செந்தமிழ்த் தேன் ஊற்று

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

செந்தமிழ்த் தேன் ஊற்று

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

திரு.மாரியப்பன் அவர்களின் ஸ்ரீமஹாபாரத பர்வங்கள் இணையத் தளத்தைக் கண்டேன்.
அதில் எடுத்துக் காட்டுக்காக தட்டச்சு செய்யப் பட்டிருந்த ம.வீ.இராமானுசச்சாரியாரின் மாபாரதத்தின் ஆதி பர்வம் அறுபத்திரண்டாம் அத்தியாயத்தைப் படித்தேன்.

அதனைத் தங்களின் மொழி பெயர்ப்போடு ஒப்பிட்டும் பார்த்தேன். அப்பொழுதுதான் தங்களின் மொழி பெயர்ப்பின் அருமை தெள்ளென விளங்கியது.

நெடும்பாதைக்கு நடு நடுவே தடைக்கற்கள் குறுக்கிடுவது போல் நற்றமிழ் மொழிப் பெயர்ப்புக்கு நடுவே கிரந்தச் சொற்கள் தடை கற்களாய் விளங்குகின்றன. ஆனால், தங்களின் மொழிப் பெயர்ப்பைப் படிக்கும் பொழுதோ தமிழ் அமிழ்தம் மடை திறந்த பெருங்கடல் போல் செவியினில் பாய்ந்து சொல்லொணா இன்பத்தை வாரித் தருகின்றது.

தாங்கள் சுவடுகளைத் தேடி பதிவில், முன்பே ஒரு மொழி பெயர்ப்பு தமிழில் இருக்கும்பொழுது இன்னொரு மொழி பெயர்ப்பு எதற்கு என விடுத்து விட எண்ணியதாகவும், அதற்கு திரு.ஜெயவேலன் அவர்கள் சமாதானம் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

தங்களுக்கு ஐயமே வேண்டாம். மணலூர் வீரவல்லி இராமானுசச்சாரியார் பெயர்த்த மொழி பெயர்ப்புக்கு என்ன மதிப்பு உண்டோ? அதே மதிப்பு தங்களின் மொழி பெயர்ப்புக்கும் உண்டு.
இராமானுசச்சாரியார் மாபாரதத்தைத் தமிழ்ப் படுத்தியவரானால் தாங்கள் அதனைச் செழுமைப் படுத்தியவராவீர்கள்.

குறுகிய காலத்துக்குள் நாற்பத்தெட்டு பகுதிகளை மொழி பெயர்த்து விட்டீர்கள்! வாழ்த்துகள்.
இதே போல் முழு பாரதத்தையும் செவ்வனே மொழி பெயர்க்க இறைவன் அருள் புரியட்டும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: செந்தமிழ்த் தேன் ஊற்று

Arul Selva Perarasan
Administrator
நண்பர் திரு. தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு

நாம் செய்யும் மொழிபெயர்ப்பைப் பாராட்டியமைக்கு நன்றி.

மேலும், நாம் மொழிபெயர்க்கும் மஹாபாரதத்தில் இல்லாத வேறு பாட கதைகள் அனைத்தையும் ம.வீ.ரா. பதிப்பு மொழிபெயர்த்திருக்கிறது. ஆகையால், ம.வீ.ரா. பதிப்பின் தேவை {குறிப்பாக ம.வீ.ரா. ஹிடிம்பை கதை மிகப் பெரியதாக இருக்கிறது}.

நாம் மொழி பெயர்க்கும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில The Mahabharata மூலத்திற்கு மிக நெருக்கமானது என்ற பெயர்பெற்றது. ஆகையால் இடைச்செருகல்கள் என்று அறிஞர்களால் கருதப்பட்ட கதைகள் இதில் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ம.வீ.ரா. பதிப்பில் அவற்றை அப்படியே நீக்காமல் தந்திருக்கிறார்கள்.

விரைவாக நாற்பத்தெட்டு பகுதிகள் மொழிபெயர்த்தது, திரு.ஜெயவேலன் அவர்கள் தினமும் தரும் உற்சாகத்தால்தான்.

நன்றி

அன்புடன்

செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: செந்தமிழ்த் தேன் ஊற்று

Dhanvish Manickam
In reply to this post by தமிழ் வள்ளுவர்
திரு. தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு,

தங்களுடைய கீழ்க்கண்ட இப்பதிவினைப் படித்தேன்:

/* திரு.மாரியப்பன் அவர்களின் ஸ்ரீமஹாபாரத பர்வங்கள் இணையத் தளத்தைக் கண்டேன்.  அதில் எடுத்துக் காட்டுக்காக தட்டச்சு செய்யப் பட்டிருந்த ம.வீ.இராமானுசச்சாரியாரின் மாபாரதத்தின் ஆதி பர்வம் அறுபத்திரண்டாம் அத்தியாயத்தைப் படித்தேன்.  */

தாங்கள் படித்த எடுத்துக்காட்டு ஆதி பர்வம் அறுபத்திரண்டாம் அத்தியாயம் எந்த இணையத் தளத்தில் படித்தீர்கள் என்று கூறமுடியா? ம.வீ.இராமானுசச்சாரியாரின் ஸ்ரீமஹாபாரத நூல் எவ்வாறு இருக்கும் என்று பார்க்க இது உதவியாக இருக்கும். நன்றி!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: செந்தமிழ்த் தேன் ஊற்று

தமிழ் வள்ளுவர்
கீழ் கண்ட பதிவில் நீங்கள் அதனைப் படிக்கலாம்.

http://srimahabharathaparvangal.blogspot.com/2013/10/blog-post_6384.html
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: செந்தமிழ்த் தேன் ஊற்று

Kannan
மேற்கண்ட பதிவுக்குச் சரியான முழு மஹாபாரதப் பதிவு கீழ்க்கண்ட இந்த லிங்கில் இருக்கிறது

http://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section82.html