அபிமன்யு

classic Classic list List threaded Threaded
11 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அபிமன்யு

சிவா
ஆசிரியர் ஆவர்களுக்கு வணக்கம்

குரு ஷேத்ர போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யு சக்ரவியூக்கத்தின் உள்ளே சென்று, திரும்ப முடியாமல் கொல்லபட்டான் எனவும் அதன் முன்கதையும் அனைவரும் நன்கு அறிவோம். பகவான் கிரிஷ்ணன், அர்ஜுனன் என அனைவருக்கும் தெரியும், அபிமன்யு வால்  சக்ரவியூக்கத்தின் உள்ளே செல்ல மட்டுமே தெரியும் அதில் இருந்து வெளியே வர தெரியாது என்று, பின்பு எதற்காக கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன், அபிமன்யு வை காக்க வரவில்லை? பஹாவான் நினைத்திருந்தால் அபிமானியுவை காபபர்திருக்கலாம் அல்லவா? அவர் ஏன் அதை செய்யவில்லை? இதில் ஏதேனும் உட்கருத்து இருக்கிறதா?

விளக்கம் தாருங்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

Arul Selva Perarasan
Administrator
அபிமன்யுவைக் காத்தால், அர்ஜுனன் கர்ணனைக் கொல்லமாட்டான் என்று கிருஷ்ணன் நினைத்தானோ என்னவோ. கடோத்கசன் இறப்பும் அதே போன்ற ஒன்றுதான். கர்ணன் அர்ஜுனனுக்காக வைத்திருந்த சக்தி ஆயுதம் கடோத்கசன் மீது ஏவப்பட்டதால், அர்ஜுனன் மீது பயன்படுத்த முடியாமல் போயிற்று.

மஹாபாரதம் முழுவதும் வரும் ஒரே கருத்து அறம் மிக நுட்பமானது என்பதே. அந்த நுட்பம் கிருஷ்ணன் போன்ற பரமாத்மாவுக்கே புரியும்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-06-21 16:26 GMT+05:30 சிவா [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஆசிரியர் ஆவர்களுக்கு வணக்கம்

குரு ஷேத்ர போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யு சக்ரவியூக்கத்தின் உள்ளே சென்று, திரும்ப முடியாமல் கொல்லபட்டான் எனவும் அதன் முன்கதையும் அனைவரும் நன்கு அறிவோம். பகவான் கிரிஷ்ணன், அர்ஜுனன் என அனைவருக்கும் தெரியும், அபிமன்யு வால்  சக்ரவியூக்கத்தின் உள்ளே செல்ல மட்டுமே தெரியும் அதில் இருந்து வெளியே வர தெரியாது என்று, பின்பு எதற்காக கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன், அபிமன்யு வை காக்க வரவில்லை? பஹாவான் நினைத்திருந்தால் அபிமானியுவை காபபர்திருக்கலாம் அல்லவா? அவர் ஏன் அதை செய்யவில்லை? இதில் ஏதேனும் உட்கருத்து இருக்கிறதா?

விளக்கம் தாருங்கள்.

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp264.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம்.
நண்பர் திரு.அருட்செல்வ பேரரசன் வழங்கியப்பதில் அற்புதம். ”மஹாபாரதம் முழுவதும் வரும் ஒரே கருத்து அறம் மிக நுட்பமானது என்பதே”

செயல்களால் மனிதன்  தன்னைத்தானே வாழ்க்கை வலையில் சிக்க வைத்துக்கொள்கின்றான். அந்த சிக்கலை அறுக்க சுயநலத்தை பயன்படுத்தினால் உலகமே அழியவேண்டி நிலைகள் ஏற்படும் என்பதை நாம் காலம் காலமாகப் பார்க்கின்றோம். வரலாற்றில் உண்மைகள் பரவிக்கிடக்கின்றன.

சுயநலம் இல்லாமல் இந்த வாழ்க்கை வலையின் சிக்கலை நீக்குவது எப்படி என்பதற்கு இறைவன் காட்டும் வழிதான் அறம்.

அறத்தின் வழியாகவே எல்லோரும் நடந்தால் வாழ்க்கை வலையின் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் செல்லமுடியும். ஆனால்  அப்படி நடக்கமுடிவதில்லை. காரணம் மனிதன் தனது அறியாமையால் அறம்மீறிகின்றான். அது நம்மை அறியாமலே நடக்கின்றது. அறியாமை என்பதை அறியும்வரை அறியாமைக்கூட அறிவுதான் என்று மனித மனம் நம்புகின்றது. பெற்றவர்களை விட்டுவிட்டு காதலன் என்ற நம்பிக்கையில் ஓடும் பெண்களுக்குள் இருப்பது அறிவென்னும் அறியாமையே. ஒரு உதாரணத்திற்கா சொல்கின்றேன்.  

அர்ஜுனன் தனது மனைவி சுபத்திரைக்கு சக்கரவியூகத்தை எப்படி உடைத்து உள்நுழைவது என்றும் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்றும் அவள் கருவுற்றபோது விளக்கினான். அன்று சுபத்திரை தூங்காமல் அதை முழுவதும் கேட்டு இருந்தால் அபிமன்யுவிற்கு சக்கரவியூகத்தில் நுழையவும், வெளியேறவும் தெரிந்து இருக்கும். முக்கியமான தருணத்தில் சுபத்திரை தூங்கியது ஒரு அறப்பிழை. காரணம் கணவன் மனைவிக்கு சொல்லித்தரும்போது அவன் குரு இடத்திலும் மனைவி சீடன் இடத்திலும் இருக்கிறார்கள்.

கருவுற்ற மனைவிக்கு போர்க்கலையைப்பற்றி விளக்கியது அர்ஜுனன் செய்த தவறு. கருவுற்றக்காலத்தில் இரத்தம் சிந்தும் சிந்தனையை மனைவியின் இதயத்தில் விளைவிப்பது குற்றம் மாறாக இறைவன் புகழ்பாடும் கதைகள் சொல்லப்படவேண்டும். இது அர்ஜுனன் செய்த அறப்பிழை. தவமாய் தவமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கலையை எளிதாக மனைவிக்கு காரணமில்லாமல் புகட்டுவது. வெறும் காதல் மயக்கத்தில் விளைந்த அறப்பிழை.

கண்ணணுக்கு தெரியாமல் இரண்டு அறப்பிழைகள் நடந்து உள்ளது. இந்த அறப்பிழைதான் பெரும் அறப்பிழைக்கு வித்தாக அபிமன்யூவை யுத்தகலத்தில் பாதி தெரிந்த வித்தையில் மாட்டிவிட்டது. அவன் அன்று அந்த நெருக்கடியில் மாற்றி யோசிக்க தவறியது அவனின் பாதிக்கற்ற வித்தையால் வந்த விளைவு. அதை கண்ணன் அறிவான் நாம் அறிய மாட்டோம்.

பெரும் யுத்தத்தில் தனது கவனம் தலைவனைக்காப்பதில் இருந்து இருக்கவேண்டும். அர்ஜுனன் மாறாக தனது காண்டிபத்தை பழித்தான் என்பற்காக செயத்ரனை குறிவைத்து ஓடுவது போர்க்குற்றம். சூதாட்டத்தில் அடிமைப்பட்டபோதே அர்ஜுனன் காண்டீபமும் அடிமைப்பட்டது அதன் பெருமையை நிலைநாட்ட இது நேரம் இல்லை. அங்கு ஒரு அறம் தவறக்காரணமாக அர்ஜுனன் உள்ளான்.

நாம் செய்யும் எல்லா செயலும் அறம்போலத்தான் தெரிகின்றது ஆனால் அதன் முடிவில்தான் அது அறமா? அறம் இல்லையா? என்று தெரியவரும். காரணம் எந்த மனிதனும் ”நான்” என்ற ஆணவம் இல்லாமல்  எந்த செயலையும் செய்ய முடிவதில்லை. அந்த ஆணவம் இருக்கும் வரை அதற்கான கூலியை மனிதன் கொடுத்துதான் ஆகவேண்டும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல் நான் கர்த்தா அல்ல நீதான் கர்த்தா. நீ செய்விக்கிறாய் நான் செய்கின்றேன். நான் கருவி நீ கருவியை இயக்குபவள் என்று எண்ணம் வந்தால் அறம் அசையாமல் செய்ய முடியும் அது எளிதான காரியம் இல்லை.

திரு.ஜெயமோகன் எழுதும் வெண்முரசு மூலம் தெரிகின்ற உண்மை என்ன வென்றால். ஒரு செயலும் அந்த செயல் செய்யப்படும் நேரமும் அறம், அல்லது அறமீறல் என்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.

நாம் எந்த செயலையும் காலத்தின் கைதியாக இருந்து செய்யாமல் இருந்தால் பெரும் அறமீறல்களில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஒரு செயலின் முடிவைத்தான் மனிதன் அறிந்துக்கொள்கின்றான் அதன்விதை எங்கோ எப்போதோ யாராலோ தூவப்படுகின்றது என்பதை அறியமுடியவில்லை. கவனமற்று விழும் ஒரு விதை சிக்கலான காலத்தில் முளைக்கும்போது விதியாகி அறமாகி மனிதன் முன்னே வந்து இயங்கமுடியாமல் வளைத்து நிற்கிறது. அப்போது செயல் செய்தே ஆகவேண்டி கட்டாயத்தில் மனிதன் தள்ளப்படுகின்றான். அதன் காரணமாக விளைவு அறம் அல்லது அறமீறல் என்ற நிலையை உருவாக்கி விடுகின்றது.

துரோணர் சக்கரவியூகம் அமைக்கும்போது அறத்தோடு அந்த வியூகத்தை அமைக்கவில்லை. செயத்ரதன் மூலம் ஒரு சதியை உருவாக்கி அறம்மீற தயாராகி சக்கரவியூகம் அமைக்கிறார்கள். அதன் முடிவு. துரோணர் தொடங்கி கர்ணன்வரை பெரும் அழியா பழியை காலம் உள்ளவரை சுமக்கிறார்கள். அது அவர்களுக்கான தண்டனை இத்தனை பெரிய அவமானம் அவர்கள் செத்து செத்து நெஞ்சுவெடித்திருப்பார்கள். கண்ணன் அவர்களுக்கு தந்த தண்டனை அது. அதை அவர்களே அறிய முடியும்.  

பகவான் ஸ்ரீகிருஷ்ணனை அந்த இக்கட்டான நேரத்தில் அழைக்க மறந்த அபிமன்யூவின் அறியாமைதான் எத்தனை கொடியது அதை நாம் நினைக்கவேண்டும்.
ஆண்கள் சிக்கலான தருணங்களில் இறைவன் பாதத்தில் விழமறந்து தங்கள் ஆணவத்தில் விழுகின்றார்கள்.

நன்றி
வாழ்க வளமுடன்.  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

Arul Selva Perarasan
Administrator
அருமை நண்பரே

2014-06-22 15:02 GMT+05:30 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:

http://x.2334454.n4.nabble.com/-tp264p266.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Jay
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

Jay
அன்பினிய நண்பர்களே,
இதில் சக்கர வ்யூஹம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், நான் இதற்கு முன்பு அபிமன்யு அகப்பட்டு கொண்டது - பத்ம வ்யூஹதில் என்று படித்திருக்கிறேன். இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேரா?

அன்புடன்,
jk
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

R.MANIKKAVEL
நண்பரே!

1) சக்ரவியூகம்-சக்கரம்போன்ற அமைப்பும் சுழந்று வந்து தாக்கும் திறன்படைத்தது. அபிமன்யூ மாட்டிக்கொண்டது சக்ரவியூகத்தில். அதை அவன் உடைத்து உள்ளே செல்ல மட்டும் கற்று இருந்தான் வெளிவர கற்று இருக்கவில்லை. அதை முழுவதும் கற்ற ஒரே பாண்டவர் படையில் இருந்தவன் அர்ஜுனன் மட்டும்.

2) பத்மவியூகம்-தாமரைபோன்ற அமைப்பு உடையது. இதழ்களாக விரிந்தும், சுருங்கியும் சண்டையிடும் தன்மையது.

பத்ம வியூகத்தைவிட சக்ரவியூகம் பெரிய வல்லமை உடையது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

Arul Selva Perarasan
Administrator
விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

தாமரை
Administrator
In reply to this post by Arul Selva Perarasan
உண்மை என்னவென்றால் அபிமன்யூவிற்கு தன் தந்தையை விட அதிகப்புகழ் பெறவேண்டும் என ஆசை. பீஷ்மரிடம் போரிடும் போதும் சரி இன்னும் பல சமயங்களிலும் அபிமன்யூ உச்சகட்டமாகப் போரிடும் போதும் அர்ஜூனன் எப்போது பார்த்தாலும் உள்ளே மூக்கை நுழைப்பார்.

வெறுத்துப் போன அபிமன்யூ அப்பா இல்லாத சமயத்தில் வீரத்தைக் காட்ட இந்த சமயத்தை உபயோகிக்கிறார், தர்மரின் சமாதானத்திற்காக பீமன் மற்றும் பாண்டவர்கள் பின்னால் வரட்டும் என்கிறான். ஆனால் யாரைப் பற்றியும் அவன் கவலைப் படவில்லை. அன்று அவன் துரியோதனின் மகனை படுத்தியபாடு துரியோதனனை அவன் மேல் வெறிகொள்ளச் செய்தது. அவன் அவனை குற்றியிரும் குலை உயிருமாய் சிறைபிடித்து தன் தேரில் கட்டி உதைத்தவாறே போரிட்டதால் அவன் இறக்கிறான்.

தர்மனை சிறைபிடியுங்கள் என துரோணருக்குச் சொன்ன துரியோதனனுக்கு, அபிமன்யுவைக் கொல்வது வெறியாகிவிட்டது. காரணம் துரியோதனின் மகனை அவன் கொன்ற விதம்.

துரோணரின் திட்டம் சக்ரவியூகத்தைச் சுற்றிதான் எல்லோரும் போரிடவேண்டும் என்பதால் வீரர்கள் பிரிக்கப்படுவார்கள், எங்கிருந்து எந்த மஹாரதி புறப்பட்டு வெளியே வருவார் என்று தெரியாததால் மஹாரதிகள் ஒன்று போரிட வேண்டும் அல்லது தர்மனைப் பாதுகாக்க வேண்டும். மஹாரதிகள் போரிடாவிட்டால் படை அழிந்து பெரும் நாசம் விளையும்.

ஒவ்வொரு மஹாரதியாக சக்ரவியூகம் அணுகும். தானே திறந்து அவனை உள்ளிழுத்துக் கொள்ளும். இப்படி விரிந்து பின் மூடிக் கொள்வதாலேயே அதை உடைப்பது இயலாத காரியம்., சக்ரவியூகத்தில் சிக்கும் மஹாரதி மீண்டு தர்மனுக்கு உதவப் போகமுடியாது,அனைவரையும் போரில் சிக்கவைத்து விட்டு தர்மனைப் பிடிக்கலாம் என்பதே துரோணரின் திட்டம். கண்ணன் மற்றும் அர்ஜூனன் இருவரைத் தவிர இதன் செயல்பாட்டை உள்ளிருந்து தடுக்கத் தெரிந்தவர் இல்லை என்பதாலேயே அவர்களைப் பிரித்தார், .. சக்ரத்தை உடைத்து விடுவதால் யார் யாருடன் போரிடுவது என்பதை தர்மரின் படை நிர்ணயிக்கலாம். துரோணரையோ, கர்ணனையோ தர்மர் பக்கம் வராமல் தடுக்கலாம். இல்லையென்றால் தடுக்க முடியாது, இதுதான் தர்மசங்கடம் அபிமன்யூ சக்கரவியூகத்தில் நுழைந்த உடன் மூடிக் கொள்கிறது, இது துரோணரின் திட்டப்படியா அல்லது அபிமன்யூவின் திறத்தினாலா என்பது சர்ச்சைக்குரியது. காரணம் அபிமன்யூவை அவனுடைய சாரதி உள்ளே நுழைந்தவுடன் எச்சரிக்கிறான். இது எதோ சதி போலத் தெரிகிறது என்று. ஆனால் பிரச்சனை என்னவென்றால் சக்ரவியூகத்தில் இருந்து தாக்க வெளிவரும் மஹாரதிகள் யாராலும் அபிமன்யூவைத் தாண்டிப் போக முடியவில்லை.

அவன் சக்ரவியூகத்தின் மத்திக்குச் சென்றுவிட்டதால் எத்திசையிலும் தாக்குதல் நடத்தலாம். ஆனால் அவன் எல்லாதிசைகளிலும் சூழப்பட்டிருப்பான்,

வெளி நோக்கி செல்ல வேண்டிய வீரர்களை உள் நோக்கித் திருப்புவதைத் தவிர துரோணருக்கு அப்போது வேறு வழி இல்லை, ஏனென்றால் அப்போது அப்படி அவர் செய்யாமல் இருந்திருந்தால் துரியோதனன் பிடிபட்டிருப்பான்,

அபிமன்யூவின் ஆர்வக் கோளாறும் வெறியுமே அவன் அழியக் காரணமாகிப் போனது.
சக்ரவியூகம் தோற்றதா?

இல்லை.. சக்ரவியூகத்தின்படி பாண்டவர்களின் சேனையால் முதல் அடுக்கில் இருந்த ஜெயத்ரதனைத் தாண்ட முடியவில்லை.

அபிமன்யூ ஜெயித்தானா?

ஆமாம், ஜெயத்ரதனைத் தவிர எந்த மஹாரதியாலும் பாண்டவர் பக்கம் போக முடியவில்லை, சக்கரம் சுழலாமல் சிக்கிக் கொண்டது. வெளிவர முனைந்த அனைத்து மஹாரதிகள் யாராலும் அபிமன்யுவைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

நாமும் அப்படித்தான் சக்ரவியூகம் கண்டு பயப்படுகிறோம், யாராச்சும் ஆர்வக்கோளாறில் உள்ளே நுழைந்தால் சுத்தி நின்னு எல்லோரும் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர உதவ முடியாது. இப்படிச் சக்கரவியூகத்தில் உள்ளே மாட்டிய பிறகு எதிராளியின் உணர்ச்சிகளுக்கு வெறியேற்றினால் அவர்கள் இப்படித்தான் தர்மம் நீதி நேர்மை எல்லாத்தையும் உடைச்சு வெறியாட்டம் போடுகிறார்கள்.

அபிமன்யு வதம் போரின் போக்கை மாற்றிய ஒரு நிகழ்வு.. அதுவரை பாண்டவர்களின் கை சற்றுத்தாழ்ந்தே இருந்தது. அவனின் மரணமே பாண்டவர்களிடம் இருந்த தயக்கமான போராட்ட பாணியை மாற்றியது.

கண்ணன் அபிமன்யுவைக் காக்கவில்லை ஏன்?

அப்படிக் கண்ணன் காப்பாற்றி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

18 ஆம் நாள் இரவு அஸ்வத்தாமனின் திருட்டுத்தனமான தாக்குதலில் இறந்திருப்பான். பெயரே பலருக்குத் தெரியாத வண்ணம் இறந்த இளம்பஞ்ச பாண்டவர்கள் போல அபிமன்யூவும் பெயரில்லாமல் மறைந்திருப்பான்.

ஒரு வீரனுக்கு அவனுக்குரிய புகழைத் தர என்பது முக்கியக் காரணம்.
எதிர்கால இளங்காளைகளுக்கு ஒரு அனுபவப் பாடம் தர,
பாண்டவர்களின் இதயத்தில் மிச்சமிருந்த தயக்கங்களை அகற்ற என்பது துணைக்காரணங்கள்.

அபிமன்யூவிற்கு வீரமரணம் தந்து அவன் புகழை உயர்த்தியதின் மூலம் கண்ணன் அவனுக்கும் நன்மையே தந்திருக்கிறார்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

sureshbabu
In reply to this post by R.MANIKKAVEL
super sir.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

muniyaraj
In reply to this post by Arul Selva Perarasan
APO AJANAN MUKKIYAM  chinna kulanthai abimayu uyir thiyakam seyukinrana enna kodumai ithu pondavarkal veram beman mattu than thuriyan thangum pothu beman aniyayam pannitan so pandavar chiriminal gyus ansd kirishna
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அபிமன்யு

தாமரை
Administrator
போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே ஆயுனும் அவர்.

தருமன் பக்கம் தர்மம் இருந்தது. அவன் பக்கம் கடவுளே இருந்தார்.

ஆயினும் போர் என வந்தபின் அபிமன்யூ, கடோத்கஜன், இளம் பஞ்ச பாண்டவர், விராடன், துருபதன், த்ருஷ்டதுய்மன், சிகண்டி இப்படிப் பலப்பல வீராதி வீரர்களை இழந்தான். போரின் இயல்பு அப்படி.

சண்டை என்று வந்து விட்டால் சண்டையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இழப்புகள் வரும். அவர் யாராய் இருந்தாலும் சரி அவருக்கு யார் துணை இருந்தாலும் சரி காயம் உறுதி.

அது நான் எழுதிய குறள்.. வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

நல்லவன் ஆயிரம் நல்லது செய்தாலும் அவனது ஒரு குறை மட்டுமே நினைத்துப் பார்க்கப்படும்.
கெட்டவன் ஆயிரம் கெடுதல் செய்தாலும் அவன் செய்யும் ஒரு நன்மைக்காகவே அவன் போற்றப்படுவான்.

இதான் விதி என்பது. துரியோதனன் நல்லவன் என்றால் பீமனை மற்போருக்கு அல்லவா அழைத்திருக்க வேண்டும்?