வேள்வி என்றால் என்ன?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

வேள்வி என்றால் என்ன?

வெண்ணிலா
இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண நூல்களில் இராஜசூய வேள்வி, அஸ்வமேத வேள்வி மேலும் பல வேள்விகள் பற்றி படித்தும் கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

புராண காலங்களில் இராஜாக்களால் பலதரப்பட்ட வேள்விகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நாடு மற்றும் நாட்டு மக்கள் நன்மைக்காக செய்யப்பட்டன என்று நினைக்கின்றேன். இது சரியா தவறா என்று தெரியவில்லை.

1) எனக்கு “வேள்வி” பற்றிய விளக்கம் வேண்டும்.
2) வேள்வி எதற்காக செய்யப்பட்டது?
3) இப்பொழுதும் வேள்விகள் செய்யப்படுகின்றனவா? அப்படியானால் யார் செய்கின்றனர்?

எனது தமிழில் பிழையிருந்தால் மன்னித்தருளுங்கள்...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வேள்வி என்றால் என்ன?

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம் வெண்ணிலா!

வேள்வி என்பதை யாகம் என்று சொல்லலாம். யாக குண்டங்கள் அமைத்து அதில் அக்கினியை வளர்த்து வேதமந்திரங்கள் முழங்க இறைவனை வழிபடும் முறைக்கு யாகம் என்னும் வேள்வி என்றுப் பெயர். வேள்வியில் பலப்பொருள்கள் காணிக்கையாக செல்லுத்தப்படும் அது தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் சென்று சேரும்.

யாகம் இன்றும் இந்து மதத்தில் நடமுறையில் உள்ளது.

புதுவீடு கட்டிக்குடிப்போகும் நாளில் வீட்டில் செய்யும் சிறு வேள்வியில் இருந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு செய்யும் பெரிய யாகம் போன்றவையும். மற்றம் பல வேதம் அறிந்த சான்றோர்கள் கூடி செய்யும் பல பெரிய யாகங்களும் அடங்கும்.

அன்னை மாமதுரை மீனாட்சிப்பிறந்ததும், ராமர் பிறந்ததும். அன்னை திரௌபதி பிறந்ததும் புத்திரகாமேஷ்டி யாகத்தில் இருந்து.

ராஜசூயவேள்வி என்பது உலகில் உள்ள மன்னர்கள் அனைவருக்கும் நானே சக்கரவர்த்தி என்று காட்டிக்கொள்ள செய்வது.

குதிரைவேள்வி என்னும் அஸ்வமேதயாகம் சக்கரவர்த்திப்பட்டம் இருக்கையில் இடையில் எதிர்ப்பவர்கள் யார் என்பதை அறிவதற்காக செய்வது.

மழைவேண்டி யாகம் செய்யும் முறையும் மண்ணில் உள்ளது. உலகில் உள்ள அனைத்தையும் யாகம் செய்து பெறமுடியும். நமது வேத மந்திரத்திற்கு அந்த பெருமை உண்டு.

வேதம்பிறந்தக்காலத்தில் வேள்வி மூலமாகவே எல்லாத்தையும் பெற்றார்கள் வேதம் அறிந்த முனிவர்கள்.

தாருகாவனத்து ரிஷிகள் சிவபெருமானை அழிக்க நடத்தியது அபிசாரவேள்ளி. அந்த வேள்ளி ஏவல்செய்வதுபோன்றது. அதனை அழித்து தாருகாவத்து ரிஷிகளை அடக்கினார் சிவபெருமான்.
வேள்விகள் சிறப்பாக நடந்தகாலத்தை நமது வரலாறு வேதகாலம் என்று அழைக்கின்றது.

இது கணிணிக்காலம். கணிணியால் எல்லாம் நடப்பதுபோல் உள்ளது. இந்த நெட் ஒர்க் சரியாக இருக்க. கணிணி பொறியாளர்கள் தேவைப்படுவதுபோல இன்று இருப்பதுபொல அன்று  அந்த வேள்வி நெட்ஓர்க் சரியாக நடக்க வேதமந்திரம் அறிந்த வேதரிஷிகள் பலர் இருந்து நடத்தி உள்ளார்கள்.

நன்றி
வாழ்க வளமுடன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வேள்வி என்றால் என்ன?

வெண்ணிலா
நன்றி நன்றி! மிகவும் நன்றி!!

எனது கேள்வி சிறுபிள்ளைதனமாக இருந்தும், தங்கள் நேரத்திற்கும் விடையளித்தமைக்கும் மிக்க நன்றி!!!