கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

செல்வராஜ்
பகுதி 1 அ
சௌதி, "பரீக்ஷித்தின் மகனான அரசமுனி *ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் (நாகயாகத்தில்) கிருஷ்ண துவைபாயணரால் {வியாசரால்} இயற்றப்பட்ட வித்தியாசமான, புனிதமான,.......

கிருஷ்ண துவைபாயணரால் = வியாசர்

"பெரும் முனிவர் துவைபாயணரால் {வியாசரால்} முதலில் இயற்றப்பட்டு, அதன்பிறகு, தேவர்களாலும், பிரம்மமுனிகளாலும் பெரிதும் மதித்து ரசிக்கப்பட்டு,

துவைபாயணர் = வியாசர்

பகுதி 55
தனது வேள்வியில் தானே தலைமைப் புரோகிதராக இருந்த சத்தியவதியின் மைந்தன் கிருஷ்ணன் (வியாசர்) நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது.
பகுதி 60
மன்னன், முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ணருக்கு (வியாசர்) கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், ஆர்கியாவும், பசுக்களும் கொடுத்தான்.

கிருஷ்ணன் = வியாசர்

பகுதி 2 இ
துவைபாயணரும், கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்கு சாபம் கொடுக்கின்றனர்.

துவைபாயணர் <> கிருஷ்ணர்?


1) வியாசர் =  துவைபாயணர் = கிருஷ்ண துவைபாயணர் = கிருஷ்ணர் ---என்பது சரிதானா?

2) சரிதான் என்றால் பகுதி 2 இ யில் துவைபாயணரும், கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்கு சாபம் கொடுக்கின்றனர் என்று வருகிறதே, அது எப்படி?

நான் குறிப்பெடுக்கும் பொழுது மிகவும் குலம்புகிறேன்.
விளக்கம் தாருங்கள் நண்பர்களே....

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்.

வியாசர் என்பது ஒரு பதவியின் பெயரே.

இதுவரை அப்பதவியை 28 நபர்கள் வகித்துள்ளனர்.

கடைசியாக துவாபார யுகத்தில் அப்பதவியை வகித்தவர் பெயர் கிருஷ்ண துவைபாயணர்.

இவரே மாபாரத்ததை எழுதியவர். ஆக அவரை மாபாரத்ததில் குறிப்பிடும்பொழுது வியாசர்,

கிருஷ்ணர், துவைபாயணர் , கிருஷ்ண துவைபாயணர் என பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.

அதே வேளையில் கண்ணனையும் கிருஷ்ணன் என்ற பெயர் குறிக்கும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

Jayavelan
Administrator
திரு.தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு
1.கிருஷ்ண துவைபாயணருக்கும் {வியாசருக்கும்},
2.கிருஷ்ணருக்குமான
சரியான விளக்கமளித்து திரு.அருட்செல்வபேரரசரின் வேலை பளுவை குறைத்தமைக்கு மீண்டும் நன்றிகள் கூறிக் கொள்கிறேன்.இனிவரும் தங்களின் பதிவுகளுக்குக் கீழ் தங்களின் கைபேசி எண்ணை போடுமாறு வேண்டுகிறேன்.

2.கிருஷ்ணன் -என்பதற்கு கருப்பானவன் என்றுப் பொருள்.
1.கிருஷ்ண துவைபாயணர் {வியாசர்}- கருப்பானவன் மற்றும் தீவில் தோன்றியவன் {துவைபாயணன் - தீவில் தோன்றியவன் என்றுப் பொருள்.

நட்புடன்,
ஜெயவேலன்
9551246464
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்.

எனது தொலைப்பேசி எண்ணை அளிக்குமாறு கூறியிருந்தீர்கள்.

நான் வசிப்பதோ மலேசியாவில், என்னை நீங்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள

செலவு அளவுக்கதிகமாக ஆகும்.

ஆதலால் எனது மின்னஞ்சல் முகவரி இதோ.

tamilvalluvar@gmail.com
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?

செல்வராஜ்
In reply to this post by Jayavelan
விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் பல!!!!

எனக்கு புராணங்களைப் பற்றிய அடிப்படை ஞானம் (Basic knowledge) சற்று குறைவு அதனால் எனது கேள்விகள் அற்பதனமாக இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்...