கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

classic Classic list List threaded Threaded
8 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்,

திருதராஷ்டிரனின் மனதைக் குழப்ப கணிகர் கூறும் யாவும் இராஜ நீதியில் அடங்குபவையே.

ஆனால் அவை ஏற்புடையதா?

பதவியே அரசனின் குறி என்பது சரியா?

அப்படி சரியில்லையென்றால், அக்காலத்தில் முனிவர்கள் பிழையான கருத்துகளையா இராஜ நீதியாக வகுத்தனர்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

Rahul Kalyanaraman
கணிகனின் அறிவுரைகள் குறித்து விவாதம் துவக்கியதற்கு மகிழ்ச்சி. கணிகன் செய்த அறிவுரையை இப்போது பார்த்தால் அது ஏற்புடையது போல் தோன்றும். ஆனால் மகாபாரதத்தின் பிற்பகுதியில் சாந்தி பர்வத்தில் அம்புப்படுக்கையில் பீஷ்மர் தர்மபுத்திரருக்குச் செய்த ராஜ நீதி உபதேசங்களை தெரிந்து கொண்ட பிறகு கணிகனின் அறிவுரை கொஞ்சமும் ஈவு இரக்கமற்றது என்று புரிந்து கொள்ளலாம். கணிகனைப் போலவே பீஷ்மர் சில அறிவுரைகளைக் கூறினாலும் அவை ”ஆபத்துக் காலத்தில் ஒரு அரசன் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள்” என்று தெளிவு படுத்துகிறார்.
                 
மேலும் மகாபாரதத்தை வியாசரின் சிஷ்யர் வைசம்பாயனர் கூற கேட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களின் கொள்ளுப் பேரனான ஜனமேஜயன் “கணிகரின் இந்தக் கொடுமையான அறிவுரைகளைக் கேட்ட பிறகு திருதராஷ்டிரன் என்ன செய்தான்?” என்று கேட்டான். அதாவது கணிகனின் அறிவுரை தீய அறிவுரை என்று முதலிலேயே ஜனமேஜயன் கூறிவிடுகிறான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

Arul Selva Perarasan
Administrator
நன்றி ராகுல். நல்ல விளக்கம்

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

ஜெயவேலன்
In reply to this post by Rahul Kalyanaraman
ஐய்யா ராகுல் அவர்களின் விளக்கம் மிக அருமை.

கணிகர் நீதியைத்தான் தற்போது உள்ள பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்கின்றனர், என்பது வருத்திற்குரிய விசயமேயாகும்.

கூர்ந்து நோக்கினால் அமெரிக்கா போன்ற பெரிய நாட்டின் வெளியுறவுக் கொள்கை அனைத்தும் கணிகர் நீதியைப் பின்பற்றுவதாகத் தோன்றும்.

கணிகர் நீதியைப் படித்தவர்க்கே அதனைப் புரிந்து கொள்ள முடியும்.
பார்க்க.
கணிகர் நீதி - ஆதிபர்வம் பகுதி 142 அ
கணிகர் நீதி - ஆதிபர்வம் பகுதி 142 ஆ
கணிகர் நீதி - ஆதிபர்வம் பகுதி 142 இ
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

ஆர்.மாணிக்கவேல்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

திரு.ஜெயவேலன்அய்யா நன்றி!  சரியாக சொன்னீர்கள். வழி வழியாக வரும் நம் பாரத பண்பாடு, அறம், பொருள், இன்பம் வீடு  என்று மனித வாழ்வு நிலையை விளக்குகிறது.

அறமே நமது வழியாகவும், வாழ்க்கையாகவும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். அதனால் தான் தொடர் அறாமல் அவதாரங்கள் இங்கு பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அறம் வேண்டாம் பொருள் போதும் என்று இன்றைய நிலை இருக்கிறது. அதனால்தான் மனம் சம்பந்தப் பட்ட மதம், இன்று பணம் சம்பந்தப்பட்டு மதமாற்ற மதமாகிவிட்டது.  

கர்ம இந்திரியங்கள்: மெய், வாய், கை, குறி.குதம் இதை திருப்திப் படுத்த பொருள் போதும் அதுக்கு கனிகர் நீதி போதும். மனம் கூட தேவை இல்லை. உலக மயமாக்கல் கொள்கைகள்   எல்லாம் இதற்குள் இருக்கு.

ஞான இந்திரியங்கள்: மெய், வாய், செவி,கண், நாசி இது திருப்தி பட பணம் மட்டும் போதாது, மனம் வேண்டும், மனம் மட்டும்  போதாது நீதி வேண்டும் அதற்க்கு கனிகர் நீதி மட்டும் போதாது. விதுர நீதி வேண்டும், விதுரநீதியும் தாண்டி கீதையும் வேண்டும். கர்ம இந்திரியங்கள் போதும் என்று நினைக்கும் உலகுக்கு இது புரியுமா?

பொருள் மரம்போல, பெருசுதான். அறம் விதைபோல ரொம்ப சிறுசு.

மழை இல்லாமல் மரம் அழியலாம், விதை அழிவதில்லை. பல வருடங்கள் கடந்தும் ஒரு அவதார மழை வரும் போது மீண்டும் விதை முளைத்துவிடும்.  அவதார மழை பாரத மண்ணில் ஓய்வதில்லை. பாரதத் தாயே உனது திருவடிக்கு அன்பு வணக்கம்.

நன்றி, வாழ்க வளமுடன்  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

Arul Selva Perarasan
Administrator

அருமை நண்பரே! ஆனால் நீதிகளில் பீஷ்ம நீதியை விட்டுவிட்டீர்கள். பீஷ்ம நீதி கீதைக்கு நிகரானது. கீதை ஆன்மா குறித்து பேசுகிறது. பீஷ்மர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசுகிறார்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2013/12/28 ஆர்.மாணிக்கவேல் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>
ஓம் ஸ்ரீ முருகன் துணை

திரு.ஜெயவேலன்அய்யா நன்றி!  சரியாக சொன்னீர்கள். வழி வழியாக வரும் நம் பாரத பண்பாடு, அறம், பொருள், இன்பம் வீடு  என்று மனித வாழ்வு நிலையை விளக்குகிறது.

அறமே நமது வழியாகவும், வாழ்க்கையாகவும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். அதனால் தான் தொடர் அறாமல் அவதாரங்கள் இங்கு பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அறம் வேண்டாம் பொருள் போதும் என்று இன்றைய நிலை இருக்கிறது. அதனால்தான் மனம் சம்பந்தப் பட்ட மதம், இன்று பணம் சம்பந்தப்பட்டு மதமாற்ற மதமாகிவிட்டது.  

கர்ம இந்திரியங்கள்: மெய், வாய், கை, குறி.குதம் இதை திருப்திப் படுத்த பொருள் போதும் அதுக்கு கனிகர் நீதி போதும். மனம் கூட தேவை இல்லை. உலக மயமாக்கல் கொள்கைகள்   எல்லாம் இதற்குள் இருக்கு.

ஞான இந்திரியங்கள்: மெய், வாய், செவி,கண், நாசி இது திருப்தி பட பணம் மட்டும் போதாது, மனம் வேண்டும், மனம் மட்டும்  போதாது நீதி வேண்டும் அதற்க்கு கனிகர் நீதி மட்டும் போதாது. விதுர நீதி வேண்டும், விதுரநீதியும் தாண்டி கீதையும் வேண்டும். கர்ம இந்திரியங்கள் போதும் என்று நினைக்கும் உலகுக்கு இது புரியுமா?

பொருள் மரம்போல, பெருசுதான். அறம் விதைபோல ரொம்ப சிறுசு.

மழை இல்லாமல் மரம் அழியலாம், விதை அழிவதில்லை. பல வருடங்கள் கடந்தும் ஒரு அவதார மழை வரும் போது மீண்டும் விதை முளைத்துவிடும்.  அவதார மழை பாரத மண்ணில் ஓய்வதில்லை. பாரதத் தாயே உனது திருவடிக்கு அன்பு வணக்கம்.

நன்றி, வாழ்க வளமுடன்  If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp114p177.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

ஆர்.மாணிக்கவேல்
ஓம் ஸ்ரீ முருகன் துணை
 
வணக்கம்  நண்பரே! சரியாக சொன்னீர்கள், அரச நீதியையும், வாழ்வியல் உண்மையையும் விளக்கும் பீஷ்ம நீதி நினைவில்  நிருத்தவேண்டிய அற்புதம்.பீஷ்ம நீதி என்னும் படிகளின் வழியாக செல்லும் நெஞ்சங்கள் கீதை என்னும் ஆன்ம சிகரத்தை எளிதில் அடைந்து விடமுடியும், இறையருளும் வழிகாட்டும்.  நினைவு படுத்தியமைக்கு நன்றி.  

வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கணிகரின் இராஜ நீதி ஏற்புடையதா?

வெண்ணிலா
விளக்கம் அருமை!!!

மூத்தவர்கள் அனைவரும் கணிகர் நீதியை நாடு, அரசியல் மற்றும் உலகத்தோடு ஒப்பிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டீர்கள். ஆதலால், நான் இங்கு நாடு, அரசியல் குறித்து பேசவில்லை. அதில் எனக்கு அனுபவமுமில்லை.

கணிகர் நீதியை நான் எனது வாழ்வில் சந்தித்த ஒருசில மனிதர்களுடன் ஒப்பிட்டு பேச நினைக்கின்றேன்.

நபர் 1: "இவர் எனக்கு வேண்டியவர், இவர் எனக்கு வேண்டாதவர்" என்று சிறுதும் பார்க்க மாட்டார்.  எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்க்கு உதவிகள் பல செய்வார். எது சரியோ அதை சரியாகச் செய்வார். நல்லவர்களை தீயவர்களுக்கு பிடிக்காது. அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. ஆனாலும் அந்த தீயவர்கள், இவரை மனதார புகழவே செய்வர். காரணம் இவர் உயர்ந்த நற்பண்புகள் உடையவர்.

நபர் 2: கணிகர் நீதியை படிக்கும்போது இவர் நினைவுக்கு வந்தார். சொல்வதற்கு எதுவுமில்லை. அப்படியே கணிகர் நீதியை பின்பற்றுபவர். மற்றவர் இவரை, எதிரிலே புகழ்ந்தாலும் பின்னே திட்டி தீர்த்துவிடுவர்.

சில சமையங்களில் நபர் 2 போல இருந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்கமுடியும் என்று தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி உண்மையானவர்களுக்கும் நன்மையை செய்பவர்களுக்கும் நற்பெயரே கிட்டும்.

கணிகரின் நீதி எமனுலகையே அடையச்செய்யும்.