நகுஷனும் இந்திரனும்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

நகுஷனும் இந்திரனும்

சரியா சந்திரசேகரன்
அகத்தியரால் சபிக்கப்பட்டவன் நகுஷன் எனவும் பாம்பாக மாறினான் எனவும் யுதிஸ்ற்றரின் போதனையால் விமோசனம் பெற்றான் எனவும் காண்கிறோம். அந்த நகுஷனின் பரம்பரை விவரங்கள் என்ன? அவன் எப்படி இந்திரனின் நாட்டை ஆட்சிசெய்யத் தேர்வுசெய்யப்பட்டான்? அவனால் ஆட்சிசெய்யப்பட்ட நாடு எது. அதனை ஏன் தானே கைப்பற்றிக்கொள்ள முயன்றான். இந்திரனின் மனைவி இந்திராணி = சசி வேண்டியபோதிலும் நகுஷனை அழிக்க இந்திரன் ஏன் தயங்குகிறான். விதுரனுக்கும் நகுஷனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? விதுரன் ஏன் தன்னையே சூத்திரன் என்று குறிப்பிட்டுக் கொள்கிறான். வியாசருக்குப் பிறந்தவர்தானே விதுரர். அப்படியானால் வியாசரும் சூத்திரரா? விதுரர் மணந்து கொண்ட பெண் யார்? அப்பெண்ணைச் சூத்திரப்பெண் என்று மாபாரதம் குறிப்பிடுகிறதா? நகுஷன் விதுரனின் மகனா? விதுரருக்கு ஏன் ஆட்சியுரிமை வழங்கப்படவில்லை. மூவருமே வியாசருக்குப் பிறந்தவர்கள்தானே?
பீஷ்மன் ஏன் கங்கைநதிநீரை அம்புகளால் தடுத்து அணைபோட்டான்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: நகுஷனும் இந்திரனும்

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம் சரியா சந்திரசேகரன்! நீங்கள் முழுமகாபாரதத்தை ஆரம்பத்தில் இருந்து படிக்கவும்.
வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்தவன் திருதராஷ்டிரன்.
வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்தவன் பாண்டு
வியாசருக்கும் சூதர்குலபெணுக்கும்(பணிப்பெண்) பிறந்தவன் விதுரன். இவர்கள் இப்படி பிறந்தாலும் விசித்திரவீரியன்.  (சந்தனு-சத்தியவதி மகன்)
என்னும் மன்னன் மனைவியருக்கு பிறந்தால் அவர்கள் விசித்திரவீரியன் மகன் என்றே கொண்டாடப்படுகிறார்கள். மன்னனின் மூத்த மகனுக்குத்தான் நாடு ஆளும் உரிமை. கண்ணில்லாததால் பாண்டு ஆள்கிறான். விதுரன் அமைச்சனாக உள்ளான்.

குருவம்சத்தில் நகுஷன் யயாதி என்னும் மன்னனுக்கு முன்பு இருந்தவன் குலமூதாதையர் வகையை சார்ந்தவன். பெண்ணாசையால் அவன் அடைந்த இழிநிலையை மகாபாரதம் விளக்குகிறது. ஆரம்பத்தில் இருந்து படிங்கள் உங்கள் எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்
நன்றி
வாழ்க வளமுடன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: நகுஷனும் இந்திரனும்

R BhuloganathaN
In reply to this post by சரியா சந்திரசேகரன்
நகுசன்அத்தினாபுரத்தை தலைநகராகக்கொண்டு குரு நாட்டை ஆண்ட சந்திர குல அரசன். இவனின் தந்தை பெயர் ஆயு. பாட்டன் பெயர் புருரவசு. மகன் பெயர் யதி மற்றும் யயாதி.

தேவலோக இந்திர பதவி அடைய வேண்டி நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பின்பு, அவனை தேவ லோகத்திற்கு அழைத்துச் செல்ல பல்லக்குடன் சப்த ரிசிகள் வந்தனர். சப்த ரிசிகள் நகுசனை பல்லக்கில் ஏற்றி தேவலோகம் அழைத்து செல்கையில், நகுசன் முனிவர்களைப் பார்த்து, பல்லக்கை வேகமாக தூக்கிச் சென்றால் உங்கள் கால்கள் வலிக்கும் எனவே மெதுவாக செல்லுங்கள் என்று பணிவாக கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர்கள், நாங்கள் வழக்கமான வேகத்துடன்தான் பல்லக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட காம வேட்கை மிகுதியால், விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில், பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான். முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

சப்தரிசிகளில் குள்ளமான முனிவரான அகத்தியர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக்காரணம் என்று கருதிய நகுசன், அகத்திய முனிவரைப் பார்த்து ’சர்ப்ப, சர்ப்ப’ என்றால் சமசுகிருதம் மொழியில் 'வேகமாக, வேகமாக' என்ற பொருளும் உண்டு] என்று கூவிக்கொண்டு தன் கையில் இருந்த குச்சியால் அகத்திய முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை, பூவுலகத்தில் மலைப்பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசன் பூவுலகில் பல்லாண்டுகள் மலைப்பாம்பாக வாழ்ந்து, தவமிருந்து மீண்டும் மனித உருவமடைந்து பின்னர் சொர்க்க லோகத்தை அடைந்தான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: நகுஷனும் இந்திரனும்

தாமரை
Administrator
This post was updated on .
அக்காலங்களில் தாய்/தந்தை இருவரின் குலமும் எப்பொழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வர்ணங்கள் நான்கு. பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூதர்.

இவற்றுடன் தேவம் / அசுரம் ஆகிய இரண்டும் சேர்த்தால் 6.

ஒவ்வொரு பெண்ணும் தனக்கு சமமான குலத்தவனை மணக்கலாம்.

சமமில்லா குலத்தவரை மணக்கையில், பெண் தன்னை விட உயர்குலத்தவனுடன் சேரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் சந்ததிகள் அனுலோமக் குடும்பத்தவர்களாக கருதப்படுவார்கள்

உதாரணமாக ஷத்ரியப் பெண், பிராமணரையோ, தேவனையோ சேர்ந்தால் ஷத்ரிய மகனாகக் கருதப்படுவான்.  

பெண் தன்னை விட தாழ்ந்த குலத்தவனுடன் சேர்வதை பிரதிலோமக் குடும்பம் என்பார்கள்.

உதாரணமாக பரசுராமர் ஷத்ரிய குலத்தை அழித்த போது, ஷத்ரிய பெண்கள் பிராமணர்களுடன் சேர்ந்து மகவீன்றார்கள்.

குந்தி தேவர்களுடம் இணைந்து பாண்டவர்களை ஈன்றாள். இவையெல்லாம் அனுலோமம். மச்சகந்தி பராசரருடன் சேர்ந்ததும் அனுலோமமே.

இதன் பின் அறிவியல் உண்டு. நல்ல மரபணுக்கள் கொண்ட வலுவான மக்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். நல்ல மரபணுக்கள் இரு வகையில் உருவாகும். ஒன்று பரம்பரை, இன்னொன்று சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போதல். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தனக்குச் சமமான அல்லது தனக்கு மேலானவனுடன் இணைந்து மக்களைப் பெறுவதால் வலிமையான, நலமான சமுதாயம் அமையும் என்பதே இதன் நோக்கம். அனைவரும் தம் நிலையை உயர்த்திக் கொள்ள உழைக்கவேண்டும் என்பதே இதன் பின்னிருக்கும் அடிப்படை.

இன்றும் ஒவ்வொரு பெண்ணும் தனக்குச் சமமான அல்லது தனக்கு மேலானவனையே கணவனாக வரிப்பதே பெரும்பான்மையாக இருக்கிறது. இது இயற்கையின் அடிப்படை உணர்ந்து, மரபியல் ரீதிப்படி வகுக்கப்பட்ட விதி.

நகுஷன் கதை ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. எனவே குலப்பிரிவுகள் ஏன் என்பதை மட்டும் விளக்கினேன்.

இப்பொழுது விதுரன் கதைக்கு வருவோம். விதுரனின் தாய் - சூத குலம், தந்தை - பிராமண குலம். எனவே இவை இரண்டில் கீழானதான சூத குலம் அவன் குலமாயிற்று. அவனும் அக்குல நெறியை விட்டு வெளிவரவில்லை. அரசனுக்கு பணிந்து அடிமைத் தொழிலையே மேற்கொண்டான். அதனால் அவன் சூதனாகவே அறியப்பட்டான். வியாசன் மச்சகந்திக்குப் பிறந்தான் என்றாலும் முயன்று பிராமணத்துவம் பெற்றான். விதுரன் பணிப்பெண்ணுக்கு பிறந்து சூதனாகவே வாழ்ந்தான். வியாசரின் பரம்பரை அளவிற்கு விதுரனின் பரம்பரை உயராததின் காரணம் இதுவே.

பீஷ்மன் கங்கையைத் தடுத்து அணையிட்டது வில்வித்தை பயிற்சியே ஆகும். ஒரு சிறப்புக் காரணமும் கிடையாது.

ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் அப்பிர மன்னன் தேவகனுக்கும் பிறந்து, அழகும் இளமையும் கொண்ட பெண்ணை விதுரருக்கு பீஷ்மர் மணமுடித்து வைத்தார். ஆகவே இருவரும் சூத்திரராகவே கருதப்பட்டபனர்.

குலம் என்பது மரபணுவில் பதிந்து விடுகிறது என்பதையே இது உணர்த்துகிறது. இயற்கையின் விதியான மரபணு சிறப்பாக்கம் என்பதுதான் இதில் பதியப்பட்டுள்ள உண்மை தத்துவம்.