கிருஷ்ணனர்=வியாசர்?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கிருஷ்ணனர்=வியாசர்?

செல்வராஜ்
பகுதி 1 அ
சௌதி, "பரீக்ஷித்தின் மகனான அரசமுனி *ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் (நாகயாகத்தில்) கிருஷ்ண துவைபாயணரால் {வியாசரால்} இயற்றப்பட்ட வித்தியாசமான, புனிதமான,.......

கிருஷ்ண துவைபாயணரால் = வியாசர்

"பெரும் முனிவர் துவைபாயணரால் {வியாசரால்} முதலில் இயற்றப்பட்டு, அதன்பிறகு, தேவர்களாலும், பிரம்மமுனிகளாலும் பெரிதும் மதித்து ரசிக்கப்பட்டு,

துவைபாயணர் = வியாசர்

பகுதி 55
தனது வேள்வியில் தானே தலைமைப் புரோகிதராக இருந்த சத்தியவதியின் மைந்தன் கிருஷ்ணன் (வியாசர்) நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது.
பகுதி 60
மன்னன், முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ணருக்கு (வியாசர்) கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், ஆர்கியாவும், பசுக்களும் கொடுத்தான்.

கிருஷ்ணன் = வியாசர்

பகுதி 2 இ
துவைபாயணரும், கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்கு சாபம் கொடுக்கின்றனர்.

துவைபாயணர் <> கிருஷ்ணர்?


1) வியாசர் =  துவைபாயணர் = கிருஷ்ண துவைபாயணர் = கிருஷ்ணர் ---என்பது சரிதானா?

2) சரிதான் என்றால் பகுதி 2 இ யில் துவைபாயணரும், கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்கு சாபம் கொடுக்கின்றனர் என்று வருகிறதே, அது எப்படி?

நான் குறிப்பெடுக்கும் பொழுது மிகவும் குலம்புகிறேன்.
விளக்கம் தாருங்கள் நண்பர்களே....

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணனர்=வியாசர்?

ஜெயவேலன்
திரு.செல்வராஜ் அவர்களே,

இப்பொழுது சென்று ஆதிபர்வம் பகுதி 60யை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவாகப் புரியும் படி திரு.அருட்செல்வபேரரசன் அவர்கள் {அடைப்புக்குறிக்குள்} பாத்திரப் படைப்பினை வெளிக்காட்டியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை பகுதி 60 படிக்க நேர்ந்தமைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் திரு.செல்வராஜ் அவர்களே இனிவரும் நாட்களில், தங்களின் பதிவுகளை இடும்போது தங்களின் கைபேசி எண்ணையும் பதிய மறக்க வேண்டாம்.

நன்றிகளுடன்,

ஜெயவேலன்
9551246464
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணனர்=வியாசர்?

Rahul Kalyanaraman
In reply to this post by செல்வராஜ்
மதிப்பிற்குரிய திரு. செல்வராஜ் ஐயா அவர்களே!

தங்களின் ஐயம் சரியே! வியாசரும் கிருஷ்ணரும் ஒருவரா என்று கேட்டுள்ளீர்கள். இதற்கு பதிலாக ஒரு ச்லோகம் (வடமொழிப் பாடல்) உள்ளது.

வ்யாசாய விஷ்ணுரூபாய வ்யாசரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரம்மநிதயே வாசிஷ்டாய நமோ நமஹ

இதன் பொருள் யாதெனில் ”திருமாலின் (விஷ்ணு) வடிவம் கொண்ட வியாசருக்கும் வியாசரின் வடிவம் கொண்ட திருமாலுக்கும் வணக்கம். வசிஷ்ட முனிவரின் கொள்ளுப் பேரனான அப்படிப்பட்ட வியாசரை வணங்குகிறேன்” என்பதே ஆகும்.

இந்த ச்லோகத்தின் மையப்பொருள் “வியாசரே விஷ்ணு விஷ்ணுவே வியாசர்” என்பதாகும்.