய வில்லை. இப்போது அவர்கள் தூரத்தில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் வீச்சு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இது எனது கருத்து. - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section204.html#sthash.3Tn4AICj.dpuf

என்ற தனது ஆழமான கருத்தை முன் வைக்கிறான் கர்ணன்.

கர்ணன் முதலில் சொன்னது தான் அறத்தின்படியானது. பின்பு சொல்வது துரியோதனனை மகிழ்விக்கவே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சொன்னதுதான் சரி!

R.MANIKKAVEL
In reply to this post by Jayavelan
ஓம்  ஸ்ரீ  முருகன்  துணை

காலம் துரியோதனனை குரு சேத்திரத்திற்கு அழைத்து வந்து விட்டது. அவன் குரு  சேத்திரத்திற்கு வரவிரும்பவில்லை, முடிந்த அளவிற்கு (மீண்டும் 14 வருடம்) குரு  சேத்திரத்திற்கு வருவதை தள்ளிப் போடவே விரும்பினான், விதி விடவில்லை.

மாபெரும் கதை வீரனாக இருந்தும்,  குருகுலத்தின் தன்நிகர் அற்ற இளவரசனாக இருந்தும், தனது  கொடியின் கீழ் மாபெரும் வீரர்கள் போர்  புரிவார்கள் என்று தெரிந்தும் ஏனோ போர் செய்ய துரியோதனன் துணியவில்லை.  சூதையே  விரும்பினான் அல்லது அதற்கு நிகரான குறுக்கு வழியையே விரும்பினான்.

தாய்  மாமன் போல ஆண்பிள்ளை இருக்கும் என்று இன்றும் சொல்வது உலக வழக்கம். அந்த வழக்கத்திற்கு உயிர் கொடுப்பது போலவே துரியோதனன் தனது தாய் மாமன் சகுனி போலவே இருக்கிறான். சகுனியின் வஞ்சக போதனை வேறு.

சுத்த வீரனான கர்ணனுக்கு சூது பிடிக்கவில்லை.  யுத்தமே அவன் பாதையாகவும் வாழ்வாகவும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எனவே      சத்திரியனுக்கு உரிய குணம் இல்லாமல் வாழும் நண்பனை திருத்தவே இப்படி கூறுகிறான்.

”இந்திரன் வீரத்தை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான். ஓ மன்னா, வீரம் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு வீரமே முக்கியமான அறமாகும்”.

”உனது வீரத்தைக் கொண்டு வெற்றி கொள். உனது வீரத்தைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்த பரந்த உலகத்தை ஆட்சி செய்”.

வீரமே அறம்: சூது அறம் அல்ல என்பதை கர்ணன் உணர்ந்தே இதை உரைக்கிறான். பாண்டவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு இதை கூறவில்லை. நண்பன் என்ற முறையில் அவனுக்கு தெரிந்த அறத்தை நண்பனுக்கு கூறுகிறான்.

நன்றி
வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சொன்னதுதான் சரி!

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

மேற்கண்டபடி பேசிய கர்ணனின் அறம் சார்ந்த தன்மை மெச்சத்தக்கதுதான்.

இருப்பினும் ஒரு நெருடல்....

வன பர்வம் ஏழாவது பகுதியில், துரியோதனன் பாண்டவர்களைக் கொல்ல நினைக்கும்போது, கர்ணன் பேசும் வசனத்தைப் பாருங்கள்..


முழு மஹாபாரதம் - வனபர்வம் - பகுதி 7 | அறம் தடுமாறினானா கர்ணன்? என்ற பகுதியில் இருந்து...

//கர்ணன் துரியோதனனிடம்...

 "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிட ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும்  தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.//

முன்பு சூதில் மனம் செலுத்தாதே போரிடு என்று சொன்ன கர்ணன் இங்கு மீண்டும் பாண்டவர்களைப் பகடையில் வீழ்த்தலாம் என்று சொல்கிறான்.

கர்ணன் அறம் தடுமாறினானா?

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்2013/12/1 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>
ஓம்  ஸ்ரீ  முருகன்  துணை

காலம் துரியோதனனை குரு சேத்திரத்திற்கு அழைத்து வந்து விட்டது. அவன் குரு  சேத்திரத்திற்கு வரவிரும்பவில்லை, முடிந்த அளவிற்கு (மீண்டும் 14 வருடம்) குரு  சேத்திரத்திற்கு வருவதை தள்ளிப் போடவே விரும்பினான், விதி விடவில்லை.

மாபெரும் கதை வீரனாக இருந்தும்,  குருகுலத்தின் தன்நிகர் அற்ற இளவரசனாக இருந்தும், தனது  கொடியின் கீழ் மாபெரும் வீரர்கள் போர்  புரிவார்கள் என்று தெரிந்தும் ஏனோ போர் செய்ய துரியோதனன் துணியவில்லை.  சூதையே  விரும்பினான் அல்லது அதற்கு நிகரான குறுக்கு வழியையே விரும்பினான்.

தாய்  மாமன் போல ஆண்பிள்ளை இருக்கும் என்று இன்றும் சொல்வது உலக வழக்கம். அந்த வழக்கத்திற்கு உயிர் கொடுப்பது போலவே துரியோதனன் தனது தாய் மாமன் சகுனி போலவே இருக்கிறான். சகுனியின் வஞ்சக போதனை வேறு.

சுத்த வீரனான கர்ணனுக்கு சூது பிடிக்கவில்லை.  யுத்தமே அவன் பாதையாகவும் வாழ்வாகவும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எனவே      சத்திரியனுக்கு உரிய குணம் இல்லாமல் வாழும் நண்பனை திருத்தவே இப்படி கூறுகிறான்.

”இந்திரன் வீரத்தை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான். ஓ மன்னா, வீரம் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு வீரமே முக்கியமான அறமாகும்”.

”உனது வீரத்தைக் கொண்டு வெற்றி கொள். உனது வீரத்தைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்த பரந்த உலகத்தை ஆட்சி செய்”.

வீரமே அறம்: சூது அறம் அல்ல என்பதை கர்ணன் உணர்ந்தே இதை உரைக்கிறான். பாண்டவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு இதை கூறவில்லை. நண்பன் என்ற முறையில் அவனுக்கு தெரிந்த அறத்தை நண்பனுக்கு கூறுகிறான்.

நன்றி
வாழ்க வளமுடன்If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp3p153.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணன் சொன்னதுதான் சரி!

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

நன்றி நண்பரே! நல்ல பதில் அளித்துள்ளீர்கள்.

கர்ணன்  "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிட ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும்  தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.

இந்த கருத்தை கர்ணன் அறம் தடுமாறி சொல்லவில்லை. அவன் உள்மன போராட்டத்தை பதிவு செய்கிறான். காரணம், இந்த பதில் வரும் முன்பு துரியோதனன் மனநிலை என்ன?

துரியோதனன் "பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’,
 
துரியோதனனின் இந்த பதிலுக்கு பின்னே கர்ணன்  மனதில் எழுவது பச்சாதாபமில்லை, வெளி காட்டிக்கொள்ள முடியாத இகழ்ச்சி, இமயம் என்று நினைத்தவன் அதலபாதாளமா? அதனால் ஏற்படும் மன கொதிப்பு, இருந்தும் அதனை காட்டிக் கொள்ளமுடியாத நேரம்.காட்டிகொண்டால் நண்பன் இறப்பதை விரும்புவதுபோல் ஆகிவிடும்.  கர்ணன்  பேசாமலும் இருக்க முடியாது எனவே பேசுகிறான். பேச்சை கவனியுங்கள்

"ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன்". அப்படி என்றால் இதற்கு முன் நடந்த சூதுக்கு கர்ணன் இணங்கவில்லை என்பது தெரிகிறது.  

 "ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள் ''  இந்த இடத்தில் பாண்டவர்களுக்கு ஏன் பாராட்டு பத்திரம்?. காரணம் பாண்டவர்களின் ஆசை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. துரியோதனன் ஆசையோ அடுத்தவரை நம்பி உள்ளது (கண்ணு தெரியாத திருதரச்டிரனை நம்பி, கோணல் புத்தி கொண்ட சகுனியை நம்பி) எனவே "அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.

நான் அதற்கு தயார் இல்லை.   நீயே செஞ்சிக்க (கண்ணு தெரியாத திருதரச்டிரனை நம்பி, கோணல் புத்தி கொண்ட சகுனியை நம்பி) அதனால்தான் “வீழ்த்துவோம்” என்று சொல்லாமல் “வீழ்த்து” என்று சொல்கிறான்.

இந்த வார்த்தைக்கு பின்பு. மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியற்ற இதயத்துடன், தனது ஆலோசகர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதையெல்லாம் குறித்துக் கொண்ட கர்ணன், தனது அழகான கண்களை விரித்து, கடுமையான கோபத்துடன் தனது உறுப்புகளை {உடலை} அசைத்து, அலட்சியத்துடன் துரியோதனன், துச்சாசனன் மற்றும் சுவலனின் மகனிடம் {சகுனிடம்}, "இளவரசர்களே, எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் மன்னனின் (துரியோதனனின்) நலத்தை விரும்பி, கூப்பிய கரங்களுடன் அவனுக்காகக் காத்திருக்கும் பணியாட்கள். ஆகையால், நாம் அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்!  

நண்பன் அவனும் இளவரசன் அவன் முன்பு நண்பனாக இருப்பவன், அங்க நாட்டின் அரசனாக இருப்பவன் கூப்பிய கையுடன் " உன் பணியாள்” என்றால் எதனை நக்கல். உள்ள கொதிப்பு. கோழையே என்று சொல்லாமல் சொல்லும் வன்மம்.

கடைசியாக கர்ணன் "அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}" என்றான்.

வனவாசத்தில் அப்படித்தானே இருக்கிறார்கள் பாண்டவர்கள். அப்படியும் உன்னால் வெற்றியாளனாக இருக்க முடிய வில்லையா? சரி வா  கொன்னே போட்டுடுவோம்.

இது கர்ணன் அறம் தடுமாறிய நிலை இல்லை. இது மாபெரும் வீரன் மாபெரும் கோழையின் நண்பனாகி. விரக்தியில் தவிக்கும் நிலை

விளக்கில் வைத்த நெருப்பு தீபம்
வீட்டில் வைத்த நெருப்பு சாபம்
பாவம் கர்ணன்! ஒரு தீபம் சாபமாகிறது.

நன்றி
வாழ்க வளமுடன்