சாபம் பெற்ற பரிக்‌ஷித் மன்னனா? இளவரசனா?

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

சாபம் பெற்ற பரிக்‌ஷித் மன்னனா? இளவரசனா?

ஜெயவேலன்
http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section41.html

41வது பகுதி தந்தையின் கண்டிப்பில் (ஆதிபர்வம் 41 வது பகுதி)

பார்க்க கடைசி பத்தி:
சோர்வாலும், பசியின் கொடுமையாலும், அந்த நோன்புகளைக் கடைப்பிடிக்கும் இளவரசன் எனது நோன்பைப் பற்றி அறியாததால் இந்தக் காரியத்தைச் செய்தான். ஏன் இப்படி உனது குழந்தைத்தனத்தால் நீதியற்ற ஒரு காரியத்தைச் செய்தாய்? ஓ மகனே, எக்காரணத்தைக் கொண்டும் அந்த மன்னன் சாபத்திற்குத் தகுந்தவன் அல்ல", என்றார்.

தன் மீது செத்த பாம்பினை எடுத்து போட்ட மன்னன் பரிக்‌ஷித்தை இளவரசன் என்று பேசா நோன்பு மேற்கொண்ட முனிவர் கூறுகிறாரே அது சரிதானா என்பதனை சற்று விளக்கவும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சாபம் பெற்ற பரிக்‌ஷித் மன்னனா? இளவரசனா?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களுக்கு,

இங்கு, இளமையான மன்னனை இளவரசன் என்றும் அழைக்கும் போக்கு இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.

அப்படியே உங்கள் கேள்வியின் ஊடே பேசோ நோன்பு இருந்த முனிவர் தனது மகனிடம் மட்டும் எப்படிப் பேசினார் என்ற கேள்வியும் தொக்கி நிற்பதாக அறிகிறேன்.

பேசா நோன்பு இருப்பது காலையிலிருந்து மாலை வரை இருந்திருக்கலாம். மகன் குரு குலத்தில் இருந்து வரும் நேரம் அவரது நோன்பு முடிந்திருக்கலாம் என்று நம்புகிறேன்.

கேள்வி கேட்டமைக்கு நன்றி.

அன்புடன்,
செ.அருட்செல்வப் பேரரசன்