வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

classic Classic list List threaded Threaded
80 messages Options
1234
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
முதலில் வஞ்சனை என்றால் என்ன? என்பதை விளக்கி விட்டு பின்னர் கண்ணனா - கர்ணனா என யோசிக்க வேண்டும். விளக்குவீர்களா?


வஞ்சனை என்பது கர்ணன் மனதில் இல்லை. அவனின் செயல்கள் அத்தனையும் அடம் பிடிக்கும் குழந்தையின் செயல்களைப் போல அடக்க முடியா ஆத்திரத்தில் உண்டானது.

கர்ணன் சூழ்ச்சிகள் எதையும் செய்யவில்லை. பிறரின் சூழ்ச்சிகளில் அங்கம் வகித்தான். அதனால் அவனை வஞ்சகன் எனச் சொல்ல முடியாது.

கண்ணனின் ஒவ்வொரு செயலுக்கும் காரணங்கள் உண்டு. அது ஒரு சிறு சுய லாபத்திற்கான சூழ்ச்சி அல்ல. கண்ணனின் ஒவ்வொரு செயலிலும் தர்மபாடம் உண்டு.

கேள்விகள் உண்டெனில் பதில் தருகிறேன்.

ஒவ்வொரு வஞ்சகமாகப் பட்டியலிடுங்கள்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

Arul Selva Perarasan
Administrator
காரணமே இல்லாமல் அர்ஜுனன் மேல் பொறாமை கொண்டது வஞ்சனை இல்லையா?

அமைதியாகத் தங்கள் பனிரெண்டு வருட காலத்தைக் கானகத்தில் கழிக்கும் பாண்டவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைத்தது வஞ்சனை இல்லையா?

பரசுராமரிடம் வஞ்சகமாகக் கல்விக் கற்றது வஞ்சனை இல்லையா?

சூழ்ச்சிகளில் ஒரு ஆளாகப் பங்கெடுத்தான் என்கிறீர்களே! பல சூழ்ச்சிகளுக்கு அவனே காரணமாக இருந்திருக்கிறான்.

திரௌபதியின் ஆடைகளை உரிக்கச் சொல்வது கர்ணனே என்பதையும் கவனியுங்கள்.

கர்ணன் மேல் அனைவருக்கு நல்ல அபிமானம் உண்டு. ஆனால் அதற்காக அவன் செய்த தீச்செயல்களுக்கும் சேர்த்து அவனை ஆதரிப்பது தகுந்ததன்று என நினைக்கிறேன்.2014-08-25 19:41 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
முதலில் வஞ்சனை என்றால் என்ன? என்பதை விளக்கி விட்டு பின்னர் கண்ணனா - கர்ணனா என யோசிக்க வேண்டும். விளக்குவீர்களா?


வஞ்சனை என்பது கர்ணன் மனதில் இல்லை. அவனின் செயல்கள் அத்தனையும் அடம் பிடிக்கும் குழந்தையின் செயல்களைப் போல அடக்க முடியா ஆத்திரத்தில் உண்டானது.

கர்ணன் சூழ்ச்சிகள் எதையும் செய்யவில்லை. பிறரின் சூழ்ச்சிகளில் அங்கம் வகித்தான். அதனால் அவனை வஞ்சகன் எனச் சொல்ல முடியாது.

கண்ணனின் ஒவ்வொரு செயலுக்கும் காரணங்கள் உண்டு. அது ஒரு சிறு சுய லாபத்திற்கான சூழ்ச்சி அல்ல. கண்ணனின் ஒவ்வொரு செயலிலும் தர்மபாடம் உண்டு.

கேள்விகள் உண்டெனில் பதில் தருகிறேன்.

ஒவ்வொரு வஞ்சகமாகப் பட்டியலிடுங்கள்


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p323.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
காரணமே இல்லாமல் அர்ஜுனன் மேல் பொறாமை கொண்டது வஞ்சனை இல்லையா?

இல்லை. பிறப்பினால் தான் கீழே தள்ளப்படுவதால் உண்டான வெறி அது. அது துரோணரின் சிரேஷ்ட மாணவனை வெல்வதே அவனுடைய இலட்சியம். காரணம் அவர் அவனுக்கு வில்வித்தையை மறுத்தார். அர்ஜூனனுடன் போரிட்டு தன் வித்தையை நிரூபிக்க நினைத்தானே தவிர.. துரோணர் ஏகலைவனுக்குச் செய்த்து போல வஞ்சகம் செய்ய என்னவே இல்லையே.

அமைதியாகத் தங்கள் பனிரெண்டு வருட காலத்தைக் கானகத்தில் கழிக்கும் பாண்டவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைத்தது வஞ்சனை இல்லையா?

பாண்டவர் வன்வாச காலத்தில் கர்ணன் திக்விஜயம் சென்று பலப்பல நாடுகளை துரியோதனனுக்கு திரை செலுத்த வைத்தான். கர்ணன் தானாக எந்த வஞ்சகமும் செய்யவில்லை.

பரசுராமரிடம் வஞ்சகமாகக் கல்விக் கற்றது வஞ்சனை இல்லையா?

இல்லை. அவனுக்கு அவன் ஒரு சத்ரியன் என்று தெரியாதே. பரசுராமர் ஷத்ரியர்களுக்குத் தானே கற்றுத் தரமாட்டார். அதனால் அதில் வஞ்சனை இல்லை.


சூழ்ச்சிகளில் ஒரு ஆளாகப் பங்கெடுத்தான் என்கிறீர்களே! பல சூழ்ச்சிகளுக்கு அவனே காரணமாக இருந்திருக்கிறான்.

திரௌபதியின் ஆடைகளை உரிக்கச் சொல்வது கர்ணனே என்பதையும் கவனியுங்கள்.

இதற்காகத்தான் வஞ்சனை என்பதன் அர்த்தம் கேட்டேன். அவனின் கோபமும் வெறியும் அவனை திரௌபதியை அவமதிக்கத் தூண்டியது. அது தீய செயல்தான். ஆனால் வஞ்சனை இல்லை. சகுனியின் சூதுதான் வஞ்சனை. அவன் ஆலோசனைக் கேட்டு மறைமுக தாக்குதல்கள் செய்த துரியோதனன் செய்தது வஞ்சனை. கர்ணன் தன் தவறுகளை வெளிப்படையாகவே செய்தான். அதனால் அவை வஞ்சனை அல்ல.

கர்ணன் மேல் அனைவருக்கு நல்ல அபிமானம் உண்டு. ஆனால் அதற்காக அவன் செய்த தீச்செயல்களுக்கும் சேர்த்து அவனை ஆதரிப்பது தகுந்ததன்று என நினைக்கிறேன்.

வஞ்சனை என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள். கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

Arul Selva Perarasan
Administrator
வஞ்சனை என்பதற்கு ஆங்கிலத்தில் http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88 deceit என்று பொருள். deceit என்றால் எமாற்றுத் தனம்.

1. துரோணர் வில்வித்தைக் கற்றுக் கொடுக்கவில்லையென்றால் அர்ஜுனன் மேல் பொறாமை கொள்வதுதான் நல்லவனுக்கு அழகா? அது காரணமற்ற பொறாமை இல்லையா? இங்கு கர்ணன் நம்மை ஏமாற்றுகிறான்.

2. 12வருட கானகவாசத்தைப் பாண்டவர்கள் அமைதியாகக் கழிப்பதை அவனோ, சகுனியோ விரும்பவில்லை. அதற்கு கோஷ யாத்திரை செல்லும் முடிவை அவனே துரியோதனனுக்கு ஊட்டுகிறான். உனது செழிப்பைக் காட்டி, அவர்களது வறுமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை அசூயை கொள்ள வை என்று கர்ணனே சொல்கிறான். அங்கு செல்வதற்கான அனுமதியை திருதராஷ்டிரனிடம் எப்படிப் பெறுவது என்பது வரை அவனே காய் நகர்த்துகிறான். இவையெல்லாம் ஒரு நல்லவன் செய்ய மாட்டானே என்று நம்பும் நம்மை அவன் ஏமாற்றவே செய்கிறான். காண்க http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section236.html

3. //அவனுக்கு அவன் ஒரு சத்ரியன் என்று தெரியாதே. பரசுராமர் ஷத்ரியர்களுக்குத் தானே கற்றுத் தரமாட்டார்.//
நண்பரே அவன் சத்ரியன் என்று தெரியாது என்கிறீர்கள். ஆனால் நிச்சயம் அவன் பிராமணன் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். கல்வி கற்கத்தானே பொய் சொன்னான் என்று நீங்கள் லேசாக நினைக்கலாம். ஆனால் பரசுராமரின் கதையை நன்கு தியானியுங்கள். அவர் குடும்பமே க்ஷத்திரியர்களால் அழிந்தது. தன் தாய், தந்தை, பாட்டன் என அவரது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியர்களின் அநீதியால் அழிந்தனர். இதைக் கண்டு கொதித்தெழுந்து, ஆறாத வடுவுடன், க்ஷத்திரியர்களைத் தன் வாழ்நாள் எதிரியாகக் கருதி, இருபத்தோரு தலைமுறை க்ஷத்திரியர்களைக் கொன்றொழித்தவரிடம் சென்று தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்வதோ, அல்லது தான் பிராமணன் அல்ல என்பதை மறைத்து அவரிடம் கல்வி பெறுவதோ பெரும் ஏமாற்று வேலையே ஆகும். இங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றவே செய்கிறான்.

4. //அவனின் கோபமும் வெறியும் அவனை திரௌபதியை அவமதிக்கத் தூண்டியது. அது தீய செயல்தான். ஆனால் வஞ்சனை இல்லை.// ஒரு நல்லவன் வேசியின் துணியைக் கூட சபையின் நடுவே உருவச் சொல்லமாட்டான். அங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றவே செய்கிறான்.

கோஷயாத்திரையின் போது துரியோதனன், துரியோதனன் வீட்டுப் பெண்டிர் மற்றும் துரியோதனனின் தம்பிகளை அனைவரையும் கைவிட்டு, தனது உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய கர்ணன் செய்தது ஏமாற்று இல்லையா? வீரமாக நின்று நண்பனுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்று கர்ணன் அங்கு சிந்திக்கவில்லையே! இங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றுகிறானே நண்பரே. அதன் பிறகு அவன் உலகையே வென்று கொடுத்தால் என்ன? துரியோதனன் பட்ட அவமானம் அவனுக்கல்லவா தெரியும்? அதுதானே உணவைத் துறந்து மரிக்கிறேன் என்று ஆவேசமாக அமர்ந்தான். காண்க: http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section239.html & http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section245.html.

இப்படிப்பட்ட செயல்கள் அனைத்திலும் நம்மை ஏமாற்றியே இருக்கிறான் கர்ணன்.

ஏமாற்று என்பது வஞ்சனையே.

இதனால் கர்ணனிடம் நல்ல குணங்களே இல்லை என்று நான் சொல்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தலைப்புக்காக விவாதிக்கவே இவற்றைச் சொல்கிறேன். பல இடங்களில் கர்ணன் நல்லவன்தான்.

மிகவும் குறிப்பாக, தாய் {குந்தி} வந்து கேட்ட போதும், நண்பனைத் துறக்கமாட்டேன் என்று தனக்கு மரணம் நேரிடும் என்பதை அறிந்தும் கர்ணன் சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்கவே செய்யும்.

ஏன், அனைவராலும் தீயவன் என்று சொல்லப்படும் துச்சாசனன் கூட நல்லவன்தான். அனைத்தையும் தன் அண்ணனுக்காகவே செய்தான். ராமனுக்கு லட்சுமணன் போல, துரியோதனுக்கும் ஒரு லட்சுமணன் துச்சாசனன் என்ற பெயரில் இருந்திருக்கிறான் என்றே கருதுகிறேன். காண்க : http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section247.html
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
1.  நீங்கள் எப்பொழுது மாவீரனாகக் கருதப்பட வேண்டுமானால் மாவீரனை வெல்ல வேண்டும். ஆனால் மாவீரர்களுடனான யுத்தம் அவனுக்கு மறுக்கப்பட்டது ஆரம்பத்தில். பின்னர் மன்னனாக ஆக்கப்பட்ட பின்னரே அவனுக்குப் போர் செய்யும் வாய்ப்பே கிட்டியது. கர்ணன் அர்ச்சுனனே தனக்குச் சமமான எதிரியாகக் கருதினான்.  அதனால் அவனுடன் போட்டியிட்டான். அதனால் அவன் எப்படி வஞ்சகன் ஆக முடியும்? போட்டிகளிலேயே வீரம் வெளிப்படுத்தப்பட முடியும். அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் போரிட ஆசைப்பட்டது வஞ்சம் அல்ல. கோபம், விரோதம், எனச் சொல்லலாம்.

2. கோஷா யாத்திரை சகுனியின் மூளையில் உற்பத்தியானத் திட்டம். அதைத் துரியோதனன் ஆதரித்து இப்படி மன்னரிடம் பேசு என்கிறான். அதைத்தான் கர்ணன் பேசுகிறான். இங்க்கு கர்ணனே மூளை எனச் சொல்ல இயலாது. அவன் அதில் பங்கெடுத்தான்,

3. பரசுராமர் பீஷ்மருக்குக் கற்றுத்தரவில்லையா? அவர் ஷத்ரியர்தானே. கர்ணன் பிராமணன் அல்ல என எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். பிராம்மணத்துவம் பிறப்பால் என்றால், கஷ்யபரின் மகன் சூரியன், சூரியனின் மகன் கர்ணன். அப்படியானல் அவன் பிராம்மணன் அல்லவா? அப்படியானால் அவன் ஏன் ஷத்ரியன் எனச் சொல்லப்பட்டான்? அவன் தாய் ஒரு ஷத்ரியப்பெண் என்பதாலா?  ஆமாம் எனலாம். இடும்பியின் மகன் இராட்சஸனாகவே இருந்தான். விதுரன் சூதனாகவே கருதப்பட்டான். இதை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். திதியின் மக்கள் அசுரர்கள். அதிதியின் மக்கள் தேவர்கள் ஆனதும் தாய்வழியேதான்.  இவை விளக்கத்திற்காகத்தான் ஆனால் மச்சகந்தியின் மகன்கள் பிராமணன் வியாசனாகவும், ஷத்ரியர்கள் சித்திர வீரியன் விசித்திர வீரியனாகவும் ஆனார்கள். கர்ணனனுக்கு அவன் பிறப்பு தெரியாததால் அவன் வித்தை கற்கக் கூடாது என்பது வஞ்சனை அல்லவா? சமூகத்தின் வஞ்சனை அவன் மீது இருந்தது. அவன் ஷத்ரியன் என பரசுராமர் அறிவித்த பின்னரும் அவன் சூதனாகவே கருதப்பட்டான் அல்லவா?  பரசுராமரிடம் கற்ற வித்தையை ஷத்ரிய வம்ச பாதுகாப்பிற்கு செலவிட்டார் பீஷ்மர். அது வஞ்சனையா? அல்லது ஷத்ரியர்களுக்குச் சமமாக தன்னை உயர்த்திக் கொள்ள கண்ணன் போராடியது வஞ்சனையா?  கர்ணன் பரசுராமரிடம் பொய்சொன்னது ஏமாற்று வேலை. ஆனால் வஞ்சனை என்பது பரசுராமருக்கு இழப்பு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதனால் அது வஞ்சகம் அல்ல. வஞ்சகத்தில் சுயலாபம் மட்டுமல்ல, யாரிடம் செய்கிறோமோ அவரிம் நஷ்டமும் இருக்க வேண்டும். வஞ்ச்சகம் என்ற வார்த்தையின் உண்மை பொருள் அதுதான். சூதாடியது வஞ்சகம், அரக்கு மாளிகை கட்டியது வஞ்சகம். பீமனுக்கு விஷம் கொடுத்தது வஞ்சகம். அனைத்து பொய்களும் ஏமாற்று வேலைகளும் வஞ்சகம் ஆகாது.

4. கர்ணன் நல்லவன் அல்ல என்பதும் கர்ணன் வஞ்சகன் என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. வெற்றிக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து தன் விரோதியை பல்வீனனாக்கி அதன் இலாபத்தைப் பயன்படுத்திக் கொள்பவன் வஞ்சகன் ஆகிறான். தன்னை சூத புத்திரனென்று இகழ்ந்த திரௌபதியின் மேல் உள்ள குரோதம் அவனை அப்படிப் பேச வைத்தது. திரௌபதியின் ஐவர்மணம் புரியாத ஒன்றாகவே இருந்தது. மற்றபடி அவனுக்கு வன்மம் இருந்தது. வஞ்சம் இல்லை.

கோஷா யாத்திரையின் போது  நடந்த போரின் விவரனம் படியுங்கள். கௌரவர்கள் போருக்கு ஆயத்தமாகச் செல்லவில்லை. அது மனித தர்மங்களுக்கு உட்பட்ட யுத்தம் அல்ல. கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து அலைஅலையாக மாயங்கள் புரிந்து போரிடுகிறார்கள். யாரும் யாரையும் தாக்குகிறார்கள். இறுதிவரை போராடிய கர்ணன் தேரிழந்து, வில்லிழந்து விகர்ணனின் தேரில் ஏறிப் பிழைக்கிறான்.  கர்ணன் திரும்ப ஆயுதங்களோடு போருக்குச் செல்லும் வாய்ப்போ, பீஷ்மர் துரோணர் போன்றோர் வரும் வாய்ப்போ உண்டாகவில்லை. உடனடியாகப் பாண்டவர்கள் உதவிக்கு வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் அருகில் இருந்தனர்.  சித்திரசேனன் நண்பன் என்பதால் பெரும்போர், சிறுபோராகவே முடிந்தது.அதனால் ஏற்பட்ட பீஷ்மரின் அவ நம்பிக்கையை திக்விஜயம் செய்து கர்ணன் போக்க நினைக்கிறான். கர்ணனும் சிறைபட்டு இருந்தால்??? இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும். அதுவும் வஞ்சனை அல்ல.

உலகில் எதுவும் பூரண நல்லதும் அல்ல. பூரணக் கெட்டதும் அல்ல. ஒவ்வொன்றிற்கும் அதற்கு உரிய இடமும் செயலும் உண்டு. அது ஆகாத இடமும் செயலும் உண்டு. நம் அறிவுக்கு சரியான உபயோகம் தெரிந்தால் அது நல்லபொருள் என்கிறோம். நம் அறிவுக்கு தவறான உபயோகம் தெரிந்தால் அது கெட்டபொருள் என்கிறோம். குப்பைகள் கூடத் தவறான இடத்தில் உள்ள மூலப்பொருட்கள்தான். மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். அவர்களின் மனம் மட்டுமே நல்லது மட்டும் கெட்டதுகளைத் தீர்மானிக்கிறது. விஷம் கெட்டது அல்ல. அதை உயிரைக் கொல்ல பயன்படுத்துபவன் தவறானாகிறான். மருந்து நல்லதும் அல்ல. அதன் உபயோகம் எப்படிப்பட்டது என்பதைப் பொருத்தே அதன் பயன் இருக்கிறது.

அப்படிப் பார்க்கப் போனால் நாட்டின் மனமாகச் செயல்பட வேண்டிய த்ருதராஷ்டிரனே அத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டியவன். 
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

Arul Selva Perarasan
Administrator
1. போட்டி என்பதற்கும் பொறாமை என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன். சிறு பிள்ளை முதல் கர்ணன் துரியோதனனின் நண்பனாகவே இருந்திருக்கிறான். துரியோதனன் பாண்டவர்கள் மேல் கொண்ட வெறுப்புக்கு கர்ணனே காரணமாக இருந்திருப்பான் என்று ஊகிக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்

2. கோஷ யாத்திரைக்குச் செல்லும் வழியைக் கர்ணனே தீர்மானித்தான். அதைச் சகுனி பழுதற்ற வழி எனப் பாராட்டுகிறான். மீண்டும் காண்க: http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section236.html கோஷயாத்திரையில் அவர்கள் போருக்குச் செல்ல வில்லை, தங்கள் செழிப்பைக் காட்டி, பாண்டவர்களின் வறுமையைக் குத்திக் காட்டி அவர்கள் கோபத்தைத் தூண்டுவதற்காகச் சென்றார்கள். கர்ணனும் சிறைபட்டிருந்தால், அவனும் பாண்டவர்களால் மீட்கப்பட்டிருப்பான். தோற்றாலும் கடைசி வரை நண்பனுடன் இருந்திருப்பானானால் இந்தக்கெட்ட பெயரும் வந்திருக்காது.

3. பீஷ்மர் வசுக்களின் அவதாரம். மேலும் கங்கையே தேவவிரதனை பரசுராமரிடம் அனுப்புகிறாள். கவனிக்க தெய்வமான கங்கை அனுப்புகிறாள். ஆனால் கர்ணன் அந்தணனாக வேடமிட்டல்லவா பயின்றான். அது ஏமாற்று அல்லவா?  சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர் என்பது பரசுராமருக்குத் தெரியும். ஆனால் கர்ணன் சூரியனுக்குப் பிறந்தவன் என்பது பரசுராமருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

4. வன்மம் இருந்தது வஞ்சகம் இல்லை என்று எளிதாகச் சொல்லிவிடுகிறீர்கள். ஒரு பெண்ணை சபை நடுவே ஆடையைக் களைத்து நிர்வாணமாக்கச் சொல்வது நெஞ்சம் நிறைந்த கோபம் உள்ளவனால் கூட செய்ய முடியாது. அதற்கு ஆழ்ந்த வெறுப்புணர்ச்சி வேண்டும்! அதைக் கொண்டிருந்தான் கர்ணன்.

சரி! இறுதியாக கர்ணன் வஞ்சகன் அல்ல, நல்லவனும் அல்ல என்று சொல்லவருகிறீர்கள். சரி உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

ஆனால் ஒரு செயலும் புரியாத திருதராஷ்டிரனே பொறுப்பேற்க வேண்டும் என்கிறீர்களே! அந்த அளவுக்கு கர்ணன் மேல் பாசம் கொண்டிருக்கிறீரே நண்பரே

அனைத்திற்கும் சகுனி பொறுப்பேற்க வேண்டும்; திருதராஷ்டிரன் பொறுப்பேற்க வேண்டும்; பீஷ்மர் பொறுப்பேற்க வேண்டும்; துரோணர் பொறுப்பேற்க வேண்டும்; கிருஷ்ணன் பொறுப்பேற்க வேண்டும்; பாண்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்;  ஆனால் அனைத்திற்கும் காரணமான துரியோதனனும் கர்ணனும் பொறுப்பேற்கக் கூடாது. அப்படித்தானே நண்பரே!

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
த்ருதராஷ்டிரனின் ஒரு ஆணை அத்தனை போரையும் தடுத்திருக்கும். அவனே மன்னன். எனவே அனைத்துப் பொறுப்பும் அவனுடையதே. ஆகவே அவனைத் தவிர ஒருவரும் பழி சுமக்க வேண்டிய அவசியமில்லை.

பீஷ்மர், கர்ணன், துரோணர், அஸ்வத்தாமன் என அனைவரும் தர்மம் எனத் தாம் எண்ணிக் கொண்டதை செய்தனர். அவர்களுக்கு பொதுதர்மம் பற்றிய அஞ்ஞானம் இருந்தது.

ஆனால் த்ருதராஷ்டிரன் தான் செய்வது அதர்மம் என்று நன்கு தெரிந்தே செய்கிறான். அவன் பாசத்தினால் கட்டுண்டது தவறு. நீதிக்காக தன் மகனுக்கே தண்டனை தந்த முன்னோர்கள் உண்டு. மாபெரும் வம்சத்தின் பிரதிநிதியான அவனின் தர்பாரில்தான் ஒரு பெண்ணின் துகிலுரியும் சம்பவம் நடந்தது.

தர்மத்தைக் காக்க எண்ணும் பலரையும் தன் ஆணையால் கட்டியவன் அவன் என்பதாலும் அவர்களின் பாபத்தையும் அவனே பெறுகிறான்.

கர்ணன், துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைத் தண்டிக்காமல் ஆதரித்ததால் அவர்களின் பாபத்தையும் அவனே பெறுகிறான்.

மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

Arul Selva Perarasan
Administrator
பிள்ளை பெற்றவரின் மனநிலையில் இருந்து பார்த்தால் தெரியும் திருதராஷ்டிரனும் நல்லவன்தான் என்று. தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான ஊசலாட்டத்திலேயே தன் வாழ்வு முழுவதையும் தொலைத்தவன் திருதராஷ்டிரன். துரியோதனன் தீமை செய்யாதிருந்தால், கர்ணனும் சகுனியும் துரியோதனனுக்குத் துணை செய்து உற்சாகமூட்டாதிருந்தால் அவனுக்கு இப்படிப்பட்ட இக்கட்டனாக சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. பிள்ளைக்காகத் தவிர்த்து அவன் வேறு எந்தப் பாவத்தையும் செய்ததாக குறிப்புகள் ஏதும் இல்லை.


2014-08-27 22:51 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
த்ருதராஷ்டிரனின் ஒரு ஆணை அத்தனை போரையும் தடுத்திருக்கும். அவனே மன்னன். எனவே அனைத்துப் பொறுப்பும் அவனுடையதே. ஆகவே அவனைத் தவிர ஒருவரும் பழி சுமக்க வேண்டிய அவசியமில்லை.

பீஷ்மர், கர்ணன், துரோணர், அஸ்வத்தாமன் என அனைவரும் தர்மம் எனத் தாம் எண்ணிக் கொண்டதை செய்தனர். அவர்களுக்கு பொதுதர்மம் பற்றிய அஞ்ஞானம் இருந்தது.

ஆனால் த்ருதராஷ்டிரன் தான் செய்வது அதர்மம் என்று நன்கு தெரிந்தே செய்கிறான். அவன் பாசத்தினால் கட்டுண்டது தவறு. நீதிக்காக தன் மகனுக்கே தண்டனை தந்த முன்னோர்கள் உண்டு. மாபெரும் வம்சத்தின் பிரதிநிதியான அவனின் தர்பாரில்தான் ஒரு பெண்ணின் துகிலுரியும் சம்பவம் நடந்தது.

தர்மத்தைக் காக்க எண்ணும் பலரையும் தன் ஆணையால் கட்டியவன் அவன் என்பதாலும் அவர்களின் பாபத்தையும் அவனே பெறுகிறான்.

கர்ணன், துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைத் தண்டிக்காமல் ஆதரித்ததால் அவர்களின் பாபத்தையும் அவனே பெறுகிறான்.

மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p338.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
அரசனுக்கு என்று கடமைகள் உண்டு. அரசனுக்கு  நாடும் மக்களும் தன் குடும்பத்திற்கும் மேலானதாகும்.

அந்த நாட்டில் ஏற்படுகின்ற அத்தனை அதர்மங்களுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும். கடமையும் உரிமையும் பின்னிப் பிணைந்தவை. அவன் ஆணையினால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் துறக்கின்றனர்.

பிள்ளைகளுக்காக அத்தனைப் பாவங்களையும் செய்தான். பெரியோர் சொல் தட்டினான், பெண்ணை அவமானம் செய்தான், காப்பாளனாக இருந்த சொத்தை அபகரிக்க துடித்தான், கொலை முயற்சி செய்தோரை தண்டிக்காமல் விட்டான், முன்னோர் தேடித்தந்த நாட்டையே துண்டாக்கினான், சூதாடினான். இப்படிக் கணக்கற்ற பாவங்களைச் செய்தான். அவன் செய்தது ஒரு பாவமல்ல. ஒரு காரணத்திற்காக பலப்பல பாவங்கள் செய்தான்.

துரியோதனன் தன் தந்தைச் சொல்லை மறுக்கக் காரணம் என்ன? திருதராஷ்டிரன் தன் மூத்தோரின் சொல்லை மறுத்ததால்தானே...

துரியோதனின் குணங்கள் பரிணாம வளர்ச்சியடைந்த த்ருதராஷ்டிரனின் குணங்களே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

santhanakrishnan
In reply to this post by Arul Selva Perarasan
3. //அவனுக்கு அவன் ஒரு சத்ரியன் என்று தெரியாதே. பரசுராமர் ஷத்ரியர்களுக்குத் தானே கற்றுத் தரமாட்டார்.//

இங்கே ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் பகவத் கீதை 4.13 சொல்கிறது சதுர்-வர்ண்யம் மயா ஸ்ரிஷ்டம் குண-கர்ம-விபாகச: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்திய கர்தாரம் அவ்யயம் அதாவது நான்கு விதமான வர்ணங்களும், ஆஷ்ராமங்களும் குணத்தின் அடிபடையிலேயே என்கிறது பகவத்-கீதை மேலும் யக்ஷ பர்வதிலும் யுதிஷ்டிரர் யக்ஷனிடம் இதே கருத்தை பதிலாக கூருவதை (பிராமணன் என்பது பிறப்பின் அடிபடையில் அல்ல) நாம் காணலாம். பலருக்கு இந்துமதத்தின் மீதான வெறுப்பிற்கு பெரும் காரணமாக இருப்பது சாதி முறை அமைப்பு தான். நவீன சாதி முறைக்கும் வர்ணாஸ்ரம தர்மத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை நாம் சாஸ்திரங்களை தகுந்த முறையில் கற்றுனர்வதன் மூலம் அறியலாம். இதை பற்றிய விவரங்களை உள்ளது உள்ளபடி அறிய பகவத் கீதை உண்மை உருவில் என்ற நூலில் அதன் ஆசிரியர் அ.ச.பக்தி வேதாந்த சுவாமி ப்ரபுபத்தர் விளக்கி உள்ளதோடன்றி அதை உலகளாவிய முறையில் நடைமுறை படுத்தி உள்ளதையும் நாம் அறியலாம். புத்தகம் வேண்டுவோர் உங்கள் அருகில் உள்ள இஸ்க்கான் மையங்களை அணுகலாம். எனவே குணத்தின் அடிபடையில் கர்ணன் வண்டு தனது தொடையை துளைத்ததை பொருத்துக்கொண்டதன் மூலம் தான் ஒரு பிராமணன் இல்லை என்பதையும், சத்ரியன் என்பதையும் நிரூபிக்கிறான். பிறப்பின் அடிபடையில் ஒருவன் சத்ரிய குலத்தில் பிறந்திருந்தும் சத்ரியனுக்குரிய தகுதி இலையேல் அவன் சத்ரியன் ஆகும் தகுதியை இழக்கிறான் என்பதை மகா பாரதத்தின் திருதராஷ்ட்ரனுக்கு பட்டமளிப்பு மறுக்கப்பட்டதன் மூலம் நாம் அறியலாம். அது போலவே ஒரு பிராமணன் பிறப்பின் அடிபடையில் பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிராமண செயல்களை செய்யாது மது மங்கை மாமிசம் சூதாடுதல் என்றிருந்தானானால் அவன் சூத்திரனாகவே கருதப்படுவான். அதே நேரம் நாயை உண்ணும் சண்டாள குலத்தில் பிறந்து ஒருவன் குணத்தினால் ஏற்றம் பெற்றிருந்தால் அவன் பிராமணனை விட உயர்ந்தவனாகவே கருதப்படுவான் என்கிறது சாஸ்திரங்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

ரவி
In reply to this post by renuka devi
தாங்கள் கூறியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
குருஷேத்திரப் போர் என்பது சாகும் வரையிலான யுத்தம். அதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவே பகவான் கிருஷ்ணர், எதிரிகள் அஸ்திரம் ஏந்தாத போது அவர்களை கொல்லச் சொல்கிறார்.
யுத்த தர்மத்தை பேசும் முன்பாக, வாழ்வின் தர்மங்களைப் பேசுங்கள்.

கர்ணனை வெல்ல, அபிமன்யுவோ, பீமனோ போதும். அர்சுனன் திறமைக்கு முன் கர்ணன் ஒன்றுமில்லை. விராடத்திலும், பாஞ்சாலத்திலும் அர்சுனனிடம் தோற்றோடியவனே கர்ணன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

vijay
AAYIRAM ARJUNAN PORANTHALUM KARNANA THOOKKA ADIKKA MUDIYATHU AVAN UYIRA PITCHAIYAATHAN KODUTHAN PAANDVARUKKU
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் உபயோகப்படுத்தவே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அர்ச்சுனனை எத்தனை முறை கர்ணன் புறமுதுகிட்டோட வைத்தான்?

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

Arul Selva Perarasan
Administrator
@vijay நண்பரே, இதிஹாச ஆதாரங்களுடன் இங்கே விவாதம் நடைபெறுகிறது. பட்டும்படாமல் கருத்து கூறுவது உங்கள் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும். இது விவாதத்திற்கு வலு சேர்க்காது. நண்பர் தாமரை கேட்பது போல, ஆதாரத்துடன் பதிலளியுங்கள்.


2015-07-15 20:38 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் உபயோகப்படுத்தவே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அர்ச்சுனனை எத்தனை முறை கர்ணன் புறமுதுகிட்டோட வைத்தான்?
If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p501.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

muniyaraj
In reply to this post by Arul Selva Perarasan
karnan nallavan than pandavar kirishnan suthu kondu kolla pattanar
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

muniyaraj
In reply to this post by Arul Selva Perarasan
NANPA SELVAN ARJUNA  sakthi vita kanan palam porunthiyavan kirishnan sulchi kondu karnan ventran son arjunan vita karnam maveran
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

muniyaraj
In reply to this post by ரவி
mr ravi karnan maveran ore oru ashthiram kondu abi manyu saithan beman uyi pichai alithavan karnan mattume so akarnan great
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

muniyaraj
In reply to this post by vijay
vijay un pathil super ninga sonnathu sariyana resion
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
கர்ணன் எங்க்கெங்க்கு யார் யாரிடம் தோற்றான் என்ற பட்டியல் இந்தத் திரியில் உள்ளது. அப்படி இருக்க கர்ணனை அர்ச்சுனனுக்கு எப்படி ஒப்பிட மனம் வருகிறது என்பது புரிவதில்லை.

அர்ச்சுனன் நாகாஸ்திரம், சக்தி அஸ்திரம் இரண்டிலிருந்து கண்ணன் உதவியுடன் தப்பினான் என்றாலும் அவை கர்ணனின் வீரத்தை குறிக்கவில்லையே. மஹாபாரத யுத்தத்தில் தோல்வியையே சந்திக்காத ஒருவன் அர்ச்சுனன்.

கர்ணன் மாவீரன் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அவன் அர்ச்சுனனை விட மாவீரன் என்பதில்தான் பிரச்சனை.

நாகாஸ்திரம் அர்ச்சுனனை வீழ்த்தி இருந்தாலும் அர்ச்சுனன் பிழைத்திருந்திருப்பான்.காரணம் உலூபி. பின்னொரு நாளில் நாகாஸ்திரம் அர்ச்சுனனை கொன்றாலும் உலூபி அவனை உயிர்ப்பிக்கிறாள்.

சூழ்ச்சி சூழ்ச்சி என்றுதான் எல்லா இடங்களிலும் எழுதுகிறீர்களே! சூழ்ச்சி என்றால் என்ன? கர்ணன் வீழ்ச்சியில் சூழ்ச்சி எங்கே இருக்கிறது?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

muniyaraj
In reply to this post by Bhagavad Darisanam
nanpa thamarai ungal karuthu thavaragum karnan arjun vita maveran athu illama viratagam poril beshmar thuronan venrar enpathum poyi beshmar mattume 3 ulakil vella mudiyathu so bes 1.beshmar 2. karnan 3.guru thuronar 4. karnan 5. arunan ithan unmai
1234