எப்படி நான்முகன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தார்?

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

எப்படி நான்முகன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தார்?

ஜெயவேலன்
அய்யா திரு.அருட்செல்வ பேரரசரே,

213. திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள்
- பகுதியில் நான்கு திசைகளையும் நோக்கும், நான்கு முகம் கொண்ட, நான்முகன் பிரம்மன் எவ்விதம் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பான் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

மேலும் பார்க்க:
http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section213.html

நாரதர் தொடர்ந்தார், "அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள். அந்த சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார்.

ஜெயவேலன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: எப்படி நான்முகன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தார்?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களுக்கு,

நான்முகனின் மார்பு எந்த திசையை நோக்கி இருந்ததோ அந்தத் திசை கிழக்கு என்பதை அறிக. மார்பு இருக்கும் திசையில் இருக்கும் முகம் தானே முதல் முகமாக இருக்க முடியும்!

ஆகையால் பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார் என்றால் மார்பு இருக்கும் பக்கத்திலிருக்கும் முகம் கிழக்கை நோக்கியிருந்தது என்று பொருள் கொள்க!

நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்