அர்சுனன் சபதம் ஏற்புடையதா?

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அர்சுனன் சபதம் ஏற்புடையதா?

கார்த்திகேயன்
அபிமன்யு சாவிற்கு பலி தீர்க்க அர்ஜுனனன் ஜெயத்ட்ரதன் கொல்ல எடுத்த  சபதபம் எவ்வாறு ஏற்புடையது ? அவன் அவனை தனிமை மட்டும்தான் படுத்தினான் , குரு, குல குரு , அஸ்வத்தாமன் , திருயோதணன் , கர்ணன் போன்றோர்தான் சதி செய்து கொன்றனர் . விளக்குங்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அர்சுனன் சபதம் ஏற்புடையதா?

R.MANIKKAVEL
நண்பருக்கு வணக்கம்

போர்களத்தின் நியதிப்படி ஜெயத்தரதன் களத்தில் இருந்து போர் செய்யவில்லை. அவனுடைய முழு நோக்கமும் அர்ஜுனனை களத்தில் இருந்து அகற்றுவது மட்டும்தான். அது ஒரு போர்க்களசதி அந்த சதிக்காகத்தான் ஜெயத்தரதனை அர்ஜுனன் கொல்ல சபதம் எடுத்தான். ஜெயத்தரதனின் நோக்கம் அர்ஜுனனுடன் போர் செய்வது அல்ல. அவன் போர்செய்தாலும் வெல்ல மாட்டான். அவன் முன்னமே ஒரு முறை அர்ஜுனனால் அடிமை செய்யப்பட்டு தலை மொட்டை அடிக்கப்பட்டவன்.

நீங்கள் குறிப்பிடும் அனைவரும் களப்போரில் நீதிமீறினார்கள் என்பதுமட்டும்தான் குற்றம்.  

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அர்சுனன் சபதம் ஏற்புடையதா?

Arul Selva Perarasan
Administrator
கேள்வியும் பதிலும் அருமை நண்பர்களே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அர்சுனன் சபதம் ஏற்புடையதா?

தாமரை
Administrator
ஜெயத்ரதனை ஏன் என்ற கேள்வி எழும்முன், அபிமன்யூவை ஏழு மஹாரதிகள் சூழ்ந்து கொண்டு போரிட்டுக் கொன்றனர் என்பது அர்ச்சுனனுக்கு தெரியுமா எனச் சிந்தித்துப் பாருங்கள்.. அவனுக்குத் தெரியாது. காரணம் சக்ரவியூகத்தினுள் அபிமன்யூ மட்டுமே தனித்திருந்தான் அவனுடைய சாரதியும் மரித்துவிட்டான்.

அர்ச்சுனனுக்குத் தெரிந்ததெல்லாம் ஜெயத்திரதனின் மாயமே அபிமன்யூ தனித்துவிடப்படக் காரணம். அதைத்தவிர அபிமன்யூ எப்படிக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது என்பது உண்மை.

அதனாலேயே ஜெயத்ரதனை கொல்லச் சபதமிட்டான். அது ஒரு வகை அறைகூவல்..

பாண்டவ சேனையைத் தனியொருவனாக இருந்து தடுத்தவன் அவன். அப்படியானால் அவனைத்தானே எதிரிப் படையில் மிகப்பலவானாக கருத வேண்டும். அதனால் படைக்கு வீரம் வரவேண்டுமானால் இந்தச் சபதம் ஜெயத்ரதனைக் கொல்வதாக இருக்க வேண்டும்.

பாண்டவர் படையைத் தனியொருவனாக எதிர்த்த வீரனைக் கொல்வேன் என்பதன் மூலம் கௌரவ சேனையின் ஆணிவேரையே அசைக்கிற அறைகூவல்.

கர்ணனைத் தவிர மற்ற யாரையும் அவனால் கொல்ல இயலாது. அதற்கும் ஏற்கனவே சபதம் செய்திருந்தான். மற்ற அனைவரையும் கொல்ல மற்றவர்கள் சபதம் செய்திருந்தனர்.